இதழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
 
குறிப்பிட்ட கால அளவைக் கொண்டு வெளியாகும் இதழ்கள் பருவ இதழ்கள் எனப்படுகின்றன. வாரம், மாதமிருமுறை, மாதம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு எனும் கால அளவைக் கொண்டு வெளியாகும் இதழ்கள் அனைத்தும் பருவ இதழ்களாகும். இவை வெளியாகும் கால அளவைப் பொறுத்து வார இதழ், மாதமிருமுறை இதழ், மாத இதழ், காலாண்டு இதழ், அரையாண்டு இதழ், ஆண்டு இதழ் என அழைக்கப்படுகின்றன.
 
== விமர்சனங்கள் ==
குறுகிய வட்டத்துக்குள் குறைவான வாசகர்களைக் கொண்டு [[கையெழுத்து]]ப் பிரதியாகவோ, குறைந்த அளவிலான அச்சுப்பிரதியாகவோ அந்த இதழ் வெளிக்கொண்டு வருபவரது கருத்துக்களையும், அவருடைய கருத்துக்களைச் சார்ந்துள்ள கருத்துக்களையும் அதிகமாகக் கொண்டு வெளியாகி வருவது என்கிற ஒரு வரையறைக்குள்தான் இந்த இதழ்கள் இருக்கின்றன. இதனால் இந்த இதழ்கள் அச்சிலும், படைப்பிலும் தரம் சற்று குறைவாகத்தான் இருக்கின்றன என்கிற கருத்து பரவலாக இருக்கிறது.
 
பெரிய இதழ்களில் கிடைக்காத நல்ல மதிப்பு மிக்க படைப்புகள் மட்டுமே இடம்பெறக் கூடிய ஒரு சில சிறப்பான இதழ்களும் உண்டு. இந்த இதழ்கள் தரம் மிக்க படைப்புகளை வெளியிட்டு இலக்கியச் சூழலில் ஒரு புதிய மாற்றத்தைக் கூட கொண்டு வந்தது. இதன் மூலம் இதழ்களில் வெளியான பல படைப்புகள் மிகப்பெரும் பாராட்டுக்கும், விமர்சனத்துக்கும் கொண்டு வரப்பட்டன. இந்த இதழ்களுக்காகத் தனியாக வாசகர்கள் உருவானதுடன் வாசகர் அமைப்புகளும் கூட துவங்கப்பட்டது. இந்த இதழ்களில் அதிகமான இதழ்கள் வணிக நோக்கமின்றி வெளியிடப்படுவதாலும், தரமில்லாதிருப்பதாலும் பொருளாதாரப் பற்றாக்குறை காரணமாகத் தொடர்ந்து வெளியிட முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இதனால் இந்த இதழ்கள் துவங்கப்பட்ட சில மாதங்களிலோ அல்லது சில ஆண்டுகளிலோ நிறுத்தப்பட்டு விடுகின்றன. சில இதழ்கள் மட்டும் தங்கள் வாழ்க்கையை நீடிக்கத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றன.
 
== உள்ளடக்கப் பகுப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/இதழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது