பாக்டீரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 54:
 
==கலக் கட்டமைப்பு==
[[File:Average prokaryote cell- enta.svg.png|thumb|right500px|கிராம்-நேர் பாக்டீரியா ஒன்றின் கலக்கட்டமைப்பு.]]
பக்டீரியக் கலங்கள் உலகில் மிகச்சிறிய கலங்களை ஆக்கின்றன. இவை பொதுவாக மைக்ரோமீற்றரில் அளவிடப்படும் வீச்சில் காணப்படுகின்றன. எனினும் இவை கலத்தினுள் பல்வேறு கட்டமைப்புக்களைக் கொண்டுள்ளன. மெய்க்கருவுயிரி கலத்துக்கு ஒப்பிடக்கூடியளவுக்குச் சிக்கலான அனுசேபத்தைக் கொண்டுள்ளன. பொதுவாக மெய்க்கருவுயிரிக் கலங்களின் பத்திலொரு பகுதியின் அளவிலேயே இவை காணப்படுகின்றன.
 
வரிசை 61:
பாக்டீரியாக்களில் திட்டமான கரு காணப்படுவதில்லை. டி.என்.ஏ சுயாதீனமாகக் கலத்தின் குழியவுருவில் வளைய நிறமூர்த்தம்/ வளைய [[டி.என்.ஏ]]யாகக் காணப்படும். டி.என்.ஏயுடன் ஹிஸ்டோன் புரதம் சேர்ந்து மெய்க்கருவுயிரிகளை ஒத்த நிறமூர்த்தக் கட்டமைப்பை உருவாக்குவதில்லை. பாக்டீரியாக்களில் மெய்க்கருவுயிரிகளினதை விடச் சிறிய இரைபோசோம் காணப்படுகின்றது. இவை 70S வகை இரைபோசோம்களாகும். பாக்டீரியாக்களில் கிளைக்கோஜன் போன்ற சேதனச் சேர்வைகளின் உணவொதுக்குகளும் காணப்படுகின்றது. சயனோபாக்டீரியாக்களில் ஆக்சிசன் வாயுவைச் சேமிக்கும் வாயுச் சேமிப்புகளும் உள்ளது. சேமித்துள்ள ஆக்சிசன் வாயுவைப் பயன்படுத்தி சயனோபாக்டீரியாக்களால் நீரில் மிதக்கக்கூடியதாக உள்ளது.
 
பாக்டீரியாக்களின் கலச்சுவர் மிகவும் தனித்துவமானது. பாக்டீரியக் கலச்சுவரைக் கொண்டே அவை ஏனைய உயிரினங்களிலிருந்து பிரித்தறியப்படுவதுடன் அவற்றினுள்ளும் வகைப்படுத்தப்படுகின்றன. அனைத்து பக்டீரியாக்களிலும் பெப்டிடோகிளைக்கனாலான (peptidoglycan) கலச்சுவர் காணப்படுகின்றது. கலச்சுவரின் கட்டமைப்பு வேறுபாட்டால் பாக்டீரியாக்களின் இரு வகைகளும் [[கிராம் சாயமேற்றல்|கிராம் சாயமேற்றலுக்கு]] வெவ்வேறு விளைவைக் கொடுக்கின்றன. கிராம் நேர் பக்டீரியாக்களில் தடிப்பான [[பெப்டிடோகிளைக்கன்]] கலச்சுவர் உள்ளது. கிராம் எதிர் பாக்டீரியாக்களில் மெல்லிய பெப்டிடோகிளைக்கன் கலச்சுவரும் அதற்கு வெளியே இலிப்போ-பல்சக்கரைட்டு மென்சவ்வும் காணப்படுகின்றன.
 
==இனப்பெருக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/பாக்டீரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது