கொன்றுண்ணிப் பறவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Harrishawk (Verrier).jpg|thumb|180px|செம்பழுப்பு ஃஆரிசுப் பருந்து]]
'''கொன்றுண்ணிப் பறவைகள்''' அல்லது '''ஊனுண்ணிப் பறவைகள்''' (''birds of prey'' அல்லது ''raptors'') என்பன [[எலி]], [[முயல்]] போன்ற [[பாலூட்டி]] வகை [[விலங்கு]]களையும், [[கோழி]], [[புறா]] போன்ற பிற [[பறவை]]களையும் கொன்று தின்னும் பறவையினம் ஆகும். இப்பறவைகள் தம் வல்லுகிரால் (உகிர்=நகம்) தம் இரையைப் பற்றி, கூரிய நுனியுடைய அலகால் கிழித்து உண்ண வல்லன. இதில் பல்வேறு வகையான [[கழுகு]], [[வல்லூறு]],[[ஆந்தை]] போன்ற பறவைகள் அடங்கும். பெரும்பாலான ஊனுண்ணிப் பறவைகளில், பெண்பறவைகள் ஆண் பறவையிலும் அளவில் பெரியவை. இவற்றின் ஊணுண்ணும் இயல்பினால், இவை அழிந்துபோகாமல் காப்பதில் தனித்துவமான பிரச்சினைகள் காணப்படுகின்றன.
 
==வரைவிலக்கணம்==
பல வகையான பறவைகளை, பகுதியாகவோ அல்லது முதாகவோ கொண்றுண்ணிகளாக இருக்கின்றன. ஆனாலும் பறவையியலில், கொன்றுண்ணிகள் என்பன குறிப்பிட்ட சில குடும்பங்களைச் சேர்ந்த பறவைகளையே குறிக்கின்றது. பெயரின் நேரடிப் பொருள் கொண்டு பார்க்கும்போது, கொன்றுண்ணிகள் என்பன, சிறிய விலங்குகளை வேட்டையாடி உண்ணும் பறவைகளை மட்டுமன்றிப் பூச்சி புழுக்களை உண்டு வாழும் பறவைகளையும் குறிக்கும். பறவையியலில், கொன்றுண்ணிகள் என்பது குறுகிய பொருள் கொண்டது. இதன்படி, இரையைக் கண்டறிவதற்காக மிகக் கூர்மையான கண்பார்வையையும், இரையைப் பற்றிப் பிடிப்பதற்காக வலுவான கால்களையும், பிடித்த இரையைக் கிழிப்பதற்காக வலுவான கூரிய நகங்களையும் கொண்ட பறவைகளே கொன்றுண்ணிகள் என வரையறுக்கப்படுகின்றன.
 
[[பகுப்பு:பறவைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கொன்றுண்ணிப்_பறவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது