உயிரணு மென்சவ்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
 
===பொஸ்போ இலிப்பிட்டு இருபடை===
{{main|கொழுமிய ஈரடுக்கு}}
 
[[Image:Fluid Mosaic.svg|thumb|200px|right|மஞ்சள் நிறப் பகுதி நீர் நாட்டமுள்ள பொஸ்பேட் கூட்டத்தையும், சாம்பல் நிறப் பகுதி நீர் வெறுப்புள்ள ஐதரோ கார்பன் சங்கிலிகளையும் குறிக்கின்றன.]]
பொஸ்போ இலிப்பிட்டு இருபடை தூண்டுதலின்றி சுயமாக உருவாகக்கூடியதாகும். இது இவ்வாறு உருவாவதற்கு பொஸ்போ இலிப்ப்ட்டு மூலக்கூறின் முனைவாக்கம் தொடர்பான பண்புகள் காரணமாகின்றன. பொஸ்போ இலிப்பிட்டு மூலக்கூறிலுள்ள இரண்டு ஐதரோகார்பன் சங்கிலிகளும் முனைவுத்தன்மை அற்றவையாகும். எனவே இவை நீர்வெறுப்பானவையாக உள்ளதுடன் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து நீருடன் தொடுகையுறும் பரப்பைக் குறைத்துக்கொள்ள முயல்கின்றன. பொஸ்போ இலிப்பிட்டிலுள்ள பொஸ்பேட் கூட்டம் முனைவாக்கமுள்ள, நீர்விருப்புள்ள பகுதியாகும். எனவே இப்பகுதி நீரை நாடிச் செல்லக் கூடியது. எனவே தான் பொஸ்போ இலிப்பிட்டு இரட்டைப் படை ஒன்றைத் தன்னிச்சையாக உருவாக்கிக் கொண்டு நீர்விருப்பான தலைப் பகுதியை (தலை-பொஸ்பேட் கூட்டம்) நீரை நோக்கி வைத்து, நீர்வெறுபான வாற்பகுதிகளை (வால்கள்- ஐதரோகார்பன் சங்கிலிகள்) நீரோடு தொடுகையுற விடாமல் செய்கிறது. பொஸ்போ இலிப்பிட்டு இருபடையின் உள்ளிடம் முனைவற்றதாக உள்ளதால் அமினோ அமிலம், நியூக்கிளிக் அமிலம், காபோவைதரேற்றுக்கள், அயன்கள் போன்றவை இவ்விரு படையூடாக உட்பிரவேசிக்கவோ வெளிச்செல்லவோ முடியாது. இதனால் கலம் புரதங்களைப் பயன்படுத்தி பதார்த்தக் கடத்தலை விரும்பியவாறு கட்டுப்படுத்த முடிகின்றது.
பொஸ்போ இலிப்பிட்டு இருபடையிலுள்ள பொஸ்போ இலிப்பிட்டு மூலக்கூறுகள் சுவரிலுள்ள செங்கற்களைப் போல நிலைத்தவை அல்ல. இவை அசையக் கூடிய மூலக்கூறுகளாகும். இப்பண்பு கலமென்சவ்வுக்குப் பாய்மத் தன்மையை வழங்குகிறது.
 
===குழிய வன்கூடு===
 
கொழுமிய இருபடைக்குக் கீழ் கலத்தின் புரத வன்கூடு மென்சவ்விலுள்ள புரதங்களுடன் தொடுக்கப்பட்டுள்ளது. குழிய வன்கூட்டிலிருந்து [[பிசிர்]], [[சவுக்குமுளை]] போன்ற நுண்புன்குழாயாலான புன்னங்கங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. கல மென்சவ்வை அக்தின் புரதநார்களுடன் இணைப்பதனால் நுண்சடைமுளை போன்ற பதார்த்த உறிஞ்சல் வினைத்திறனை அதிகரிக்கும் கட்டமைப்புக்கள் உருவாக்கப்படுகின்றன.
==மேற்கோள்கள்==
<references />
"https://ta.wikipedia.org/wiki/உயிரணு_மென்சவ்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது