இருபத்திமூன்றாம் யோவான் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இற்றைப்படுத்தல்
வரிசை 64:
 
1921ஆம் ஆண்டு, [[பதினைந்தாம் பெனடிக்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட்]] ரொங்கால்லிக்கு மொன்சிஞ்ஞோர் பட்டம் கொடுத்து, அவரை [[இத்தாலி|இத்தாலியின்]] நற்செய்தி அறிவிப்புப் பணி தேசிய அமைப்புக்கும் தலைவராக நியமித்தார். அக்காலத்தில் ரொங்கால்லி [[பதினொன்றாம் பயஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்]] வெளியிட்ட மறையறிவிப்புப் பணி மடலாகிய "Romanum Pontificum" என்பதை உருவாக்குவதில் ஒத்துழைத்தார்.
 
==புனிதர் பட்டம் அளிக்கப்படுதல்==
[[திருத்தந்தை பிரான்சிசு]] 2014, ஏப்பிரல் 27ஆம் நாள் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானுக்கு "புனிதர்" பட்டம் வழங்கினார். புனிதர் பட்டம் அளித்த அதே சடங்கின்போது திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கும் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டும் கலந்துகொண்டார்.<ref>[http://america.aljazeera.com/articles/2014/4/27/pope-vatican-sainthoodcanonized.html புனிதர் பட்டம் வழங்கப்படுதல்]</ref>
 
திருச்சபையின் 2000 ஆண்டு வரலாற்றில் இரண்டு திருத்தந்தையர் ஒரே நேரத்தில் இணைந்து பொதுமக்கள் முன்னிலையில் திருப்பலி நிறைவேற்றியது இதுவே முதல் தடவை ஆகும்.
 
புனிதர் பட்டம் வழங்கிய சடங்கில் சுமார் 800,000 பேர் கலந்துகொண்டனர். மிகப்பலர் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் பிறந்த நாடாகிய போலந்திலிருந்து திருப்பயணிகளாக வந்திருந்தனர். வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகம் திருப்பயணிகள் கூட்டத்தால் நிறைந்து வழிந்தது. அங்கிருந்து டைபர் நதியின் பாலங்களுக்கு அப்பால் கூட மக்கள் கூடியிருந்தனர். பலர் மிகப்பெரிய திரைகளில் நிகழ்ச்சியைக் காணும் வசதி செய்யப்பட்டிருந்தது.
 
இருபத்திமூன்றாம் யோவான் 1958இலிருந்து 1963 வரை கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாகப் பணியாற்றினார். அவர்தான் 1962இல் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் என்றொரு உலகளாவிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர். அவருடைய ஆட்சிக் காலத்திலும் அதன் பிறகும் இரண்டாம் வத்திக்கான் சங்கம் திருச்சபையில் மறுமலர்ச்சியைக் கொணர்வதற்கு வழிகோலிற்று.
 
இருபத்திமூன்றாம் யோவான் உலக அமைதிக்காகப் பெரிதும் பாடுபட்டு உழைத்தார். அமைதி பற்றி அவர் எழுதிய "அவனியில் அமைதி" ([[:en:Pacem in Terris|Pacem in Terris]]) என்ற சுற்றுமடல் பன்னாட்டு சமூகத்தில் ஆழ்ந்த தாக்கம் கொணர்ந்தது. மேற்கு நாடுகளுக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே நிலவிய "பனிப்போர்" 1963இல் அணு ஆயுதப் போராக உருவெடுக்கும் பேராபத்து எழுந்தபோது திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் அமெரிக்க அதிபர் ஜாண் எஃப். கென்னடியையும் அந்நாளைய சோவியத் யூனியனின் அதிபர் குருஷோவையும் தொடர்புகொண்டு போர் எண்ணங்களைக் கைவிடுமாறு வலியுறுத்தினார். அணு ஆயுதப் போர் தவிர்க்கப்பட்டது.
 
திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானுக்கு திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 2000ஆம் ஆண்டில் முத்திப்பேறு பெற்ற பட்டம் அளித்தார். புனிதர் பட்டம் பெறுவதற்குக் குறிக்கப்பட்டவர் இரு புதுமைகளை நிகழ்த்தியிருக்க வேண்டும் என்பது ஒழுங்குமுறை. திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானை நோக்கி வேண்டிக்கொண்டதால் அதிசயமான விதத்தில் ஒருவர் குணமார் என்பதை வத்திக்கான் ஏற்றுக்கொண்டிருந்தது. ஆயினும் புனிதர் பட்டம் கொடுப்பதற்கு மேலும் இரண்டாவது ஒரு புதுமை தேவைப்பட்டது.
 
நிலைமை இவ்வாறிருக்க, திருத்தந்தை இரண்டாம் யோவானுக்கு புனிதர் பட்டம் அளிக்க இரண்டாவது புதுமை தேவையில்லை என திருத்தந்தை பிரான்சிசு தீர்மானித்து, சட்டத்திற்கு விதிவிலக்கு கொடுத்தார்.
 
==புனிதர் பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தலைவர்கள்==
 
இரு திருத்தந்தையர்களைப் புனிதர்கள் என்று திருத்தந்தை பிரான்சிசு அறிக்கையிடுகையில், ஓய்வுபெற்ற திருத்தந்தையான பெனடிக்டும் உடனிருந்தார். இது வரலாற்றில் இவ்வகையில் இதுவரை நிகழ்ந்திராத ஒரு நிகழ்ச்சி.
 
அரசர்கள், அரசிகள், அதிபர்கள், பிரதம அமைச்சர்கள் போன்ற பல தலைவர்கள் பல நாடுகளிலிருந்து வந்து மேற்கூறிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். 90க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளாக அவர்கள் வந்திருந்தனர். ஐக்கிய அமெரிக்கா, இசுரயேல், அர்ஜென்டீனா, போலந்து ஆகிய நாடுகளிலிருந்து சுமர் 20 யூத தலைவர்களும் வந்திருந்தார்கள்.
 
==ஆதாரங்கள்==