மேலுதைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
[[File:Buoyancyta.svg.png|thumb|மேலுதைப்பும் பொருள் மிதத்தலும்]]
ஒரு [[பாய்மம்|பாய்மத்தில்]] (வாயு/ திரவம்) அமிழ்த்தப்பட்ட பொருளின் [[எடை|நிறைக்கு]] எதிராக அப்பாய்மத்தால் கொடுக்கப்படும் விசையே '''மேலுதைப்பு''' (Buoyancy) ஆகும். [[புவியீர்ப்பு|புவியீர்ப்பின்]] கீழுள்ள ஒரு பாய்மத்தின் ஆழத்துக்கேற்ற [[அழுத்தம்|அமுக்க]] வித்தியாசமே இம்மேலுதைப்புக்குக் காரணமாக அமைகின்றது. P=hρg இன் படி ஆழம் அதிகரிக்க அமுக்கமும் அதிகரிக்கின்றது. இவ்வமுக்க வேறுபாடு காரணமாக பாய்மத்தில் அமிழ்த்தப்படும் பொருள் மேல்நோக்கிய [[ஆர்முடுகல்]] ஒன்றை எதிர்கொள்ளும். மேலுதைப்பு விசை கீழ் நோக்கிய ஈர்ப்பு விசைக்குச் சமப்படுமானால் பொருள் பாய்மத்தில் மிதக்கும். மேலுதைப்பு விசையானது பொருளால் இடம்பெயர்க்கப்பட்ட பாய்மத்தின் நிறைக்குச் சமனானதாக இருக்கும். இதன் காரணமாகவே பாய்மத்தை விட அடர்த்தி கூடிய (துளைகளற்ற) பொருள் அமிழ்கின்றது; அடர்த்தி குறைவான பொருள் மிதக்கிறது. பாய்மத்தை விட அடர்த்தி கூடிய பொருளெனில், அது இடம்பெயர்க்கும் பாய்மத்தின் நிறை பொருளின் நிறையை விடக் குறைவாகும், எனவே மேலுதைப்பு ஈர்ப்பு விசையை விடக் குறைவென்பதால் பொருள் அமிழ்கின்றது. மிதக்கும் பொருளில் இவ்விரு விசைகளும் சமப்படுமாறு பொருளின் ஒரு பகுதியே பாய்மத்தில் அமிழ்ந்திருக்கும்.
 
"https://ta.wikipedia.org/wiki/மேலுதைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது