"தாயக் கட்டை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,136 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
Saranbiotech20ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி (Saranbiotech20ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
== நான்முக தாயக் கட்டை ==
நான்முக தாயக் கட்டையின் மூன்று பக்கங்களில் (1), (2) மற்றும் (3) புள்ளிகள் இருக்கும். ஒரு பக்கத்தில் புள்ளி ஏதும் இருக்காது (0). இரு நான்முக தாயக் கட்டைகளை உருட்டினால் 1, 2, 3, 4, 5, 6, 12 (0,0) ஆகிய எண்கள் விழும். 1, 5, 6, 12 எண்களை சிறப்பாகக் கருதி மறுமுறை தாயக் கட்டையை உருட்டுவது வழக்கம். இவ்வெண்கள் அடுத்தடுத்து மாறி மாறி விழுந்து கொண்டிருந்தால் அதை விருத்தம் என அழைப்பதுண்டு.
 
===விளையாட்டு முறை===
 
பின்வரும் விதி முறைகள் நான்முக தாயக்கட்டையை கொண்டு 3x6 கட்டத்தில் விளையாடுவதற்கேற்றது:
 
*இரண்டு முதல் நான்கு ஆட்டக்காரர்கள் ஆட்டத்தை துவக்கவேண்டும்.
 
*ஒவ்வொரு ஆட்டக்காரரும் தனித்தனியான காய் வகைகளை தேர்வு செய்து கொள்ளவேண்டும். காய்கள் உருவத்திலோ அல்லது நிறத்திலோ வேறுபட்டு இருப்பது நல்லது.
 
*ஆட்டக்காரர்கள் ஒவ்வொருவரும் ஆறு காய்களைக் மனைப் பகுதியில் வைத்து ஆட்டத்தைத் துவக்க வேண்டும்.
 
*தாயம் இட்டபின்னேதான் மனையிலிருந்து முதற்கட்டத்தில் காய்களை வைக்க வேண்டும்.
 
*காய்களை நகர்த்தும் திசையை மேலுள்ள வரைப்படத்தில் காணலாம் (பச்சைக் கோடுகள்).
 
*ஒரு கட்டத்தில் ஒரு ஆட்டக்காரரின் காய்களே இருக்க முடியும். வேறு ஆட்டக்காரரின் காய்கள் அதே கட்டத்தில் நுழைந்தால் முதலிருந்த காய்கள் வெட்டப்பட்டு மனைக்கு திருப்பி அனுப்பப்படும்.
 
*சில கட்டங்களின் குறுக்கே இரு கோடுகள் இருக்கும். இவை சிறப்புக் கட்டங்கள். இக்கட்டங்களில் பல ஆட்டக்காரர்களின் காய்களும் சேர்ந்து இருக்க முடியும்.
 
*1, 5, 6, அல்லது 12 ஆகிய எண்களுக்கு மறு ஆட்டம் உண்டு. பிறர் காய்களை வெட்டினாலும் மறு ஆட்டம் உண்டு.
 
*காய்கள் ஒரு முறை சுற்றி வந்த பின் திரும்பவும் மனைக்குள் செல்லவேண்டும். ஆனால் வேறு ஆட்டக்காரரின் காய்களை முன்னமே வெட்டவில்லையென்றால் மனைக்குள் செல்ல முடியாது.
 
*அவ்விதம் மனைக்குள் செல்ல முடியாத காய்கள் கடைசிக் கட்டத்திலேயே தங்கி விடும். சிலர் விதிமுறையை மாற்றி காய்களை சுற்றி சுற்றி வரவைப்பதும் உண்டு.
 
*காய்கள் மனைப் பகுதியில் உள்ள கட்டத்துக்குள் ஏறிய பின் மீண்டும் மனைக்குள் புகுந்தால் அக்காய்களை "பழம்" என கருதி ஆட்டத்தில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்.
 
*முதலில் எந்த ஆட்டக்காரர் ஆறு காய்களையும் பழமாக மாற்றுகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவராவார்.
 
== அறுமுக தாயக் கட்டை ==
55,238

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1641099" இருந்து மீள்விக்கப்பட்டது