ஐக்கிய நாடுகள் அவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 40:
* [[அனைத்துலக நீதிமன்றம்]]
 
1994ம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அவையின் கடைசிப் பொறுப்பாட்சிப் பகுதியான [[பலாவு|பலோ]] (Palau) சுதந்திரம் பெற்ற பின்னர் ஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம் செயலற்றுப் போனது. இப்போது ஏனைய ஐந்து அமைப்புக்கள் மட்டுமே உள்ளன.<ref>{{cite web| url=http://www.un.org/News/Press/docs/2005/org1436.doc.htm|title=Membership of Principal United Nations Organs in 2005|publisher=United Nations|date=15 March 2005}}</ref> இந்த ஐந்து அமைப்புக்களுள் நான்கு நியூ யார்க் நகரில் உள்ள அனைத்துலக ஆட்சிப்பகுதியுள் அமைந்திருக்கும் ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலகத்தில் இயங்குகின்றன.<ref>{{cite web|url=http://visit.un.org/wcm/content/|title=United Nations Visitors Centre|publisher=United Nations|year=2011|accessdate=25 August 2011}}</ref> அனைத்துலக நீதிமன்றம் [[ஹேக்]] நகரில் உள்ளது. மேற்குறிப்பிட்டவை தவிர்ந்த மேலும் சில முக்கியமான அமைப்புக்கள் செனீவா,<ref>{{cite web|url=http://www.unog.ch/ |title=The United Nations in the Heart of Europe |publisher=Unog.ch |date= |accessdate=4 November 2011}}</ref> வியன்னா,<ref>{{cite web|url=http://www.unvienna.org/unov/ |title=United Nations Office in Vienna |publisher=Unvienna.org |date=1 January 1980 |accessdate=4 November 2011}}</ref> நைரோபி<ref>{{cite web|url=http://www.unon.org/ |title=//Welcome to UNON &#124; &#124; The United Nations Office at Nairobi // |publisher=Unon.org |date= |accessdate=4 November 2011}}</ref> போன்ற நகரங்களில் இருந்து இயங்கி வருகின்றன. ஐக்கிய நாடுகள் அவையுடன் தொடர்புடைய மேலும் பல அமைப்புக்கள் உலகின் பல்வேறு இடங்களில் உள்ளன.
 
அரசுகளுக்கு இடையிலான கூட்டங்களிலும், ஆவணங்களிலும் ஆறு மொழிகள் அலுவல் மொழிகளாகப் பயன்பட்டு வருகின்றன. இவை, [[அரபு மொழி|அரபி]], [[சீன மொழி|சீனம்]], [[ஆங்கிலம்]], [[பிரெஞ்சு]], [[உருசிய மொழி|உருசியம்]], [[எசுப்பானிய மொழி|எசுப்பானியம்]] என்பன.<ref name=langs>{{cite web |url=http://www.un.org/en/ga/about/ropga/lang.shtml |title=General Assembly of the United Nations – Rules of Procedure |publisher=UN Department for General Assembly |accessdate=15 December 2010}}</ref> செயலக வேலைகளுக்கு ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரண்டு மொழிகள் பயன்பட்டு வருகின்றன. ஆறு அலுவல் மொழிகளுள் நான்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பு நாடுகளின் தேசிய மொழிகள். இவற்றுக்குப் புறம்பாக, அதிகமான நாடுகளில் தேசிய மொழிகளாக உள்ள எசுப்பானியமும், அரபு மொழியும் அலுவல் மொழிகளாகச் சேர்க்கப்பட்டன. இவற்றுள் எசுப்பானியம் 20 நாடுகளிலும், அரபு மொழி 26 நாடுகளிலும் அலுவல் மொழிகளாக உள்ளன. இம்மொழிகளுள் ஐந்து ஐக்கிய நாடுகள் அவை நிறுவப்பட்ட போதே அலுவல் மொழிகளாகத் தெரிவு செய்யப்பட்டன. அரபு மொழி 1973 ஆம் ஆண்டில் அலுவல் மொழியாக்கப்பட்டது. ஐநாவின் கைநூலில் பிரித்தானிய ஆங்கிலமும், ஆக்சுபோர்டு எழுத்துக் கூட்டலுமே ஆங்கிலத்துக்கு நியமமாகச் சொல்லப்படுகின்றன. [[எளிமையாக்கிய சீனம்|எளிமையாக்கிய சீனமே]] சீன மொழிக்குரிய நியம எழுத்து முறையாகக் கொள்ளப்படுகின்றது. 1971 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்புரிமை [[சீனக் குடியரசு|சீனக் குடியரசிடம்]] இருந்து, [[மக்கள் சீனக் குடியரசு]]க்குக் கைமாறியபோது சீன எழுத்துமுறைக்கான நியமம் மரபுவழிச் சீன எழுத்து முறையில் இருந்து, எளிமையாக்கிய சீன எழுத்து முறைக்கு மாற்றப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_நாடுகள்_அவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது