"ஆன் பிராங்க்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

457 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
added book info of tamil version (edited with ProveIt)
சி (Robot: af:Anne Frank is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்)
(added book info of tamil version (edited with ProveIt))
ஆன் பிராங்கின் தந்தையார் ஓட்டோ பிராங்க். இவர் ஒரு வணிகராக இருந்தார். ஆன்னுக்கு மர்காட் என்று ஒரு அக்கா இருந்தார். இவர்கள் மறைவிடத்தில் வாழ்ந்த போது இவர்களுடன் இன்னொரு யூதக்குடும்பமும் வசித்து வந்தது. பின்னாளில் மேலும் ஒரு பல் மருத்துவரான யூதரும் வந்து சேர்ந்தார். மொத்தம் இந்த எட்டு பேரும் ஏறத்தாழ இரண்டாண்டுகள் இவ்வாறு மறைந்து வாழ்ந்தனர்.
 
பின்னர் யாரோ ஒருவரால் காட்டிக்கொடுக்கப்பட்டு இவர்கள் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டனர். வதைமுகாமில் ஆன்பிராங்க், அவரது அக்கா, அம்மா ஆகியோர் இறந்து விட்டனர். பின்னர் நேசநாடுகள் செர்மனியை வெற்றிகொள்ளத்துவங்கிய நேரத்தில் ஆன்னின் அப்பா இருந்த வதைமுகாமினை செர்மானியப் படைகள் கைவிட்டுச் சென்றன. இதனால் ஓட்டோ பிராங்க் பிழைத்தார். இவருக்கு தனது மகள் எழுதிய நாட்குறிப்பு கிடைத்தது. இதனை இவர் தனது நட்புவட்டாரங்களில் தனது மகளின் நினைவாக சில படிகள் எடுத்து படிக்கக் கொடுத்தார். பின்னர் இது நூலாகவும் வெளியிடப்பட்டது. பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.<ref name="தமிழ் மொழிபெயர்ப்பு">{{cite book | title=ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள் | publisher=எதிர் வெளியீடு | author=ஆனி ஃபிராங்க் | year=2011 | AISN=B00H6ZV7NG | Translation by=உஷாதரன்}}</ref>
 
ஆன் பிராங்க் மறைந்து வாழ்ந்த கட்டிடம் இப்போது அவரது நினைவிடமாக மாற்றப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1636902" இருந்து மீள்விக்கப்பட்டது