இழையுருப்பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[File:Major events in mitosista.svg.png|thumb|360px400px|இழையுருப்பிரிவுக்கு முன்னும் பின்னும்:அடிப்படை]]
[[File:Wilson1900Fig2.jpg|right|thumb|300px350px|கல வட்டத்தின் வெவ்வேறு அவத்தைகளில் உள்ள [[வெங்காயம்|வெங்காயக்]] கலங்கள். சில இழையுருப்பிரிவை நிகழ்த்துகின்றன.]]
[[File:Mitosis drosophila larva.ogv|thumb|right|''Drosophila melanogaster'' பூச்சியின் [[முளையம்]]. இதில் மிக வேகமாக இழையுருப்பிரிவு மூலம் புதிய கலங்கள் உருவாக்கப்படுகின்றன.]]
[[உயிரியல்|உயிரியலில்]] '''இழையுருப்பிரிவு''' என்பது [[மெய்க்கருவுயிரி]]களின் உயிரணுக்களில் (கலங்களில்) [[கலப்பிரிவு|உயிரணுப்பிரிவு]] நடைபெறும்போது, ஒன்றையொன்று ஒத்த, ஒரே மாதிரியான இரு [[உயிரணு]]க்கள் உருவாவதுடன், ஒவ்வொரு உயிரணுவிலும் காணப்படும் [[நிறப்புரி]]களும், [[மரபியல்]] உள்ளடக்கமும் தாய் உயிரணுவை ஒத்ததாகக் இருக்குமாறும் நிகழும் செயல்முறையாகும். பொதுவாக இழையுருப்பிரிவு நிறைவடைந்தவுடன் குழியவுருப்பிரிவு (Cytokinensis) நடைபெறும். <ref>{{cite web|title=Mitosis|url=http://biology.clc.uc.edu/courses/bio104/mitosis.htm}}</ref> குழியவுருப்பிரிவின் போது புன்னங்கங்கள், குழியவுரு, கல மென்சவ்வு என்பன இழையுருப்பிரிவின் போது தோற்றுவிக்கப்பட்ட இரு மகட்கலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இழையுருப்பிரிவு மெய்க்கருவுயிரிகளுக்கு மாத்திரம் தனித்துவமான ஒன்றாகும். இது [[பாக்டீரியா]], [[ஆர்க்கியா]] ஆகிய நிலைக்கருவிலிகளில் நடைபெறுவதில்லை. வெவ்வேறு நிலைக்கருவிலி வகைகளில் வெவ்வேறு விதமாக இழையுருப்பிரிவு நடைபெறுகின்றது. [[விலங்கு]]க் கலங்களில் முன் அனுவவத்தையின் போது கருவுறை/ கரு மென்சவ்வு அழிந்து, கலத்தினுள்ளே நிறமூர்த்தங்கள் பகிரப்படுகின்றன. [[பூஞ்சை]]களிலும் சில புரொட்டிஸ்டுக்களிலும் கரு மென்சவ்வு அழிவடைவதில்லை. கரு மென்சவ்வு அவ்வாறே இருக்க கருவினுள்ளே இழையுருப்பிரிவு நடைபெறுகின்றது. பின்னர் கருவும், கலமும் பிரிகின்றன (பூஞ்சையில் கரு மாத்திரமே பிரிகின்றது-கலம் பிரிவடைவதில்லை). இழையுருப்பிரிவே பல்கல உயிரினங்களின் உடல் வளர்ச்சிக்குக் காரணமாகின்றது. ஒருகல [[நுகம்]] இழையுருப்பிரிவு மூலமே பல்கல நிறையுடலியாக மாற்றமடைகிறது. அதாவது இழையுருப்பிரிவு மூலம் உருவாகிய ஒரு மனிதனின் உடலிலுள்ள கலங்கள் அமைப்பு, உருவம், தொழில் என்பவற்றால் மாறுபட்டாலும், அவை அனைத்தும் ஒரே மரபணுத்தகவலையே கொண்டுள்ளன. பல்கல உயிரினங்களில் பொதுவாக வளர்ச்சிக்காகவே இழையுருப்பிரிவைப் பயன்படுத்தினாலும், சில வேளைகளில் இலிங்கமில் இனப்பெருக்கத்துக்கும் இழையுருப்பிரிவு பயன்படுத்தப்படுகின்றது.
இழையுருப்பிரிவு பொதுவாக ஐந்து அவத்தைகளில் நிகழ்கின்றது. இழையுருப்பிரிவு ஆரம்பிக்கையில் ஒரு கலமும் முடிவுறும் போது இரு கலங்களும் இருக்கும். அவத்தைகள்:
வரி 33 ⟶ 32:
 
===முன் அனுவவத்தை===
[[File:Mitosis drosophila larva.ogv|thumb|right|''Drosophila melanogaster'' பூச்சியின் [[முளையம்]]. இதில் மிக வேகமாக இழையுருப்பிரிவு மூலம் புதிய கலங்கள் உருவாக்கப்படுகின்றன.]]
 
இவ்வவத்தையை சிலர் இழையுருப்பிரிவின் ஒரு அவத்தையாகக் கருதுவதில்லை. இவர்கள் இதனை முன்னவத்தையின் ஒரு பகுதியாகவோ அல்லது அனுவவத்தையின் ஒரு பகுதியாகவோ உள்ளடக்குகின்றனர்.
இது கரு மென்சவ்வு அழிவடைவதுடன் ஆரம்பிக்கும் இழையுருப்பிரிவு அவத்தையாகும். எனினும் பூஞ்சைகளிலும் மேலும் சில புரொட்டிஸ்டுக்களிலும் இவ்வவத்தையின் போது கருமென்சவ்வு அழிவடைவதில்லை. இவ் அவத்தையின் போது கதிர்நார்கள் நிறமூர்த்தத்தின் மையப்பாத்துடன் இணைக்கப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/இழையுருப்பிரிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது