"வி. கே. மூர்த்தி (ஒளிப்பதிவாளர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,778 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
== பணி==
திரைப்படத்துறையில், மூர்த்தி ''மகாராணா பிரதாப்'' உடன் தனது பயணத்தை துவக்கினார். 1951 ஆம் ஆண்டில் வெளியான ’பாஜீ’ ( Baazi) இந்தித் திரைப்படத்தில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். இத் திரைப்படம் இயக்குநர் குரு தத் இயக்கிய முதல் திரைப்படமாகும். மூர்த்தியின் ஒளிப்பதிவின் சிறப்பைக் கண்ட குருதத், ’’ஜால்’’ (1952) என்ற தனது அடுத்த திரைப்படத்திற்கு மூர்த்தியையே ஒளிப்பதிவாளராகத் தேர்வு செய்தார். இத் திரைப்படத்திற்கு மூர்த்தி தலைமை ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார்.<ref>{{cite web |title= V. K. Murthy - Wizard of light |url= http://www.livemint.com/Leisure/zMk3GS2L9kMsek135ObjPO/VK-Murthy--Wizard-of-light.html |publisher= ''livemint.com'' |date= 7 April 2014 |accessdate= 7 April 2014}}</ref> அதிலிருந்து குருதத்தின் இறப்பு வரை (1964) அவரது அனைத்துத் திரைப்படங்களுக்கும் மூர்த்தியே ஒளிப்பதிவாளாக இருந்தார்.
 
1959 இல் குருதத்தின் இயக்கத்திலும் மூர்த்தியின் ஒளிப்பதிவிலும் உருவான ’’காகஸ் கி ஃபூல்’’ திரைப்படம் குருதத் இயக்கிய திரைப்படங்களிலேயே சிறந்த திரைப்படமாகக் கருதப்பட்டு பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றது. மேலும் ஒளிப்பதிவிலும் பல விருதுகள்பெற்று இந்தியத் திரைப்பட வரலாற்றில் சாதனை படைத்தது. இப்பத்திற்காக மூர்த்திக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது. 1962 ஆண்டில் வெளியான :சாகிப் பீபி அவுர் குலாம்” திரைப்படமும் இவருக்கு விருதினைப் பெற்றுத் தந்தது. இயக்குநர் குரு தத்தின் இறப்புவரை மூர்த்தி அவரது திரைப்படங்களுக்கு மட்டுமே ஒளிப்பதிவாளராக இருந்தார். குரு தத்துடன் இணைந்து பணியாற்றிய வெற்றித் திரைப்படங்களில் சில: Some of Murthy's best work came in [[Guru Dutt]]'s movies like ''பியாசா'', ''சாகிப் பீபி அவுர் குலாம்'' and ''ஆர் பார்''. குரு தத்தின் மரணத்திற்குப் பின் இயக்குநர் கமல் ஆம்ரோகியுடன் இணைந்து அவரது மிகச் சிறந்த திரைப்படங்களான ''பாகீசா (Pakeezah)'' மற்றும் ''ரசியா சுல்தான்'' இரண்டிலும் பணியாற்றினார். பின் வந்த நாட்களில், பிரமோத் சக்கரவர்த்தி, சியாம் பெனகல், கோவிந்த் நிகலானி போன்ற இயக்குநர்களின் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1643648" இருந்து மீள்விக்கப்பட்டது