காட்டுமிராண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''காட்டுமிராண்டி''' என்பது [[நாகரிகம்]] அற்றவர் என்று கருதும் ஒருவரைக் குறிக்கும் சொல். இச்சொல் ஒரு நாட்டினரையோ, [[இனம்|இனத்தையோ]], [[பழங்குடி]]யினரையோ பொதுப்படையாகக் குறிக்கவும் பயன்படுத்துவது உண்டு. இது நகர நாகரிகத்தினரின் நோக்கு ஆகும். கொடூரமான, எதற்கும் சண்டைபோடுகிற, பிறர் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத ஒருவரையும் ''காட்டுமிராண்டி'' என உருவகப்படுத்திக் கூறுவது உண்டு.<ref>''Webster's New Universal Unabridged Dictionary'', 1972, pg. 149, Simon & Schuster Publishing</ref>
[[தமிழ்|தமிழில்]] ''காட்டுமிராண்டி'' என்னும் சொல் ''barbarian'' என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான பொருள் கொண்டதாகப் பயன்படுகிறது. குறித்த ஆங்கிலச் சொல் [[கிரேக்க மொழி]]யில் "கிரேக்கர் அல்லாதவர்" என்னும் பொருள் தருகின்ற ''βάρβαρος (barbaros)'' என்னும் சொல்லின் அடியாகப் பிறந்தது. அக்காலத்தில் [[கிரேக்கர்]]கள் நாகரிகம் உள்ளவர்களாகக் கருதப்பட்டதால் ஏனையோர் நாகரிகம் அற்றவர்கள் என்ற கருத்துரு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், கிரேக்கரின் நகர அரசுகள் ஒன்றுடன் ஒன்று போர் புரிந்தபோது ஒரு பகுதியினரை மற்றவர் காட்டுமிராண்டிகளாகக் குறிப்பிட்டுக்கொண்டனர்.<ref>Siculus Diodorus, Ludwig August Dindorf, Diodori Bibliotheca historica - Volume 1 - Page 671</ref>
==குறிப்புகள்==
|