'''புள்ளி''' (Point) என்பது [[கனஅளவு]], [[பரப்பளவு (வடிவியல்)|பரப்பளவு]] மற்றும் [[நீளம்|நீளமற்று]], இருப்பிடம் (Location) மட்டுமே கொண்டு ஒரு [[வெளி]]யில் வரையறுக்கப்பட்ட ஒருபரிமாண [[வடிவவியல்]] கோட்பாடு ஆகும். இக்கோட்பாடு [[இயற்பியல்]], திசையன் வரைகலை (Vector graphics) ஆகியவற்றில் பயன்படுகிறது. கணிதத்தில் எந்த ஒரு வடிவமோ, வெளியோ புள்ளிகளால் ஆனதாகக் கருதப்படுகிறது. நவீன கணிதத்தில் வெளி என்ற [[கணம் (கணிதம்)|கணத்தின்]] ஒரு உறுப்பாகப் புள்ளி கருதப்படுகிறது. குறிப்பாக [[யூக்ளீட் வடிவியல்|யூக்ளிடிய வடிவவியலில்]] புள்ளியை அடிப்படைக் கருத்துருவாகக் கொண்டு பிற வடிவவியல் கோட்பாடுகள் எழுப்பப்பட்டுள்ளன. அடிப்படைக் கருத்துருவானதால் புள்ளியை ஏற்கனவே வரையறுக்கப்பட்டவற்றைக் கொண்டு வரையறுக்க முடியாது. எனவே, அதன் பண்புகளை [[அடிக்கோள்]]களாக வரையறுப்பதன் மூலம் புள்ளியானது வரையறுக்கப்படுகிறது.