"கோச்சடையான் (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,749 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
'''கோச்சடையான்''' என்பது சௌந்தர்யா அஸ்வின் இயக்கி கே.எஸ்.ரவிக்குமார் கதை அமைத்து வரவிருக்கும் முப்பரிமாண இதிகாச தமிழ்த்திரைப்படமாகும்.[[ரசினிகாந்து]] கோச்சடையனாகவும் இவருடன் ஆர். சரத்குமார், ஆதி, தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மணி விஜயகுமார், ஜாக்கி ஷெராப் மற்றும் நாசர் ஆகியோர் நடிக்கின்றனர். இத்திரைப்படமானது முப்பரிமாண தோற்றத்தில், ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவும் ஏர்.ஆர்.ரகுமானின் இசையமைப்பிலும் வெளியாகிறது. இத்திரைப்படமானது தெலுங்கில் ”விக்ரம சிம்கா” எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளதோடு மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளம், ஜப்பானியம் மற்றும் ஆங்கில மொழிகளிலெல்லாம் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளது. படப்பதிவு முடிவுற்ற நிலையில் தற்போது படப்பதிவிற்கு பிந்தைய பணிகள் லண்டன், ஹாங்காங் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
 
==கதை சுருக்கம்==
தன் தந்தை கோச்சடையானின் மரணத்திற்கு காரணமான மன்னன் ரிஷிகோடகனை, மகன் ராணா பழிவாங்குவதுதான் ‘கோச்சடையான்’ படத்தின் கதை.
 
கோட்டைப் பட்டிணத்தின் படைத் தளபதி கோச்சடையானின் (ரஜினி) வீரதீர செயல்களால் அண்டை நாடுகள் பலவற்றை கைப்பற்றுகிறான் மன்னன் ரிஷிகோடகன். ஆனால், மக்களும் அரசவை மந்திரிகளும் மன்னனைவிட கோச்சடையானையே அதிகம் புகழ்வதால், ரிஷிகோடகனுக்கு கோச்சடையான் மீது பொறாமை ஏற்படுகிறது.
 
ஒரு சமயம் பாரசீக நாட்டிற்குச் சென்று ஏராளமான குதிரைகளையும், போர்க்கருவிகளையும் வாங்கிவிட்டு கடல்வழியாகத் திரும்பி வந்துகொண்டிருக்கும் கோச்சடையான் படை மீது எதிரி நாடான கலிங்கபுரி வீரர்கள் ரகசியத் தாக்குதல் தொடுக்கிறார்கள். கோச்சடையான் படை அவர்களை விரட்டியடித்தாலும், அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் உணவுப் பொருட்களில் விஷத்தை கலந்துவிட்டுப் போகிறார்கள் கலிங்கபுரி வீரர்கள். இது தெரியாமல் அதை உண்ணும் ஏராளமான படைவீரர்கள் உயிருக்குப் போராட, வேறு வழியில்லாமல், கலிங்கபுரி மன்னனிடமே தஞ்சமடைகிறான் கோச்சடையான். போர் வீரர்களையும், குதிரைகளையும், போர்க் கருவிகளையும் தன் நாட்டிலேயே விட்டுச்செல்வதாக இருந்தால், விஷத்தை முறிப்பதற்கு உதவி செய்வதாக மன்னன் வாக்குறுதி தருகிறான். தன் வீரர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அனைத்தையும் விட்டுவிட்டு வெறுங்கையுடன் தன் கோட்டைப் பட்டிணத்திற்கு திரும்புகிறான் கோச்சடையான்.
 
நீண்ட நாட்களாக பொறாமை கொண்டிருக்கும் மன்னன் ரிஷிகோடகன் இந்த தருணத்தைப் பயன்படுத்தி கோச்சடையான் மீது தேச துரோகப் பழியைச் சுமத்தி அவனுக்கு மரண தண்டனை கொடுக்கிறான். சாவதற்கு முன் தன் இரண்டு பிள்ளைகளான ராணா, சேனாவிடம் கலிங்கபுரியில் விட்டுவிட்டு வந்த தன் நாட்டு வீரர்களை நீங்கள்தான் திரும்பக் கூட்டிக் கொண்டு வரவேண்டும் என தன் கடைசி ஆசையை சொல்லிவிட்டு உயிரை விடுகிறார் கோச்சடையான். தன் தந்தையின் ஆசையை நிறைவேற்றி அவர் மீது சுமத்தப்பட்ட தேச துரோகப் பழியை ராணா எப்படி போக்குகிறார் என்பதுதான் ‘கோச்சடையான்’ படத்தின் வரலாற்று கதை!
 
==நடிகர்கள்==
20,983

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1664248" இருந்து மீள்விக்கப்பட்டது