செங்குருதியணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
வரிசை 4:
இவை வட்ட வடிவில் இருபுறமும் குழிந்த செல்கள் இச்செல்களில் உட் [[கரு]] இல்லை. [[ஆண்]]களின் இரத்தத்தில் ஒவ்வொரு கன மில்லிமீட்டர் இரத்தத்திலும் ஏறக்குறைய 5.2 மில்லியன் சிவப்பணுக்கள் உண்டு. (அளவீடு 4.2-5.8 மில்லியன்) [[பெண்]]களின் இரத்தத்தில் ஒரு கன மில்லி மீட்டர் இரத்தத்தில் 4.5 மில்லியன் சிவப்பணுக்கள் (அளவீடு 3.3-5.2 மில்லியன்) அமைந்திருக்கும். தட்டு வடிவில் உள்ள சிவப்பணுவின் குறுக்கு விட்டத்தின் அளவு 7.5&nbsp;mm ஆகும். ஒவ்வொரு செக்கனிலும் 2.4 மில்லியன் செங்குருதியணுக்கள் உருவாக்கப்படுகின்றன<ref name="Sackmann">[[Erich Sackmann]], ''Biological Membranes Architecture and Function.'', Handbook of Biological Physics, (ed. R.Lipowsky and E.Sackmann, vol.1, Elsevier, 1995</ref>. [[எலும்பு மச்சை]]யில் இவை உற்பத்தியாகின்றன. இவை குருதியில் 100-120 நாட்கள் இருந்து, பின்னர் முதிர்வடைந்த சிவப்பணுக்கள் [[பெருவிழுங்கி]] (Macrophage) இனால், [[கல்லீரல்]], [[மண்ணீரல்|மண்ணீரலில்]] அழிக்கப்படுகின்றன.
[[படிமம்:Red White Blood cells.jpg|right|200px|சிவப்பணுவும் வெள்ளையணுவும்]]
 
==தொழில்கள்==
* பிரதான தொழில்: செங்குருதிக் கலங்களின் பிரதான தொழில் [[ஆக்சிசன்]] வாயுவைக் காவுவதும் விடுவிப்பதுமாகும். செங்குருதிக் கலங்களிலுள்ள ஹீமோகுளோபின் புரதத்திலுள்ள இரும்பு அயன்களுடனேயே ஆக்சிசன் இணைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டு பின் ஆக்சிசன் குறைவான இடத்தில் விடுவிக்கப்படுகின்றது. குருதியில் கொண்டு செல்லப்படும் ஆக்சிசனில் 98%க்கும் மேற்பட்ட வீதமான ஆக்சிசன் செங்குருதிக் கலங்களிலேயே காவப்படுகின்றன.
* குருதியில் காவப்படும் 5-10% காபனீரொக்சைட்டை ஹீமோகுளோபினின் புரதப்பகுதியோடு இணைத்துக் காவி விடுவித்தல். (குருதி முதலுருவில் கரைந்த இரு காபனேற்று அயன் (HCO<sub>3</sub><sup>-</sup>) வடிவில் காவப்படுவதே பிரதான முறையாகும். கரைந்த CO<sub>2</sub> வடிவிலும் காவப்படுகின்றது)
* காபனீரொக்சைட்டுக் கொண்டு செல்லலில் இக்கலத்திலுள்ள நொதியங்கள் உதவுகின்றன.
 
==முள்ளந்தண்டுளிகளின் செங்குருதியணு==
 
[[Image:Erythrocytes in vertebrates.jpg|thumb|200px|முள்ளந்தண்டுளிகளிடையே செங்குழியப் பருமனின் அடிப்படையில் பெரும் வேறுபாடு உள்ளது. முலையூட்டிகளின் செங்குழியத்தில் கரு இல்லை. அத்துடன் முலையூட்டிகளின் செங்குழியப் பருமன் ஏனைய வகை முள்ளந்தண்டுளிகளினதை விட மிகவும் குறைவாகும்.<ref name="Gulliver1875">{{Cite journal | volume = 1875 | pages = 474–495 | last = Gulliver | first = G. | title = On the size and shape of red corpuscles of the blood of vertebrates, with drawings of them to a uniform scale, and extended and revised tables of measurements | journal = Proceedings of the Zoological Society of London | year = 1875 }}</ref>]]
முள்ளந்தண்டுளிகளில் மாத்திரமே செங்குருதியணு காணப்படுகின்றது. இவற்றில் இனத்துக்கினம் செங்குருதியணுவின் வடிவமும், கட்டமைப்பும் மாற்றமடைகின்றது. [[முலையூட்டி]]கள் தவிர ஏனைய அனைத்து முள்ளந்தண்டுளிகளின் ([[மீன்]]கள், [[ஈரூடகவாழி]]கள், ஊர்வன, [[பறவை]]கள்) செங்குருதிக் கலங்களிலும் [[உயிரணுக் கரு|கரு]] உள்ளது. செங்குருதிக் கலங்களே குருதிக்குச் சிவப்பு நிறத்தைக் கொடுக்கின்றன. செங்குருதிக் கலங்களின் ஹீமோகுளோபினின் ஹீம் கூட்டத்தின் இரும்பு அயன்களாலேயே இரத்தம் சிவப்பு நிறமாகின்றது. செங்குருதிக் கலங்கள் நீக்கப்பட்ட குருதி முதலுரு வைக்கோல் மஞ்சள் நிறத்திலேயே இருக்கும்.
உலகில் குடும்பம் ''[[Channichthyidae]]'' மீன்களில் மாத்திரமே செங்குருதிக் கலங்களோ ஈமோகுளோபினோ காணப்படுவதில்லை. இவை அந்தார்ட்டிக் சமுத்திரத்தின் குளிர் நீரில் வாழ்வதால் அந்நீரே அவற்றுக்குத் தேவையான ஆக்சிசனைக் காவுகின்றது. (குளிர் நீரில் ஆக்சிசனின் கரைதிறன் அதிகமாகும்). பொதுவாக செங்குருதிக் கலத்தின் விட்டம் குருதி மயிர்க்குழாயின் விட்டத்தை விட 25% அதிகமாகும். எனினும் செங்குருதிக் கலங்களின் கலமென்சவ்வின் மீள்தன்மை (Elasticity) காரணமாக அக்குறுகிய இடைவெளியூடாகவும் நசிந்து கொண்டு செல்கின்றன. இவ்வாறு இருப்பதால் செ.கு.கலங்கள் மெதுவாக மயிர்த்துளைக் குழாயூடாக செல்கின்றன. இம்மெதுவான அசைவால் அதிகளவு ஆக்சிசன் பரவக் கூடியதாக உள்ளது.
===ஈமோகுளோபின்===
முள்ளந்தண்டுளிகளின் பிரதான சுவாச நிறப்பொருள் ஈமோகுளோபின் ஆகும். ஈமோகுளோபினில் குளோபின் எனும் புரதப்பகுதியும் ஹீம் எனும் அயன் பகுதியும் உண்டு. ஆக்சிசன் இரும்பு அயனோடு இணையும்; CO<sub>2</sub> புரதப்பகுதியோடு இணையும். எனவே ஆக்சிசன் கொண்டு செல்லலுக்கு காபனீரொக்சைட்டு போட்டியாக இருப்பதில்லை. எனினும் புகையிலுள்ள [[காபனோரொக்சைட்டு]] (CO) இரும்போடு இணைவதால் ஆக்சிசன் கொண்டு செல்லலுக்குப் போட்டியாக அமைந்து ஆக்சிசன் காவலைக் குறைக்கின்றது. ஒரு ஈமோகுளோபின் புரதத்தில் நான்கு இரும்பு அயன்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு செங்குருதிக் கலத்தில் கிட்டத்தட்ட 270 மில்லியன் ஈமோகுளோபின் மூலக்கூறுகள் உள்ளன.
 
==முலையூட்டிகளின் செங்குருதிக் கலம்==
மனிதன் உட்பட முலையூட்டிகளின் செங்குருதிக் கலம் ஆக்சிசன் காவல் வினைத்திறனை அதிகரிப்பதற்கென பல [[இசைவாக்கம்|இசைவாக்கங்களைக்]] கொண்டுள்ளது. அவற்றில் கருவோ, இழைமணியோ இருப்பதில்லை. எனவே இவற்றின் செங்குருதிக் கலங்களில் [[டி.என்.ஏ]] இருப்பதில்லை. முலையூட்டிகளின் செங்குருதிக் கலங்களுக்குத் தேவையான சக்தி காற்றின்றிய சுவாசம் மூலமே பெறப்படுகின்றது.
இழைணி இன்மையால் கிடைக்கும் நன்மை:
* காவப்படும் ஆக்சிசன் காவிக் கலமான செ.கு.கலத்தால் உபயோகிக்கப்பட மாட்டாது.
கரு இல்லாததால் கிடைக்கும் நன்மை:
* கரு பிடிக்கும் கனவளவு மீதப்படுத்தப்பட்டிருப்பதால், அதிக ஆக்சினைக் காவலாம்.
* டி.என்.ஏ இல்லாததால் செ.கு.கலங்களை எந்தவொரு [[வைரஸ்|வைரஸ்ஸாலும்]] தாக்கி அழிக்க முடியாது.
முலையூட்டிகளின் செங்குருதிக் கலங்கள் இரட்டைக் குழிவான தட்டுருவானவை. இவ்விரட்டைக் குழிவும் ஆக்சிசன் பரவலடையும் மேற்பரப்பின் பரப்பளவை அதிகரிப்பதாக உள்ளது.
 
===செங்குழிய வாழ்க்கைக் காலம்===
 
செங்குழியங்கள் பொதுவாக செவ்வென்பு மச்சையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு செக்கனிலும் 2-4 மில்லியம் செங்குழியங்கள் உருவாகின்றன. இவற்றின் உற்பத்திக்கு இரும்புச்சத்து, புரதம், ஃபோலிக் அமிலம், வைட்டமின் B12 என்பன அவசியமாகும். ஒவ்வொரு செங்குழியமும் முதல் 7 நாட்களை செவ்வென்பு மச்சையினுள் ஆரம்ப நிலையிலும், கிட்டத்தட்ட 120 நாட்களை குருதியிலும் கழிக்கின்றன. செங்குழியங்களின் முன்னோடிக் கலங்கள் வலையுருக்குழியங்கள் ஆகும். வாழ்வுக் காலத்தை முடித்த செங்குழியங்களும், காயமடைந்த அல்லது வித்தியாசமான செங்குழியங்களும் குருதியிலிருந்து நீக்கப்படுகின்றன. பிரதானமாக [[மண்ணீரல்|மண்ணீரலிலும்]], [[ஈரல்|ஈரலிலும்]] இவை நீக்கப்படுகின்றன. ஈரலில் அழிக்கப்படும் செங்குழியங்களின் கூறுகளிலிருந்தே [[பித்த நிறப்பொருள்|பித்த நிறப்பொருட்கள்]] உருவாகின்றன.
கருப்பையில் உள்ள முதிர்மூலவுரு நிலையில் மாத்திரமே செங்குழியங்கள் பிரதானமாக ஈரலில் உருவாக்கப்படுகின்றன.
===மனிதரில் செங்குழியம்===
 
[[Image:Erytrocyte deoxy to oxy v0.7.gif|thumb|200px|மனித செங்குழியம் உடலை முழுமையாக சுற்றிவர 20 செக்கன்கள் எடுக்கும். இக்காலத்தில் இதில் ஆக்சிசன் அளவு மாறுபடலை இப்படிமம் காட்டுகின்றது. நுரையீரல் சிற்றறையில் உள்ளபோது ஆக்சிசன் அளவு உச்சத்தில் உள்ளது.]]
*விட்டம்:6.2–8.2 µm
*தடிப்பு:0.8–1 µm
*மேற்பரப்பளவு:136 μm<sup>2</sup>
*வடிவம்:இருகுவான வட்டத்தட்டு வடிவம்
*எண்ணிக்கை: மொத்தமாக 20-30 திரில்லியன். இது உடலில் உள்ள மொத்தக் கலங்களின் எண்ணிக்கையில் கால்ப்பங்காகும்.
:ஆண்களில்- 5.5-6 மில்லியன்/µL
:பெண்களில்- 4.5-5 மில்லியன்/µL
 
==மேற்கோள்கள்==
வரி 12 ⟶ 50:
 
[[பகுப்பு:குருதி]]
 
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/செங்குருதியணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது