"வில்லை (ஒளியியல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
[[படிமம்:Magnifying_glass.jpg|thumb|250px|உருப்பெருக்கிக் கண்ணாடியில் உள்ள '''வில்லை'''. இது ''இருகுவி'' வில்லை ஆகும். இவ்வகை வில்லைகள் கதிரொளியை குவியச்செய்து வெப்பச் செறிவால் (அடர்த்தியால்) காய்ந்த இலை, பஞ்சு, காகிதம் போன்றவற்றைத் தீபற்றச் செய்ய வல்லது.]]
 
வில்லை என்பது [[ஒளி]]க் கதிர்களைக் குறிப்பிட்டவாறு குவியவோ விரியவோ செய்யவல்ல ஒருஓர் எளிய கருவி. இது ஒரு பொருளை பெரிதாகவோ சிறிதாகவோ காட்ட வல்ல, [[கண்ணாடி]] போன்ற ஒளி ஊடுருவும் ஒரு பொருளால் செய்யப்பட்டது. வில்லையின் அடிப்படைப் பண்பானது ஒளி ஓர் ஊடகத்தில் இருந்து வேறு ஓர் ஊடகத்தின் வழியே செல்லும் பொழுது ஏற்படும் [[ஒளிவிலகல்]] பண்பைப் பொருத்து அமைகின்றது. இதன் அடிப்படையிலேயே வெவ்வேறு வளைவுள்ள வில்லையின் பரப்புகள் அமைக்கப்படுகின்றன. ஒரு வில்லையின் புறப் பரப்புகள் சீரான குழியாகவோ, குவிந்தோ அல்லது சமதளமாகவோ இருக்கும். உப்பிப் புடைத்து இருந்தால் ''குவிப் பரப்பு'' என்றும், உள்நோக்கி வளைந்து குழிந்து இருந்தால் ''குழிப் பரப்பு'' என்றும், நேரான சமதளமாக இருந்தால் ''சமதளப் பரப்பு'' என்றும் குறிக்கப்படும். ஒருபுறம் ஒளி நுழைந்து மறுபுறம் ஒளி வெளி வருமாகையால் வில்லைக்கு இரு பரப்புகளும் முக்கியமானவை.
வில்லை என்பது பெரும்பாலும் [[திண்மம்|திண்மப்]] பொருட்களால் ஆனது என்றாலும், [[தாமரை]] இலையின் மீது உள்ள [[நீர்|நீரும்]], [[பனித்துளி]]யும் திரண்டு புறப் பரப்பு குவிந்து இருப்பதால் அவைகளும் வில்லையின் பணியையே செய்கின்றது. மெல்லிய அட்டை போன்ற ஒரு தட்டையான ஒளியூடுருவு பொருளும் குறிப்பிட்ட சில வழிகளில் கீறப்பட்டோ வடிவமைக்கப்பட்டோ இருந்தால் அவைகளும் வில்லை போல இயங்க வல்லன (பார்க்க [[ஃவிரெனெல் வில்லை]]). [[ஒளிப்படக்கருவி]], [[நுண்நோக்கி]] போன்ற பல அன்றாடக் கருவிகளிலும் [[அறிவியல்]] ஆய்வுக் கருவிகளிலும் வில்லை பரவலாக பயன்படுகின்றது.
14,904

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/165178" இருந்து மீள்விக்கப்பட்டது