ஆர். உமாநாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்* (edited with ProveIt)
வரிசை 52:
==வாழ்க்கைச் சுருக்கம்==
1922ஆம் ஆண்டு [[கேரளம்|கேரளத்தின்]] [[காசர்கோடு|காசர்கோட்டில்]]<ref>{{cite web | url=http://www.bbc.co.uk/tamil/india/2014/05/140521_umanathobit.shtml | title=மார்க்ஸிஸ்ட் தலைவர் ஆர்.உமாநாத் காலமானார் | publisher=[[பி. பி.சி.]] | date=மே 21, 2014 | accessdate=21 மே 2014}}</ref> இராம்நாத் ஷெனாய், நேத்ராவதி தம்பதியினருக்கு கடைசி மகனாகப் பிறந்த இவர் தமது மாணவப் பருவத்தில் [[சென்னை|சென்னைக்கு]] குடிபெயர்ந்தார். [[சிதம்பரம்|சிதம்பரத்தில்]] உள்ள [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்]] இளங்கலைப் பட்டப்படிப்பின்போது இந்திய பொதுவுடமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அரசியல் வாழ்வில் நுழைந்தார். 1940ல் சென்னை சதி வழக்கில் [[பி. ராமமூர்த்தி]]யுடன் கைதுசெய்யப்பட்ட அவர் மூன்று ஆண்டுகளை சிறையில் கழித்தார்.
 
அவருடைய அரசியல் வாழ்க்கையில் ஒட்டுமொத்தமாக ஒன்பதரை ஆண்டுகளை சிறையில் கழித்திருக்கும் அவர், 7 ஆண்டுகள் தலைமறைவாகவும் இருந்திருக்கிறார்<ref name=UA01>{{cite news|last=Kolappan|first=B|title=CPI(M) leader Umanath passes away|url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/cpim-leader-umanath-passes-away/article6032060.ece|accessdate=21 May 2014|date=21 may 2014}}</ref>. இந்தியா விடுதலை பெற்ற பிறகு 1949ல் ரயில்வே தொழிலாளர் போராட்டத்தை தலைமையேற்று நடத்தினார். நெருக்கடி நிலை காலகட்டத்திலும் பல அடக்குமுறைகளைச் சந்தித்துள்ளார்.
 
[[புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி|புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியிலிருந்து]] 1962இலும் 1967இலும் இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். [[நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி)|நாகப்பட்டிணம் தொகுதியிலிருந்து]] 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
==தனி வாழ்க்கை==
1952ஆம் ஆண்டு [[பாப்பா உமாநாத்]]தை [[திராவிடக் கழகம்|திராவிட இயக்கத்]] தலைவர் [[பெரியார்]] தலைமையில் திருமணம் செய்தார். பாப்பா உமாநாத் 2010ஆம் ஆண்டில் காலமானார். இந்தத் தம்பதிக்கு இலட்சுமி, [[உ. வாசுகி|வாசுகி]], நிர்மலா என மூன்று மகள்கள் இருக்கின்றனர். இவர்களில் மருத்துவரான லட்சுமி ஏற்கனவே இறந்துவிட்டார்.
 
உடல் நலக் குறைவால் சில காலம் அவதிப்பட்டு வந்த உமாநாத் திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு காலமானார்.<ref>{{cite web | url=http://www.bbc.co.uk/tamil/india/2014/05/140521_umanathobit.shtml | title=மார்க்ஸிஸ்ட் தலைவர் ஆர்.உமாநாத் காலமானார் | publisher=[[பி. பி.சி.]] | date=மே 21, 2014 | accessdate=21 மே 2014}}</ref>
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._உமாநாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது