"தாயக் கட்டை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7,036 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
[[தாயம்]] எனப்படுவது பண்டைய காலத்திலிருந்து இன்று வரை இந்தியாவில் பரவலாக ஆடப்படும் ஒரு விளையாட்டாகும். இவ்விளையாட்டை இரண்டு முதல் நான்கு பேர் வரை தரையிலோ (அ) மேடை மீது வைத்தோ விளையாடலாம்.
 
தாயம் விளையாடும் போது கவனிக்கவேண்டிய விதி முறைகள்:-
=== தாயக்கட்டையினால் தாயம் விளையாடல் ===
 
* இரண்டு முதல் நான்கு ஆட்டக்காரர்கள் ஆட்டத்தை துவக்கவேண்டும்.
* ஒவ்வொரு ஆட்டக்காரரும் தனித்தனியான காய் வகைகளை தேர்வு செய்து கொள்ளவேண்டும். காய்கள் உருவத்திலோ அல்லது நிறத்திலோ வேறுபட்டு இருப்பது நல்லது.
* ஆட்டக்காரர்கள் ஒவ்வொருவரும் ஆறு காய்களைக் மனைப் பகுதியில் வைத்து ஆட்டத்தைத் துவக்க வேண்டும்.
* தாயம் இட்டபின்னேதான் மனையிலிருந்து முதற்கட்டத்தில் காய்களை வைக்க வேண்டும். முதற்காய்க்கான தாயம் விழும் வரை 5, 6, மற்றும் 12 ஆகிய எண்களுக்கு மறு ஆட்டம் உண்டு. 2, 3, மற்றும் 4 ஆகிய எண்களுக்கு மறு ஆட்டம் இல்லை. ஒரு ஆட்டத்தில் முதற்காய்க்கான தாயம் விழும் முன் மறு ஆட்டத்திற்க்கான எண்கள் விழுந்து பின் தாயம் விழுந்தால், மறு ஆட்டத்திற்க்கான எண்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
* காய்களை நகர்த்தும் திசையை மேலுள்ள வரைப்படத்தில் காணலாம் (பச்சைக் கோடுகள்).
* ஒரு கட்டத்தில் ஒரு ஆட்டக்காரரின் காய்களே இருக்க முடியும். வேறு ஆட்டக்காரரின் காய்கள் அதே கட்டத்தில் நுழைந்தால் முதலிருந்த காய்கள் வெட்டப்பட்டு மனைக்கு திருப்பி அனுப்பப்படும்.
* சில கட்டங்களின் குறுக்கே இரு கோடுகள் இருக்கும். இக்கட்டங்கள், '''மலை''' என்றழைக்கப்படும். இக்கட்டத்தில் வந்து நிற்பதற்கு '''மலையேறுதல்''' என்று பெயர். இவை சிறப்புக் கட்டங்கள். இக்கட்டங்களில் பல ஆட்டக்காரர்களின் காய்களும் சேர்ந்து இருக்க முடியும். அதாவது, இக்கட்டங்களில் ஒரு ஆட்டக்காரரின் காயை இன்னொரு ஆட்டக்காரரால் வெட்டப்பட முடியாது.
* 1, 5, 6, அல்லது 12 ஆகிய எண்களுக்கு மறு ஆட்டம் உண்டு. பிறர் காய்களை வெட்டினாலும் மறு ஆட்டம் உண்டு.
* உதாரணத்திற்கு, ஒரு ஆட்டக்காரர் 5, 4 என்ற எண்களை தன்னுடைய ஒரு ஆட்டத்தில் இடுகிறார் என வைத்துக்கொள்வோம். 5க்கு ஒரு காயையும் 4க்கு வேறொரு காயையும் அவரால் நகர்த்த முடியும்.
* காய்கள் ஒரு முறை சுற்றி வந்த பின் திரும்பவும் மனைக்குள் செல்லவேண்டும். ஆனால் வேறு ஆட்டக்காரரின் காய்களை முன்னமே வெட்டவில்லையென்றால் மனைக்குள் செல்ல முடியாது.
* அவ்விதம் மனைக்குள் செல்ல முடியாத காய்கள் கடைசிக் கட்டத்திலேயே தங்கி விடும். சிலர் விதிமுறையை மாற்றி காய்களை சுற்றி சுற்றி வரவைப்பதும் உண்டு.
* காய்கள் மனைப் பகுதியில் உள்ள கட்டத்துக்குள் ஏறிய பின் மீண்டும் மனைக்குள் புகுந்தால் அக்காய்களை '''பழம்''' என கருதி ஆட்டத்தில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். இதை '''பழம் எடுத்தல்''' என்றழைப்பர்.
* ஒரு ஆட்டக்காரருக்கு நகர்த்துவதற்கு காய்கள் இருந்தும், அவர் ஒரு சுற்றில் இடும் எண்களுக்கு அவரால் காய்களை நகர்த்த முடியவில்லையென்றால், அவ்வாட்டத்திற்கு அவரால் காய்களை நகர்த்த இயலாது.
* முதலில் எந்த ஆட்டக்காரர் ஆறு காய்களையும் பழமாக மாற்றுகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவராவார்.
* சில சமயங்களில் நான்கு பேர் கொண்ட ஆட்டத்தில், எதிரெதிரே அமர்ந்திருப்பவர்கள் ஓரணியாகக் கொண்டு அவர்களில் ஒருவரின் மனையை தங்கள் அணிக்கு தேர்ந்தெடுத்துக்கொண்டு, ஈரணியாக ஆடுவது உண்டு. இதன் மூலம் நான்கு பேர் கொண்ட ஆட்டத்தை சீக்கிரம் முடிக்கமுடியும்.
 
 
[[படிமம்:Thayam.png|thumbnail|இடது|தாயம் விளையாடப்படும் வரைபடம்.]]
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1651402" இருந்து மீள்விக்கப்பட்டது