விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா தரக் கண்காணிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
உங்கள் தனிப்பட்ட பங்களிப்புக்களையோ, நல்நோக்கையோ அணுவளவேனும் நான் கேள்விக்குட்பத்தவில்லை.
வரிசை 191:
 
உங்கள் தனிப்பட்ட பங்களிப்புக்களையோ, நல்நோக்கையோ அணுவளவேனும் நான் கேள்விக்குட்பத்தவில்லை. 3 வரிக் கட்டுரை அல்லது குறுங்கட்டுரைகள் ஏன் நல்லது என்று 10 புள்ளிகள் வரை முன்வைத்துள்ளேன். விக்கி என்பது ஆழமற்ற படைப்புகளையும், ஆழமான படைப்புக்களையும் சேர்ந்தே கொண்டிருக்கும். ஆனால் மேற்படி இறுக்குவதால் ஆழம் கிடைக்கும் என்பதற்கு சான்றுகள் இல்லை. மேற்கோள்கள் சேர்ப்பது, விக்கியாக்கம் தொடர்பான பணிகளை பயனர்களின் கவனதுக்குக் கொண்டுவருவது நல்லதே. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 16:31, 8 ஏப்ரல் 2014 (UTC)
 
நற்கீரன், சில விக்கிப்பீடியாக்களில் என்ன குப்பையும் கொட்டலாம். கேட்க ஆள் இல்லை. நாம் குறைந்தது மூன்று வரி என்கிறோம். மலையாள விக்கிப்பீடியாவில் ஒரு வரிக் கட்டுரை எழுதலாம். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் அவற்றைத் துப்புரவு செய்யும் பணியை மேற்கொள்கிறார்கள். வங்காள விக்கிப்பீடியாவில் கூகுள் கட்டுரைகளுக்கு முற்றிலும் தடை. நாம் நடுவில் தடை செய்தோம். இந்தி விக்கிப்பீடியா எல்லா கூகுள் கட்டுரைகளையும் ஏற்றுக் கொண்டு இப்போது எப்படிச் சீராக்குவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆக, ஒவ்வொரு விக்கிப்பீடியாவிலும் ஒவ்வொரு தர எல்லை இருக்கிறது. இவை தடைகள் அல்ல.
 
தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய 2005களில் கணினியில் தமிழைப் பார்ப்பதே பெரும்பாடாக எழுத்துரு உதவிப் பக்கம் தந்து கொண்டிருந்தோம். தமிழில் எழுதுவதும் சிரமம். ஆனால், இப்போது ஒருங்குறித் தமிழில் எழுதிப் பழகிய இரண்டு இணையத் தலைமுறைகள் முடிந்து மூன்றாவது தலைமுறை வந்து விட்டது (ஒவ்வொரு 5 ஆண்டும் ஒரு இணையத் தலைமுறையாக இனங்காணக்கூடிய போக்கு தென்படுகிறது). தமிழ் விக்கிப்பீடியாவைப் பொருத்தவரை 2003-2009 வரை ஒரு தலைமுறை. 2010 கட்டுரைப் போட்டிக்குப் பிறகு தமிழ்விக்கி10 நடத்திய 2013 வரையான காலகட்டம் இரண்டாவது தலைமுறை. இப்போது அடுத்த தலைமுறையாக புதிய பங்களிப்பாளர்களை உருவாக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.
 
ஒரு Tweetஏ 140 எழுத்துகளைக் கொண்டிருக்கும் போது, அவற்றுக்கும் குறைவான எழுத்துகளில் நாம் கொண்டிருப்பதை ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரை என்று சாதிப்பதால் என்ன பயன்?
 
மூன்று வரிக் கட்டுரை என்ற அளவைக் கூட்டலாம் என்ற பரிந்துரையை இதற்கு முன்பே [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%3A%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&diff=1006970&oldid=1006859 பவுல் போன்றோர் முன்வைத்துள்ளனர்].
 
மூன்று மூன்று வரியாக மொத்தம் 30 வரிகளில் 10 கட்டுரைகள் எழுதும் ஒரு புதுப்பயனரை ஆறு ஆறு வரிகளாக 5 கட்டுரைகள் எழுதித் தாருங்கள் என்று கேட்பது எவ்வாறு அவருடைய ஊக்கத்தைக் குறைக்கும்? தவிர, ஒரு மாத கால நீக்கல் வார்ப்புரு இடும்போது மற்ற பல பயனர்களும் அக்கட்டுரையை விரிவாக்க முடியுமே? புதுப்பயனர் தான் விரிவாக்க வேண்டும் என்றில்லை.
 
http://stats.wikimedia.org/EN/TablesWikipediaTA.htm#editdistribution பாருங்கள்.
 
ஆயிரம் தொகுப்புகளுக்கு மேல் செய்த வெறும் 82 பயனர்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் 84.9% வீதம் தொகுப்புகளைச் செய்துள்ளார்கள். இவர்கள் மொத்த விக்கிப்பீடியரில் 1.5% மட்டுமே. புதுப்பயனர்களுக்குத் தடை என்ற பெயரில் நாம் இளக்கும் கொள்கைகள் கூடுதல் தொகுப்புகளைச் செய்யும் நெடுநாள் பயனர்களாலேயே பயன்படுத்தப்படுகின்றன. எனவே, புதுப்பயனர்களுக்குத் தடையாக இருக்கும் என்ற வாதம் செல்லாது.
 
அதே வேளை, நெடுநாள் பயனர்கள் இன்னும் கூடுதல் தரமுடைய கட்டுரைகளைத் தொடக்கத்திலேயே தருவதன் மூலம் தமிழ் விக்கியின் தரத்தைப் பெருமளவு உயர்த்த முடியும்.
 
பூங்கோதை, மயூரநாதன், மணியன், பவுல், கலையரசி (சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே) போல் செறிவுள்ள கட்டுரைகளை எழுதும் பயனர்கள் நம்மிடையே உள்ளனர். நல்ல எடுத்துக்காட்டுகளுக்குப் பஞ்சம் இல்லை. இருந்தும் ஏன் 69% கட்டுரைகள் 5 கிலோ பைட்டுக்கு கீழ் உள்ளது?
 
5 கிலோ பைட்டு என்பதற்கு எவ்வளவு எழுத வேண்டும்?
 
பார்க்க: [[நடுநிலை நாடு]].
 
இதில் உள்ளது போல் இரண்டு பத்திகள் எழுதினாலே 5 கிலோ பைட்டு வந்து விடும் நிலையில், இந்தப் பரிந்துரை அவ்வளவு கடினமானதா? இத்தகைய ஒரு பரிந்துரை இல்லாமலேயே ஏற்கனவே பலரும் தொடக்கத்திலேயே செறிவான கட்டுரைகளை உருவாக்கி வருகிறார்கள்.
 
இந்த வரையறைக்கு உட்பட்ட ஒரு பயனராக இந்த 5 கிலோ பைட்டு தர எல்லை எனக்கு ஒரு சுமையாக இல்லை. சொல்லப் போனால், இப்படி ஒரு வரையறை இருந்தால் ஒத்திப் போடாமால் எல்லா கட்டுரைகளையும் சீரான தரத்துடன் தர முடியும்.
 
குறுங்கட்டுரைகள் பயன் - இடர் குறித்து ஏற்கனவே [[விக்கிப்பீடியா பேச்சு:கட்டுரை ஒன்றிணைப்பு#மாற்றம் தேவை]] பகுதியில் போதிய விளக்கம் அளித்துள்ளேன்.
 
குறுங்கட்டுரைகளை விரிவாக்க அண்மைய மாற்றத் தூண்டுல்கள், கட்டுரைப் போட்டி ஒன்று ஒரு புறம் அகவயமான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டே வருகிறோம். ஆனால், அவை போதிய பயன் அளிக்கவில்லை. எனவே தான், புறவயமாக நமக்கு நாமே வைக்கும் தர எல்லையை உயர்த்திக் கொள்ளலாமே என்று இப்பரிந்துரை.
 
எனவே, தரத்தை எவ்வாறு உயர்த்தலாம் என்பதற்கான உங்கள் புறவயமான பரிந்துரைகளையும் முன்வையுங்கள். உரையாடி இணக்க முடிவு நோக்கி நகர்வோம்.
 
சாலையில் போக்குவரத்து குறிமரங்கள் நிற்கின்றன என்பதற்காக எல்லாரும் தாமாக ஒழுங்காக விபத்தில்லாமல் வண்டியோட்டுவதில்லை. குறைந்தது, இந்தியா போன்ற நாடுகளில். போக்குவரத்துக் காவலர் வேண்டும். நேர்மையான, இலஞ்சமற்ற தடுப்பு முறைகள் வேண்டும். ஓட்டுநர் உரிமம் முறையாக வழங்கப்பட வேண்டும். கொள்கை எவ்வளவு முக்கியமோ அந்தளவு முறைமைகளும் (system) வழிமுறைகளும் முக்கியம். மேற்குலகில் தாமாக நடக்கும் பல இங்கு தாமாக நடக்கா. ஆங்கில, மேற்குலக விக்கிகள் நன்கு வளர்கின்றன என்றால் அங்கு கட்டுரை விரிவாக்கம், துப்புரவு என்று பல்வேறு பணிகளிலும் ஆர்வம் காட்டி எல்லா இடங்களிலும் விக்கி முறைகளைப் பின்பற்றுவோர் நிறைய இருக்கின்றனர். நாம் நமக்கு வசதிப்பட்ட இடங்களில் மட்டும் விக்கி முறைகளை வலியுறுத்திக் கொண்டு மற்ற இடங்களில் தமிழ்ச் சூழலைக் காட்டிச் சலுகை கோரிக்கொண்டிருந்தால் தமிழ் விக்கிப்பீடியா ஒரு தரமான கலைக்களஞ்சியமாக வளர்வதற்கு எந்த உறுதியும் இல்லை.
 
நன்றி.
 
பி.கு. கருத்தைப் பற்றி மட்டும் உரையாடுவோமே? எனக்கும் கோபிக்கும் போதிய கட்டுரையாக்க அனுபவம் இல்லாமலா நிருவாக அணுக்கத்தோடு நீடிக்க விடுகிறீர்கள் :) கருத்து சொல்பவர்கள் கட்டுரை எழுதுபவர்களைக் குழப்ப வேண்டாம் என்பதெல்லாம் விக்கிப்பண்புகளுக்கு முரணானது. மற்ற பல இடங்களில் --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 10:28, 14 ஏப்ரல் 2014 (UTC)
 
== இவற்றையும் பார்க்க ==