"தஞ்சை சீனிவாசன் பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
 
தமிழ் இலக்கியங்களையும் கல்வெட்டு செப்பேடு ஓலைச்சுவடி ஆகியனவற்றைப் படித்தார்.நன்னூல், திருக்குறள், திருக்குறளின் பரிமேலழகர் உரை ஆகியவற்றை ஆழமாகப் படித்து மனனம் செய்தார். இங்ஙனம் தமிழ்ப் புலமையை வளர்த்துக் கொண்ட சீனிவாசன் பிள்ளை 'தமிழ் வரலாறு' என்னும் நூலை இரண்டு பகுதிகளாக எழுதி வெளியிட்டார்.முதல் பகுதியில் தமிழ் மொழி பற்றியும் இரண்டாம் பகுதியில்
சங்கக் காலம் முதல் சமய எழுச்சிக் காலம் வரை தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதினார். தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் முதன்மையான நூலாகவும் தமிழில் வெளிவந்த முதல் நூலாகவும் 'தமிழ் வரலாறு' விளங்குகின்றது. கும்பக்கோணம் கல்லூரியில் தமக்குத் தமிழ் இலக்கியம் பயிற்று வித்த தியாகச் செட்டியாரை மிகவும் மதித்து நினைவு கூர்ந்து அவருக்கு இந்நூலை காணிக்கையாக்கினார்.மேலும்தமிழ்மேலும் தமிழ் வரலாறு தொடர்பான பல குறிப்புகளை இரு பெட்டிகளில் போட்டு இருந்தார்.அப்பெட்டிகளை ஒரு திருடன் வீட்டில் நுழைந்து தூக்கிச் சென்று விட்டக் காரணத்தால் தமிழ் இலக்கியத்தின் மீதி இரண்டு பகுதிகளை வெளியிட முடியாமல் போனது.
நாவலர் சோமசுந்தர பாரதியார் தி.ரு வி.க உ.வே சா போன்ற தமிழ் அறிஞர்களுடன் நட்பு பூண்டு அன்பு பாராட்டி வந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1656750" இருந்து மீள்விக்கப்பட்டது