"கந்தையா வைத்தியநாதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,321 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
அன்றைய ஆளும் [[ஐக்கிய தேசியக் கட்சி]] [[சிங்களம் மட்டும்]] தீர்மானத்தை 1953 இல் களனி மாநாட்டில் நிறைவேற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக வைத்தியநாதன் அமைச்சுப் பதவிகளைத் துறந்தார். தனது பதவியை துறந்தபோது சேர் பட்டத்தையும் துறந்தார்.
 
இறுதிக் காலத்தில் [[திருக்கேதீச்சரம்]] கோயில் புனருத்தாரண சபை தலைவராக இருந்து செயல்பட்டார்.<ref name=boyle>{{cite news|last=Boyle|first=Richard|title=He went against the flow|url=http://www.sundaytimes.lk/990502/plus7.html|newspaper=சண்டே டைம்சு|date=2 மே 1999}}</ref> திருக்கேதீச்சரம் கோயில் புனருத்தாரண வேலைகளை அவரே நேரடியாக கவனித்தார். இதற்காக அவர் கோயிலுக்கு அருகாமையிலேயே "கொட்டில்" என ஒரு சிறிய வீடு கட்டி அங்கேயே பெரும்பாலும் தங்கியிருந்தார்.
 
நாட்டில் உயர்ந்த பதவி வகித்தவராக இருந்தபோதும் கோயிலில் சாதாரணமாக ஒரு வேட்டியுடனும் துண்டுடனும் தொண்டரோடு தொண்டராக பணி செய்வார்.
 
கோவிலைப் புனரமைத்ததுடன் அதன் அருகாமையில் ஒரு சமஸ்கிருத பாடசாலை ஆரம்பித்து அந்தண சிறுவர்கள் இலவசமாக சமஸ்கிருதம், வேதம் மற்றும் ஆகமங்கள் பயில ஏற்பாடு செய்தார். இதற்காக தமிழகத்திலிருந்து சுப்பிரமணிய பட்டர் என்ற சமஸ்கிருத பண்டிதரை குருவாக நியமனம் செய்தார்.
 
திருக்கேதீச்சர பணிகள் நடைபெற்ற காலப்பகுதியிலேயே (1950களின் நடுப்பகுதியில்) தனது சொந்த ஊரான கோப்பாயில் இருந்த [[கோப்பாய் வீரபத்திர சுவாமி ஆலயம்|வீரபத்திர சுவாமி கோயிலையும்]] ஊர் மக்களுடன் சேர்ந்து புனருத்தாரணம் செய்து உதவினார். அக்கோவிலில் 1955 ஆம் ஆண்டு தை மாதம் கும்பாபிடேகம் நடைபெற்றது.
 
==குடும்பம்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1636938" இருந்து மீள்விக்கப்பட்டது