ஐஇஇஇ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
}}
 
'''மின்னியல், மின்னணுவியல் பொறியாளர் கழகம்''' (Institute of Electrical and Electronics Engineers), சுருக்கமாகத் தமிழில் '''மிமிபொக''' (அல்லது '''ஐஇஇஇ''', IEEE) என்பது ஓர் இலாபநோக்கற்ற தொழிசார் குமுக நிறுவனம். இதன் தலைமையிடம் [[அமெரிக்கா]]வில் [[நியூ யார்க்]] நகரத்தில் உள்ளது.<ref name="tab_operations_manual">{{cite web|url=http://www.ieee.org/about/volunteers/tab_operations_manual.pdf |title=IEEE Technical Activities Board Operations Manual |publisher=IEEE |accessdate={{Start date|2010|11|10}}}}, section 1.1 IEEE Incorporation</ref> . இது மின்னியல் சார்ந்த தொழில்நுட்பத்தை வளர்த்தெடுக்கும் நோக்கில் அமைந்த உலகளாவிய ஓர் அமைப்பு. இது தற்பொழுது 160 உக்கு160க்கு மேலான நாடுகளில் இருந்து, 400,000 உறுப்பினர்களுக்கும் மேலானவர்கள் பங்கு கொள்ளும் பெரும் நிறுவனமாக வளர்ந்துள்ளது; இதில் 45% உறுப்பினர்கள் ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியே இருப்பவர்கள்<ref name="ieee_quick_facts">{{cite web|url=http://www.ieee.org/about/today/at_a_glance.html#sect1 |title=IEEE at a Glance > IEEE Quick Facts |publisher=IEEE |date={{Start date|2010|12|31}} |accessdate={{Start date|2011|3|7}}}}</ref><ref name="ieee_annual_report_09">{{cite web|url=http://www.ieee.org/documents/ieee_annual_report_09_complete.pdf |title=IEEE 2009 Annual Report |publisher=IEEE |date={{Start date|2010|10}} |accessdate={{Start date|2010|11|11}}}}</ref>
 
== வரலாறு ==
வரிசை 31:
ஐஇஇஇ நிறுவனம், அமெரிக்காவில் உள்ள நியூ யார்க் மாநிலத்தின் இலாபநோக்கமற்ற நிறுவனமாக பதிவுசெய்யப்பெற்றுள்ள ஒன்று.<ref name="tab_operations_manual"/> 1912 ஆம் ஆண்டு தொடங்கப்பெற்ற வானொலிப் பொறியாளர்கள் கழகமும் (Institute of Radio Engineers, IRE)), 1884 ஆம் ஆண்டு தொடங்கப்பெற்ற அமெரிக்க மின்னியல் பொறியாளர் கழகமும் (American Institute of Electrical Engineers, AIEE) ஒன்றிணைந்து, 1963 ஆம் ஆண்டு ஐஇஇஇ என்னும் புதிய மின்னியல், மின்னணுவியல் பொறியாளர்கள் கழகம் (மிமிபொக) உருவானது
 
அமெரிக்க மின்னியல் பொறியாளர் கழகத்தின் ஆர்வங்கள் கம்பிவழி தகவல் அனுப்பும் தொலைகம்பியியல் அலல்துஅல்லது "தந்தியியல்" (telegraphy), தொலபேசியியல்தொலைபேசியியல் (telephony), மின்னாற்றல் உருவாக்கம், வழங்கல் ஆகியவையாக இருந்தன. வானொலிப் பொறியாளர் கழகம் (இன்சிட்டியூட் ஆம் ரேடியோ எஞ்சினீயர்சு) பெரும்பாலும் மின்காந்த அலைகளாகிய வானொலி அலைகள் (ரேடியோ அலைகள்) சார்ந்த பொறியியல் பற்றியதாக இருந்தது. இந்த நிறுவனமுமே இரு வேறு நிறுவனங்களில் ஒன்றிணைப்பால் உருவானது. கம்பியில்லா தொழிற்கலைக் கழகம் (Wireless Institute) என்பதும் தொலைக்கம்பி, கம்பியில்லா பொறியியியலாளர்கள் குமுகம் (Society of Wireless and Telegraph Engineers) என்னும் நிறுவனம் ஆகிய இரண்டு சிறு நிறுவனங்களின் ஒன்றிணைப்பால் உருவானது வானொலிப் பொறியாளர் கழகம். 1930களில் எலக்ட்ரானிக்ஃசு (electronics) என்று அழைக்கப்பெற்ற மின்னணுவியல் பொறியாளர்கள் இந்த வானொலிப் பொறியாளர் கழகத்தில் பொதுவாகச் சேர்ந்தனர். அக்காலத்தில் மின்னணுவியல் என்பது கண்ணாடிக் குமிழி அல்லது குழாய்க்குள் [[எதிர்மின்னி]]களைக் (electrons) கட்டுப்படுத்தும் எதிர்மின்னிக் கருவிகள் மிகவும் பரவி வந்தன. வானொலிப் பொறியியல், மின்னியல் பொறியியல் துறைகளின் வேறுபாடுகள் குறைந்து மயங்கி வந்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இரண்டு நிறுவனங்களிடையே போட்டியும் பெருகி வந்தன. ஆனால் 1961 ஆம் ஆண்டில் இரண்டு நிறுவனங்களின் தலைவர்களும் ஒன்றுகலந்து பேசி சனவரி 1, 1963 இல் புதிய ஐஇஇஇ (மின்னியல், மின்னணுவியல் பொறியாளர் கழகம், மிமிபொக) என்னும் நிறுவனத்தை உருவாக்கினர்.
 
மிமிபொக (ஐஇஇஇ) நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க தலைவர்கள் எலிஃகு தாம்சன் (Elihu Thomson, AIEE, 1889–1890), அலெக்ஃசாண்டர் கிராம் பெல் (Alexander Graham Bell, AIEE, 1891–1892), சார்லசு புரோட்டியசு இசுட்டைன்மெட்ஃசு (Charles Proteus Steinmetz, AIEE, 1901–1902), இலீ டி ஃபாரெசுட்டு (Lee De Forest, IRE, 1930), பெடரிக் டெர்மன் (Frederick E. Terman, IRE, 1941), வில்லியம் இரெட்டிங்க்டன் ஃகியூலெட் (William Reddington Hewlett, IRE, 1954), எர்ணெசுட்டு வீபர் (Ernst Weber, IRE, 1959; IEEE, 1963), இவான் கெட்டிங் (Ivan Getting, IEEE, 1978).
"https://ta.wikipedia.org/wiki/ஐஇஇஇ" இலிருந்து மீள்விக்கப்பட்டது