மின்தடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 35:
 
ஆக்கப் பதார்த்தமும் முக்கியமானதாகும். ஒரே வடிவமும் அளவும் உடைய இரு குழாய்களில் சுத்தமான குழாயினூடான நீர்ப்பாய்ச்சல் வேகத்திலும் பார்க்க முடிக்கற்றையால் அடைக்கப்பட்ட குழாயில் நீரின் வேகம் குறைவானதாகும். இதேபோல், இலத்திரன்கள் செப்புக் கம்பியினூடாக இலகுவாகவும் சுதந்திரமாகவும் பாய முடியும். ஆனால், அதே வடிவமும் அளவும் உடைய உருக்குக் கம்பியினூடாக இலகுவாகப் பாயாது. மேலும், எவ்வடிவமாயிருந்தாலும் இறப்பர் போன்ற காவலிப் பதார்த்தங்களில் இலத்திரன் பாய்ச்சல் காணப்படாது. செப்பு, உருக்கு மற்றும் இறப்பர் என்பவற்றுக்கிடையிலான வித்தியாசமானது அவற்றின் அணுக்கட்டமைப்பிலும் இலத்திரன் நிலையமைப்பிலும் தங்கியுள்ளது. இவ்வியல்பு தடைத்திறன் எனும் கணியத்தால் அளவிடப்படுகிறது.
 
== கடத்திகளும் தடையிகளும் ==
 
[[File:65-ohm resistor.jpg|thumb|250px|ஒரு 65 Ω [[தடையி]], நிறக்குறியீட்டின் மூலம் பெறுமானம் அறியப்படுகிறது. (நீலம்-பச்சை-கறுப்பு-பொன்). <!-- This resistor uses the 4 band variant of the colour code so the bands represent 6 - 5 - 0 - x0.1 making 65Ω ---> [[ஓம்மானி]]யொன்றைப் பயன்படுத்தி இதன் பெறுமானத்தை அறிந்து கொள்ளலாம்.]]
 
மின்சாரத்தைத் தம்மூடாகப் பாயவிடும் பொருட்கள் கடத்திகள் எனப்படும். மின் சுற்றுக்களில் பயன்படுத்தப்படும், ஒரு குறித்த தடைப் பெறுமானத்தையுடைய கடத்தித் துண்டு தடையி எனப்படும். கடத்திகள் செப்பு, அலுமினியம் போன்ற உயர் கடத்துதிறனுடைய பதார்த்தங்களால் ஆக்கப்பட்டிருக்கும். எனினும், தடையிகள் பல்வேறு மூலப்பொருட்களால் ஆக்கப்பட்டிருக்கும். தேவையான தடைப் பெறுமானம், சக்தி வெளியேற்ற அளவு, பெறுமானத்தின் வழு வீதம் மற்றும் செலவு என்பவற்றைப் பொறுத்து இம் மூலப்பொருட்கள் தீர்மானிக்கப்படும்.
 
==படம் ஒன்று==
"https://ta.wikipedia.org/wiki/மின்தடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது