உயிரணு மென்சவ்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4,520 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
===குழிய வன்கூடு===
கொழுமிய இருபடைக்குக் கீழ் கலத்தின் புரத வன்கூடு மென்சவ்விலுள்ள புரதங்களுடன் தொடுக்கப்பட்டுள்ளது. குழிய வன்கூட்டிலிருந்து [[பிசிர்]], [[சவுக்குமுளை]] போன்ற நுண்புன்குழாயாலான புன்னங்கங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. கல மென்சவ்வை அக்தின் புரதநார்களுடன் இணைப்பதனால் நுண்சடைமுளை போன்ற பதார்த்த உறிஞ்சல் வினைத்திறனை அதிகரிக்கும் கட்டமைப்புக்கள் உருவாக்கப்படுகின்றன.
 
==ஆக்கக் கூறுகள்==
 
===இலிப்பிட்டுக்கள்===
 
[[Image:Membrane lipids.png|thumb|right|310px|கலமென்சவ்வில் உள்ள பிரதான பொஸ்போ இலிப்பிட்டு மற்றும் கிளைக்கோ இலிப்பிட்டு வகைகளுக்கான உதாரணங்கள்]]
கல மென்சவ்வில் மூன்று வகை இலிப்பிட்டுக்கள் காணப்படுகின்றன. பொஸ்போ இலிப்பிட்டு ([[பொஸ்போ கொழுமியம்]]), கிளைக்கோ இலிப்பிட்டு மற்றும் ஸ்டெரொய்டு என்பனவே அவையாகும். இவற்றில் பொஸ்போ இலிப்பிட்டுக்களே இருபடையை ஆக்குவதுடன் அதிகளவிலும் உள்ளது. பொஸ்போ இலிப்பிட்டிலுள்ள நிரம்பாத கொழுப்பமிலங்கள் மென்சவ்வுக்கு அதிகளவான பாய்மத்தன்மையை வழங்குகிறது. விலங்குகளின் கல மென்சவ்வில் [[கொலஸ்திரோல்]] பிரதான ஸ்டெரொய்ட்டாக உள்ளது.
 
===காபோவைதரேற்று===
 
காபோவைதரேற்று கலமென்சவ்வில் இலிப்பிட்டு மற்றும் புரத மூலக்கூறுகளுடன் இணைந்து கிளைக்கோ இலிப்பிட்டு மற்றும் கிளைக்கோ புரதமாக உள்ளது.
 
===புரதங்கள்===
 
புரதங்கள் கல மென்சவ்வின் பிரதான கூறுகளுள் ஒன்றாகும். இவ்வாறான மென்சவ்வுப் புரதங்கள் கலத்தொழிற்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இரு வகையான மென்சவ்வுப் புரதங்கள் காணப்படுகின்றன. முதலாவது வகை உள்ளீட்டுக்குரிய புரத வகையாகும். இரண்டாவது சுற்றயலுக்குரிய புரதங்களாகும். உள்ளீட்டுக்குரிய புரதங்கள் கல மென்சவ்வினுள் முழுமையாக அல்லது சிறிதளவு 'அமிழ்ந்து' காணப்படும். இவை பிரதானமாக கால்வாய்ப் புரதமாக, அயன் பம்பியாக, Aqua porins ஆக, கலத்தை அடையாளப்படுத்தும் கிளைக்கோ புரதமாக அல்லது அனுசேபத் தாக்கங்களை ஊக்குவிக்கும் நொதியமாகக் காணப்படலாம். கால்வாய்ப் புரதங்களில் குறிப்பிட்ட பதார்த்தம் கடத்தப்படுவதற்குரிய 'துளை' காணப்படும். இப்புரதக் கால்வாய்கள் மற்றும் அயன் பம்பிகள் ஒவ்வொரு பதார்த்தத்துக்கும் தனித்துவமாக உள்ளமை கலமென்சவ்வின் சிறப்பம்சமாகும். அயன்பம்பிகள் [[ATP]] இல் உள்ள சக்தியைப் பயன்படுத்தி வேலை செய்கின்றன. சுற்றயலுக்குரிய புரதங்கள் கல மென்சவ்வை கொலாஜன் போன்ற கலப்புறத்தாய மூலங்களுடனும், குழியவன்கூட்டு இழைகளுடனும் இணைக்கின்றன.
==மேற்கோள்கள்==
<references />
1,645

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1646108" இருந்து மீள்விக்கப்பட்டது