ஈ. வெ. கி. சம்பத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 32:
சம்பத் [[சென்னை]] [[பச்சையப்பன் கல்லூரி]]யில் படித்தார். [[நீதிக்கட்சி]]யிலும் பின்னர் [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்திலும்]] தன் அரசியல் வாழ்வைத் தொடங்கினார். 1949ல் பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து [[அண்ணாதுரை]] பிரிந்து சென்று [[திராவிட முன்னேற்றக் கழகம்]] (திமுக) தொடங்கிய போது அவருடன் சென்ற முக்கிய தலைவர்களுள் ஒருவர். சம்பத் திமுகவின் ஐம்பெரும் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டார். (ஏனைய நால்வர் - அண்ணா, [[இரா. நெடுஞ்செழியன்]], [[கே. ஏ. மதியழகன்]], [[என். வி. நடராசன்]]).
 
[[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1957|1957 நாடாளுமன்றத் தேர்தலில்]] [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]யில் திமுக சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1961ல் [[திராவிட நாடு]] கொள்கை தொடர்பாக அண்ணாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் திமுகவிலிருந்து பிரிந்து சென்று [[தமிழ் தேசியக் கட்சி]] என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். [[கண்ணதாசன்]], [[சிவாஜி கணேசன்]], [[பழ. நெடுமாறன்]] ஆகியோர் இக்கட்சியின் மற்ற முக்கிய தலைவர்கள். [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962|1962 சட்டமன்றத் தேர்தலில்]] போடியிட்ட இக்கட்சி படுதோல்வியடைந்தது - போட்டியிட்ட ஒன்பது இடங்களிலும் தொற்றதுதோற்றது. 1964ல் சம்பத் தன் கட்சியை [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசுடன்]] இணைத்து விட்டார். பின்னர் 1969ல் காங்கிரசு பிளவுபட்ட போது [[காமராஜர்]] தலைமையில் உருவான [[நிறுவன காங்கிரசு|நிறுவன காங்கிரசில்]] இணைந்து விட்டார். [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1971|1971 நாடாளுமன்றத் தேர்தலில்]] [[கோபிச்செட்டிப்பாளையம்]] மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
 
இவரது மனைவி [[சுலோச்சனா சம்பத்]] [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] தலைவர்களுள் ஒருவர். இவரது மகன் [[ஈ.வெ.கி.ச.இளங்கோவன்|ஈ. வி. கே. எஸ். இளங்கோவன்]] முன்னாள் இந்திய மத்திய அரசு அமைச்சர் மற்றும் காங்கிரசின் மாநிலத் தலைவர்களுள் ஒருவர். இவரது இன்னொரு மகன் இனியன் சம்பத்தும் காங்கிரசின் உறுப்பினர்; முன்னாளில் [[தூர்தர்ஷன்|தூர்தர்ஷனில்]] செய்தி வாசிப்பவராக இருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஈ._வெ._கி._சம்பத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது