செறிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
இக்கணியத்துக்கு அலகு இல்லை. இதனை பின்னமாகவோ, தசமமாகவோ, சதவீதத்திலோ குறிப்பிட முடியும். உதாரணமாக 100 ml அல்கஹோல்-நீர் கரைசலொன்று 0.23 கனவளவு/கனவளவு வீதத்தைக் கொண்டிருந்தால் அக்கரைசலில் 23 ml அல்கஹோல் அடங்கியுள்ளது என குறிக்கப்படும். இதனை 23% என்று சதவீதத்தாலும் குறிக்க முடியும்.
 
==தொடர்புடைய வேறு கணியங்கள்==
 
ஒரு கரைசலை விளக்குவதில் பின்வரும் கணியங்களும் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் பின்வரும் கணியங்கள் கரைசலின் செறிவைக் குறிப்பதில்லை.<ref name="goldbook" />
 
===மூலல் திறன்===
 
ஒரு அலகு திணிவுடைய கரைப்பானால் கரைக்கப்பட்டுள்ள கரையத்தின் அளவு என மூலல் திறன் வரையறுக்கப்பட்டுள்ளது. இதனைக் கணிப்பதற்கு கரைசலில் உள்ள கரையத்தின் மூல்களின் அளவை கரைப்பானின் திணிவால் பிரிக்க வேண்டும்.
:<math>b_i = \frac{n_i}{m_\mathrm{கரைப்பான்}}.</math>
இக்கணியம் mol/kg என்ற அலகால் பிரிக்க வேண்டும்.
 
===மூல் பின்னம்===
 
கரைசலில் கரைந்துள்ள கரையத்தின் மூல்களை கரைசலிலுள்ள அனைத்துப் பொருட்களின் (கரையம்+கரைப்பான்) மொத்த மூல்களால் பிரிப்பதால் மூல் பின்னம் கணிக்கப்படும்.
:<math>x_i = \frac {n_i}{n_\mathrm{tot}}.</math>
இதன் சர்வதேச நியம அலகு mol/mol ஆகும். எனினும் இது ஒரு பரிமாணமற்ற கணியமாகும்.
 
===திணிவுப் பின்னம்===
 
கரைசலில் கரைக்கப்பட்ட கரையத்தின் திணிவை கரைசலின் மொத்தத் திணிவால் பிரிப்பதன் மூலம் திணிவுப் பின்னம் கணிக்கப்படும்.
:<math>w_i = \frac {m_i}{m_\mathrm{tot}}.</math>
இதன் அலகு kg/kg ஆகும். அலகில்லாமல் சதவீதம், தசமதானம் ஆகியவற்றாலும் குறிக்க முடியும்.
 
==மேற்கோள்கள்==
<references/>
[[பகுப்பு:வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/செறிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது