மூலக்கூற்று இடைவிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
No edit summary
==இருமுனைவு-இருமுனைவுக் கவர்ச்சி விசை==
 
சமச்சீரற்ற மூலக்கூறில் உள்ள அணுக்களிடையே உள்ள [[மின்னெதிர்த்தன்மை]] வித்தியாசம் காரணமாக இருமுனைவு-இருமுனைவுக் கவர்ச்சி விசை ஏற்படுகின்றது. இது குறிப்பிடத்தக்களவுக்கு முக்கியமான இடைவிசையாகும். இக்கவர்ச்சி விசை ஏற்படுவதற்கு மூலக்கூறு சமச்சீரற்றதாகவும், நேரடியாகப் பிணைக்கப்பட்ட அணுக்களிடையே மின்னெதிர்த்தன்மை வித்தியாசமும் இருத்தல் அவசியமாகும். இவ்வகைக் கவர்ச்சி இடைவிசை உள்ள சேர்வைகள் முனைவுச் சேர்வைகள் என அழைக்கப்படும். [[நீர்]], [[அமோனியா]], [[ஐதரசன் குளோரைடு]], [[ஐதரசன் புளோரைடு]] என்பன முனைவுச் சேர்வைகளாகும். இச்சேர்வைகளில் மின்னெதிர்த்தன்மை அதிகமான N, O, Cl, F ஆகிய அணுக்கள் மின்னெதிர்த்தன்மை குறைந்த ஐதரசனிடமிருந்து இலத்திரன்களை இழுப்பதால் (அயன் பிணைப்பு போன்று முழுமையாகக் கவர இயலாது) இலத்திரன்கள் மின்னெதிர்த்தன்மை கூடிய அணுவின் பக்கம் அதிக நேரத்தைச் செலவிடும்.
:[[Image:Dipole-dipole-interaction-in-HCl-2D.png|200px]]
உதாரணமாக HCl இல் மின்னெதிர்த்தன்மை அதிகமான Cl பக்கம் சிறிய மறையேற்றமும், மின்னெதிர்த்தன்மை குறைந்த H பக்கம் சிறிய நேரேற்றமும் ஏற்படும். இதனால் HCl மூலக்கூறுகளிடையே இருமுனைவு-இருமுனைவுக் கவர்ச்சி விசை உருவாகின்றது.
[[பகுப்பு:வேதிப் பிணைப்பு]]
1,645

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1666806" இருந்து மீள்விக்கப்பட்டது