அகக்கலவுருச் சிறுவலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{unreferenced}}
சிNo edit summary
வரிசை 1:
{{unreferenced}}
[[Image:Clara cell lung - TEM.jpg|thumb|300px|அழுத்தமற்ற அகக்கலவுருச் சிறுவலை ஒன்றின் நுணுக்குக்காட்டிப் படம்]]
 
'''அகக்கலவுருச் சிறுவலை''' என்பது, மெய்க்கருவுயிரி கலங்களில் தட்டையாக்கப்பட்ட பை வடிவிலும் குழாயுருவான பை வடிவிலும் காணப்படும் ஒற்றை மென்சவ்வால் சூழப்பட்ட கலப்[[புன்னங்கம்]] ஆகும். இவை அனேகமான [[மெய்க்கருவுயிரி]] கலங்கலினுள் காணப்படும் கலத்தக மென்சவ்வுகளின் வலையமைப்பாகும்<ref>Soltys, B.J., Falah, M.S. and Gupta, R.S. (1996) Identification of endoplasmic reticulum in the primitive eukaryote Giardia lamblia using cryoelectron microscopy and antibody to Bip. J. Cell Science 109: 1909-1917.</ref>. அகக்கலவுருச் சிறுவலைகள் வெளிக் கருவுறை/ வெளிக் கரு மென்சவ்வுடன் இணைக்கப்பட்டுள்ளன. சில மெய்க்கருவுயிரி கலங்களிலும் (செங்குருதிக் கலங்கள், [[விந்து]]க் கலங்கள்), அனைத்து நிலைக்கருவிலி (புரோக்கரியோட்டா) கலங்களிலும் அகக்கலவுருச் சிறுவலை இருப்பதில்லை. இரு வகையான அகக்கலவுருச் சிறுவலைகள் உள்ளன: அவை அழுத்தமற்ற அகக்கலவுருச் சிறுவலை (RER) மற்றும் அழுத்தமான அகக்கலவுருச் சிறுவலை (SER) என்பனவாகும். இவை இவற்றின் மென்சவ்வில் [[இரைபோசோம்|இறைபோசோம்கள்]] பதிக்கப்பட்டுள்ளனவா/ இல்லையா என்பதை அடிப்படையாகக் கொண்டே வகைப்படுத்தப்படுகின்றன. அழுத்தமற்ற அகக்கலவுருச் சிறுவலையின் மென்சவ்வில் அதிகளவான இறைபோசோம்கள் பதிக்கப்பட்டுள்ளன. அழுத்தமான அகக்கலவுருச் சிறுவலையில் இறைபோசோம்கள் இருப்பதில்லை. RER இன் மேற்பரப்பிலுள்ள இறைபோசோம்கள் [[புரதம்|புரதங்களை]] உற்பத்தி செய்து RER இன் உள்ளிடத்துக்குள் அனுப்புகின்றன. RERஐ புரத உற்பத்தி அதிகளவில் நடைபெறும் ஈரற்குழியங்களில் அதிகளவில் அவதானிக்கலாம். SER கொழுப்பு உற்பத்தியுடனும், காபோவைதரேற்று அனுசேபத்துடனும் தொடர்புபட்ட கலப்புன்னங்கமாகும். இரு வகையான அகக்கலவுருச் சிறுவலைகளினதும் பொதுவான தொழில் பதார்த்தங்களின் கலத்தகக் கடத்தலாகும்.
 
==வகைகள்==
வரி 18 ⟶ 17:
===அழுத்தமற்ற அகக்கலவுருச் சிறுவலை===
 
இதன் மென்சவ்வு பல இறைபோசோம்களைக் கொண்டிருக்கும். இவை அனேகமாத் தட்டையான பையுருவிலேயே காணப்படும். <ref name="ShibataVoeltz2006">{{cite journal|last1=Shibata|first1=Yoko|last2=Voeltz|first2=Gia K.|last3=Rapoport|first3=Tom A.|title=Rough Sheets and Smooth Tubules|journal=[[Cell (journal)|Cell]] |volume=126|issue=3|year=2006|pages=435–439|issn=00928674|doi=10.1016/j.cell.2006.07.019}}</ref>இவற்றால் தொகுக்கப்படும் புரதங்களில் மாற்றங்களை ஏற்படுத்திக் கலத்தினுள் கடத்துதலே RERஇன் பிரதான தொழிலாகும். உருவாக்கப்படும் புரதங்கள் கருவுக்கு நேரடியாகக் கடத்தப்படுவதுடன் கலத்துக்கு வெளியே கடத்தப்பட வேண்டுமெனில் அது செலுத்தற் புடகங்களை உருவாக்கி [[கொல்கி உபகரணம்|கொல்கி உபகரணத்துக்குக்]] கடத்தப்பட்ட பின்னர் கொல்கி உபகரணம் உருவாக்கும் கொல்கிப் புடகம் மூலம் கலத்துக்கு வெளியே அனுப்பப்படும். பிரதானமாக கருவுக்குத் தேவைப்படும் மற்றும் கலத்துக்கு வெளியே அனுப்பப்படும் புரதங்களே RERஇல் இணைக்கப்பட்டுள்ள இறைபோசோம்களால் உருவாக்கப்படுகின்றன.
தொழில்கள்:
* [[இலைசோசோம்]]களுக்குத் தேவையான நீர்ப்பகுப்பு நொதியப் புரதங்களை உற்பத்தி செய்தல் (இணைக்கப்பட்டுள்ள இறைபோசோம்களே உருவாக்கின்றன).
வரி 30 ⟶ 29:
இவற்றில் இறைபோசோம்கள் இருப்பதில்லை. SER அனேகமாக குழாயுருவான வடிவத்திலேயே காணப்படும். இவை [[காபோவைதரேற்று]], [[இலிப்பிட்டு]] ஆகியவற்றின் அனுசேபத்துடன் தொடர்புபட்டதாகும்.
தொழில்கள்:
* இலிப்பிட்டு, ஸ்தெரொய்ட்டு ஆகியவற்றின் தொகுப்பு<ref>{{cite news |title=Functions of Smooth ER |publisher=University of Minnesota Duluth}}<!--|accessdate=16 December 2012--></ref>.
* கலத்தகக் கடத்தல்
* [[தசை]] நார்களில் Ca<sup>2+</sup> அயன்களின் சேமிப்பு மற்றும் விடுவிப்பு. தசைக்கலங்களில் உள்ள SER விசேடமாக ''தசை முதலுருச் சிறுவலை'' எனப்படும்.
 
==மேற்கோள்கள்==
<references/>
[[பகுப்பு:உயிரணுவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/அகக்கலவுருச்_சிறுவலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது