மைக்ரோசாப்ட் எக்செல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42:
== வசதிகள் ==
# கலம் (cell) ஒன்றில் உள்ளீடு செய்யப்படும் தரவின் வகையைத் தானகவே கண்டறிந்து உரிய முறையில் காட்சிப்படுத்தும். அதாவது இலக்கம் ஒன்றை உள்ளிடப்பட்டால் இலக்கமாகவும். தேதி (திகதி) ஒன்றை உள்ளிடப்பட்டால் தேதியாகவும் காட்சிப்படுத்தும். இலக்கங்கள், தேதிகள் கலத்தின் வலப்பக்கத்தில் இருந்து இடமாக நிரப்பபடும் (Right Aligned) சொற்தொடர்கள் (text) இடப்பக்கத்தில் இருந்து வலப்புறமாக நிரப்பப்படும். இலக்கம் ஒன்றை சொற்தொடராகக் காட்டவேண்டும் என்றால் அந்த இலக்கத்தின் முன் ‘ (ஒற்றைக்கொம்பு) அடையாளமிட வேண்டும் அல்லது TEXT() சூத்திரத்தைப் பாவிக்கவேண்டும்.
# கலம் ஒன்றின் உள்ளீடு தவறுதலாக இருந்தாலோ அல்லது சூத்திரம் ஒன்று அநேகமாகத் தவறாக இருக்ககூடிய சந்தர்பக்கங்களின் கலத்தின் இடது மேல் மூலையில் சுட்டித்தனமான சிட்டை (smart tag) ஒன்றை இணைத்துக்காட்டும். இதைச் சொடுக்குவதன் மூலம் (click) காரணத்தை இனம் கண்டு தவறாக இருப்பின் அதைச் சீர்செய்து கொள்ளலாம். எ.கா: கலம் ஒன்றில் 12 என்ற இலக்கத்தை '12 என உள்ளீடு செய்தால் இலக்கம் ஒன்று சொற்தொடராக உள்ளீடு செய்யப்படுள்ளாக சுட்டித்தனமான சிட்டை காட்டிக்கொடுக்கும்.
# கணித்தல்களைச் செய்யலாம் (கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல் போன்றவற்றிற்கு எளிய முறையிலும் மற்றும் அட்சரகணிதக் கோவைகளுக்கு சார்புகளை எழுதித் தீர்வுகாண இயலும்)
# உள்ளீடு செய்யும் தரவுகள் ஓர் வீச்சுக்குள் உள்ளதா என்பதைச் சரிபார்த்தே அனுமதிக்கும் வசதி. அத்துடன் அவ்வாறு வீச்சுக்குள் அமையாத தரவுகளை உள்ளிட முயலும் போதான பிழைச் செய்தியையும் விரும்பியவாறு வடிவமைக்கக்கூடியதான தமிழ் ஒருங்குறியூடான ஆதரவு.
"https://ta.wikipedia.org/wiki/மைக்ரோசாப்ட்_எக்செல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது