"தஞ்சை சீனிவாசன் பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

104 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("தஞ்சை சீனிவாசன் பிள்ளை (18..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
'''தஞ்சை சீனிவாசன் பிள்ளை''' (1846-1928) புகழ் வாய்ந்த வழக்குரைஞராகவும் தமிழ் அறிஞராகவும் விளங்கியவர்.தமிழ் வரலாறு என்னும் நூலை இரண்டு தொகுதிகளாக எழுதி வெளியிட்டவர்.
 
==பிறப்பு,கல்வி,பணி==
 
சீனிவாசன் பிள்ளை பிறந்த ஊர் அரியலூருக்கு அருகில் உள்ள கீழப்பழுவூர் ஆகும். அவர் தந்தை சிவசிதம்பரம் பிள்ளை ஒரு இரத்தின வணிகர் ஆவார். தொடக்கக் கல்வியை கீழப் பழுவூரிலும் கல்லூரிப் படிப்பை கும்பக்கோணம் கல்லூரியிலும் முடித்தார்.பின்னர் சட்டக் கல்வியும் படித்து வழக்கறிஞர் ஆனார்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணி செய்தார். நாகப்பட்டினத்திலும் தஞ்சையிலும் வழக்குரைஞராகப் பணியாற்றினார். தஞ்சை நகரவைத் தலைவராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப் பட்டு அப்பதவியை வகித்தார்.
 
==தமிழ்ப் பணி==
 
தமிழ் இலக்கியங்களையும் கல்வெட்டு செப்பேடு ஓலைச்சுவடி ஆகியனவற்றைப் படித்தார்.நன்னூல், திருக்குறள், திருக்குறளின் பரிமேலழகர் உரை ஆகியவற்றை ஆழமாகப் படித்து மனனம் செய்தார். இங்ஙனம் தமிழ்ப் புலமையை வளர்த்துக் கொண்ட சீனிவாசன் பிள்ளை 'தமிழ் வரலாறு' என்னும் நூலை இரண்டு பகுதிகளாக எழுதி வெளியிட்டார்.முதல் பகுதியில் தமிழ் மொழி பற்றியும் இரண்டாம் பகுதியில்
 
செம்மொழிச் செம்மல்கள்-2 (ஆசிரியர் முனைவர் பா.இறையரசன், தமிழ்மண் பதிப்பகம்,சென்னை)
 
பகுப்பு:[[தமிழ் அறிஞர்கள் வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1656746" இருந்து மீள்விக்கப்பட்டது