"சிற்பம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
 
* [[புடைப்புச் சிற்பம்]]: இவை பின்னணியுடன் பகுதியளவு இணைந்து புடைத்தாற்போன்று அமைக்கப்படும். இவற்றுள் பல வகை உண்டு. இவை சுவரிலிருந்து புடைத்திருக்கும் அளவிற்கேற்ப அடித்தளத் தோற்றம், உயர் தோற்றம், இடைத்தோற்றம், புதைவுறுத் தோற்றம் என வகைப்படுத்தப்படுகின்றன. பண்டைய எகிப்திய சுவர் சிற்பங்கள் புதைவுறு தோற்றச் சிற்பங்களாகும். புடைப்புச் சிற்பங்கள் பெருமளவு குழுவான உருவங்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட செய்திகளைச் சொல்லும் கதையமைப்பினை வெளிப்படுத்த பயன்படுத்தப்படுவன. இது கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் ஓர் அரிய தொழில் நுணுக்கத் திறனாகும். இவை கட்டிடங்களின் தூண்கள்,சுவர்கள் இவற்றை அலங்கரிக்க அமைக்கப்படுகின்றன. சிறிய அளவிலான சிற்பங்கள் மண்பாண்டங்கள், உலோக வேலைப்பாடுகள், அணிகலன்கள் ஆகியவற்றிலும் இவ்வகைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இவை நினைவுச் சின்னங்கள், நெடுகற்கள்நடுகற்கள், கற்சிலைகள் மற்ரும்மற்றும் கல்வெட்டுகளை அலங்கரிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன.
 
மற்றொரு வகையான சிற்பங்கள் செதுக்குச் சிற்பங்கள் ஆகும். இவை சிலை செய்யப்பயன்படும் உலோகம் அல்லது பொருட்களிலிருந்து தேவையற்ற பொருட்களை செதுக்கி நீக்கிய பின்பு தோற்றம் பெருபவையாகும். ஒரு சாதாரண மரம், கல் அல்லது உலோகத்திலிருந்து இவை நவீன தொழில் நுட்பங்கள் மூலம் தேவையற்ற பகுதிகளை நீக்க சிற்பங்களாக உயிர்த்தெழுகின்றன. மேலும் பற்றவைத்தல், முத்திரையிடுதல், உருக்கிவார்த்தல் போன்ற முறைகளாலும் சிற்பங்கள் உருவாக்கப்படுகின்றன இம்முறையின் மூலம் மிக அதிகமான சிற்பங்களை குறைந்த நேரத்தில் உருவாக்க இயலும்.
15,070

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1658255" இருந்து மீள்விக்கப்பட்டது