"பயனர்:தினேஷ்குமார்/மணல்தொட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

757 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
(edited with ProveIt)
((edited with ProveIt))
| website = www.marudhamalaimurugantemple.org/
}}
 
 
'''மருதமலை முருகன் கோயில்''' , [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரிலிருந்து]] 15 கிமீ தொலைவிலுள்ள [[மருதமலை]] மேல் அமைந்துள்ளது. [[அருணகிரிநாதர்|அருணகிரிநாதரால்]] [[திருப்புகழ்|திருப்புகழில்]] பாடப்பெற்ற தலமிது. இக்கோவிலின் முதன்மைக் கடவுளான [[முருகன்]], இங்கு "சுப்பிரமணிய சுவாமி" என்றும் ''தண்டாயுதபாணி'' என்றும் ''மருதாசலமூர்த்தி'' என்றும் அழைக்கப்படுகிறார். மருதமலையின் அடிவாரத்தில் ''தான்தோன்றி விநாயகர்'' என்ற ஒரு சிறிய விநாயகர் கோயிலும் உள்ளது.
 
முருகப்பெருமானின் ஏழாவது படைவீடாகக் கருதப்படும் மருதமலை, முற்காலத்தில் கொங்கு வேட்டுவ மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. மருதமலை முருகன் கோயில் தற்போது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலமான ''திருமுருகன்பூண்டி'' கோயிலில், கல்வெட்டுகளில் மருதமலை கோயில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகத் தகவல்கள் உள்ளன.<ref name="திருமுருகன்பூண்டி">{{cite web | url=http://www.marudhamalaimurugantemple.org/TempleHistroy.aspx | title=திருமுருகன்பூண்டி கோயில் கல்வெட்டில் மருதமலை பற்றிய குறிப்பு | accessdate=மே 20, 2014}}</ref>
 
முருகன் கோயிலுக்கு அருகில் பாம்பாட்டி சித்தரின் குகைக்கோயில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான பாம்பாட்டி சித்தர், இந்த குகையில் சில காலம் வசித்து வந்தார். பல மூலிகைகளின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்களைப் பற்றிய அவரது குறிப்புகள் மிகவும் சிறப்பானவையாகக் கருதப்படுகிறது.
==பாம்பாட்டி சித்தர் குகைக்கோயில்==
[[File:Pambatti siddhar sannidhi 1.jpg|thumb|200|பாம்பாட்டி சித்தர் சன்னிதி]]
இக்கோவிலின் தெற்குமூலையில் பாம்பாட்டி சித்தர் குகைக்கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுகள் கீழிறங்குகின்றன. இக்குகைக்கோயில் சிறு குடைவரை அமைப்பில் உள்ளது.<ref name="மருதமலை சன்னிதிகள்">{{cite web | url=http://www.marudhamalaimurugantemple.org/AboutMarudhamalai.aspx | title=பாம்பாட்டி சித்தர் மற்றும் பஞ்சமுக விநாயகர் சன்னிதி | accessdate=மே 20, 2014}}</ref> உட்புறத்தில் ஒரு பாறை பாம்பு வடிவில் உள்ளது. பாம்பாட்டி சித்தருக்கு முருகன் பாம்பு வடிவில் காட்சியளித்ததார் என்பது மரபு வரலாறு. பாம்பாட்டி சித்தர் சன்னிதி முன்புறமுள்ள தியான மண்டபத்தில் இங்கு வருகை தருவோர் அமர்ந்து அமைதியாக தியானம் செய்து வழிபடுகின்றனர். தண்டாயுதபாணி கோயில் தலவிருட்சம் இக்கோயிலுக்கு முன்னால் உள்ளது. இக்கோயிலுக்கு இறங்கி வரும் பாதையில் சப்த கன்னியருக்கு ஒரு சிறு சன்னிதி அமைந்துள்ளது.
 
==பஞ்ச விருட்ச விநாயகர்==
[[File:Maruthamalai Pancha virutcha Vinayagar.jpg|thumb|200px|பஞ்ச விருட்ச விநாயகர்]]
ஆதிமூலஸ்தானத்திற்கும் முன்மண்டபத்திற்கும் தண்டாயுதபாணி சன்னிதி மண்டபத்திற்கும் இடையே பஞ்ச விருட்ச விநாயகர் சன்னிதி உள்ளது.<ref name="மருதமலை சன்னிதிகள்" /> பொதுவாக அரசமரத்தடியில் காணப்படும் விநாயகர் இங்கு அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை என ஐந்து மரங்களுக்கடியில் ஐந்து முகங்களுடன் அமைந்துள்ளார். நடைப்பயணமாக மலையேறி வருவோர் இந்த விநாயகரைத் தாண்டிதான் தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்ல வேண்டும்.
 
==நடைபயணப் பாதை==
==திருப்புகழ் பாடல்==
அருணகிரிநாதர் திருப்புகழில் மருதமலை முருகனைப் பாடியுள்ளார்.<ref>ஆதாரம் ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகளின் ‘ மாக்ருதா புஷ்பமாலையாம்’ திருப்புகழ் - சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை, சேலம். பதிப்பாசிரியர். வலையபேட்டை ரா. கிருஷ்ணன். ஆகஸ்ட் 2006 பக் 660</ref>
<prepoem>
திரிபுரம் அதனை ஒரு நொடியதனில்
எரிசெய் தருளிய சிவன் வாழ்வே!
அடியவர்வினையும் அமரர்கள் துயரும்
அற அருள் உதவு பெருமாளே!
</prepoem>
 
==படத்தொகுப்பு==
376

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1662711" இருந்து மீள்விக்கப்பட்டது