சிலுவைப் போர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சி Robot: af:Kruistog is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 4:
இப்போர்களின் சின்னமாக கிறித்தவ [[சிலுவை]] இருந்ததால், இவை ''சிலுவைப் போர்கள்'' என அழைக்கப்படுகின்றன. [[இரண்டாம் அர்பன் (திருத்தந்தை)|திருத்தந்தை இரண்டாம் அர்பனின்]] அறிவிப்பால் [[எருசலேம்|எருசலேமையும்]] அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை மீட்க ஐரோப்பியர்களால் 200 ஆண்டுகாலம் நடத்தப்பட்டு தோல்வியில் முடிந்த சிலுவைப்போர்கள், 1095இல் தான் துவங்கின என்றாலும், இதற்கு முன் பல ஆண்டுகளாக ஐரோப்பிய எல்லைகள் குறித்து நடந்த சிக்கள்களே இதன் மூலகாரணமாகப் பார்க்கப்படுகின்றது. குறிப்பாக அரேபிய-பைசாண்டிய போர்கள், பைசாண்டிய-செல்யூக் போர்கள் மற்றும் [[பைசாந்தியப் பேரரசு]] [[அனத்தோலியா]]வை இசுலாமிய [[செல்யூக் துருக்கியர்|செல்யூக் துருக்கியருடன்]] 1071இல் நடந்த போரில் இழந்ததும் பெரும் காரணிகளாக பார்க்கப்படுகின்றது. பைசாந்தியப் பேரரசர் முதலாம் அலெக்ஸோசின் வேண்டுகோளுக்கினங்கி [[இரண்டாம் அர்பன் (திருத்தந்தை)|திருத்தந்தை இரண்டாம் அர்பன்]] இப்போர்களை துவக்கி பைசாந்திய பேரரசுக்கு உதவ, ஐரோப்பிய அரசுகளுக்கு அறிவுறித்தினார். [[பெரும் சமயப்பிளவு|பெரும் சமயப்பிளவால்]] பிரிந்த கிறித்தவத்தை ஒன்றிணைக்க இரண்டாம் அர்பன் செய்த முயற்சியாக இது பார்க்கப்படுகின்றது.<ref name=Nelson40>Nelson ''Byzantine Perspective of the First Crusade'' p. 40</ref> இப்போரில் ஈடுபடுபவர்களுக்கு [[பலன்கள் (கத்தோலிக்க திருச்சபை)|நிறைவுப்பலகளை]] அளிப்பதாக திருத்தந்தை கட்டளையிட்டார். மேற்கு ஐரோப்பா முழுவதிலிருந்தும் பல கிறித்தவர்கள் இப்போர்களில் பங்கு கொண்டனர்.<ref name=Asbridge1>Asbridge ''Crusades'' p. 1</ref> [[நில மானிய முறைமை]]யின் அடிப்படையில் இப்போர்களின் படைகள் பிரிந்திருந்ததால், இவை ஒரே கட்டுப்பாட்டுக்குள் இல்லாதது இப்போரின் தோல்விக்கு காரணியாகும்.
 
[[Fileபடிமம்:Saladin and Guy.jpg|thumb|வெற்றி பெற்ற சலாதீனை வர்ணிக்கும் 20ம் நூற்றாண்டு காலச் சித்திரம்]]
[[Fileபடிமம்:Battle of Nicopol aftermath Thr masacreofthecristians revenge for rahova massacre.jpg|thumb|1396இல் நிக்கோபோலில் நடந்த போரில் தோற்ற கிறித்தவர்கள் கொல்லப்படல்]]
சிலுவைப் போர்கள் நீண்டகால அரசியல், பொருளியல், சமூகத் தாக்கங்களைக் கொண்டிருந்தன. இவற்றுட் சில அண்மைக்காலம் வரை நீடித்தன. கிறிஸ்தவ அரசுகள், அரசியல் சக்திகள் மத்தியில் இருந்த உள் முரண்பாடுகளினால், சில சிலுவைப் போர்களின் தொடக்க இலக்குத் மாறியது. [[நான்காவது சிலுவைப் போர்]] இதற்கு எடுத்துக்காட்டு ஆகும். இது, கிறிஸ்தவ [[கொன்ஸ்டண்டினோப்பிள்]] அழிவதற்கும், பைசண்டியப் பேரரசின் வீழ்சிக்கும் காரணமாகியது. ஆறாம் சிலுவைப் போர் முதல் எல்லா சிலுவைப் போர்களும் திருத்தந்தையின் அதிகாரபூர்வ அனுமதி இல்லாமல் நடைபெற்றது. ஏழாம், எட்டாம், ஒன்பதாம் சிலுவைப் போர்களில், [[மாம்லுக்]], [[ஹாப்சிட் வம்சம்|ஹாப்சிட்]] வெற்றிகள் கிடைத்தன. ஒன்பதாம் சிலுவைப் போரே இறுதிச் சிலுவைப்போர் ஆகும். இது மையக்கிழக்கில் முடிவடைந்தது.
 
== போர்களின் சூழல் ==
[[Fileபடிமம்:Byzantiumforecrusades.jpg|upright=1.5|thumb|left|பைசாந்திய பேரரசும், உரூமி சுல்தானியமும் முதல் சிலுவைப் போருக்கு முன்பு]]
கி.பி 636 முதலே இசுலாமிய படைகள் யார்முக் போரின் மூலம் கிழக்கு பைசாந்தியத்தையும், [[உமையா கலீபகம்]]<ref name=Wickham280>Wickham ''Inheritance of Rome'' p. 280</ref>, [[அப்பாசியக் கலீபகம்]]<ref name=Lock4>Lock ''Routledge Companion'' p. 4</ref> மற்றும் [[பாத்திம கலீபகம்]].<ref name=Hindley14>Hindley ''Crusades'' p. 14</ref> மூலம் பாலசுதீனத்தையும்<ref name="Wickham280"/> கைப்பற்றின. உறவும் கிறித்தவ அரசுகள் அரேபிய அரசோடும் வர்த்தகமும் அரசியல் உறவும் 1072இல் பாலஸ்தீனம் [[செல்யூக் பேரரசு|செல்யூக் பேரரசால்]] கைப்பற்றப்படும் வரை சுமூகமாகவே இருந்தது.<ref name=Hindley15>Hindley ''Crusades'' p. 15</ref> எடுத்துக்காட்டாக [[பாத்திம கலீபகம்|பாத்திம]] கலீபா அல்-அகிம் பி-அமர் அல்லா [[திருக்கல்லறைத் தேவாலயம்|திருக்கல்லறைத் தேவாலயத்தினை]] இடித்தாலும், அவருக்கு அடுத்து ஆட்சி செய்தவர், அதனை மீண்டும் கட்ட அனுமதியளித்தார்.<ref name=Pringle157>Pringle "Architecture in Latin East" ''Oxford History of the Crusades'' p. 157</ref>
 
இசுலாமிய ஆட்சியாளர்கள் கிறித்தவர்கள் புனித நாட்டுக்கு திருப்பயணம் மேற்கொல்வதை தடை செய்யவில்லை. இசுலாமிய கோட்பாட்டின் படி ''புத்தகத்தின் மக்களை'' சகித்துக்கொள்ள அவர்கள் விறும்பினர்.<ref name = Findley2005p73>{{harvnb|Findley|2005|p=73}}</ref> ஆனாலும் செல்யூக் பேரரசால் புனித நாட்டு திருப்பயண பாதை தடைசெய்யப்பட்டதால் கிறிததவர்களிடையே முதன் முதலில் மனக்கசப்பு எழுந்தது.<ref>Madden ''New Concise History of the Crusades'' p. 8</ref> பைசாந்தியப்பேரரசு உள்நாட்டுப்போர்களால் சிக்கியிருந்தபோது 1071இல் செல்யூக் துரிக்கியர்களால் [[அனத்தோலியா]] கைப்பற்றப்பட்டது.<ref name=Asbridge97>Asbridge, ''First Crusade'' p. 97</ref>
 
[[Fileபடிமம்:Seljuk Empire locator map.svg|thumb|செல்யூக் பேரரசு அதன் உச்சத்தில், கி.பி 1092.]]
மேற்கில் ஆயர்களை நியமிப்பதில் [[திருத்தந்தை]]க்கும் அரசர்களுக்கும் ஏற்ப்பட்ட சிக்கலும், 1054இல் நடந்த [[பெரும் சமயப்பிளவு]]ம் ஒற்றுமையின்மைக்கு வழிகோலியது.<ref name=Mayer2>Mayer ''Crusades'' pp.&nbsp;2–3</ref> இச்சிக்கல்கள் முதலாம் சிலுவைப்போர்கள் நடந்த போது மின்னனியில் நிகழ்ந்துகொண்டே இருந்தன.
 
1074இல் பேரரசர் ஏழாம் மிக்கேல் திருத்தந்தை [[ஏழாம் கிரகோரி (திருத்தந்தை)|ஏழாம் கிரகோரிகிரகோரியிடம்]]யிடம் தனக்கு போரில் உதவ வேண்டினார். கிரகோரி இக்கோரிக்கையினை பரிசோதித்தாலும், இது திட்டமிடுதலிலேயே நின்றுவிட்டது.<ref name=Lock306>Lock ''Routledge Companion'' pp.&nbsp;306–308</ref> 1091இல் மீண்டும் பேரரசர் முதலாம் அசெக்சியொஸ் அப்போதைய திருத்தந்தை [[இரண்டாம் அர்பன் (திருத்தந்தை)|இரண்டாம் அர்பனிடம்]] துருக்கியர்களுக்கு எதிரான போரில் உதவி வேண்டினார்.<ref name=Mayer6>Mayer ''Crusades'' pp.&nbsp;6–7</ref> இவ்வேண்டுகோளுக்கினங்கி திருத்தந்தை இரண்டாம் அர்பன் இப்போர்களை துவக்க கிறித்தவ அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
 
== பெயரும் பயன்பாடும் ==
சிலுவைப் போர்களின் பங்கேற்ற எவரும் அதனை அப்பெயரில் அழைக்கவில்லை. தங்களை [[பேதுரு (திருத்தூதர்)|புனித பேதுருவின்]] ஊழியர்கள் (''fideles Sancti Petri'') அல்லது கிறிஸ்துவின் போர் வீரர்கள் (''milites Christi'') என்றே அழைத்தனர். திருப்பயணிகளாகவே இவர்கள் தங்களை தாங்களே கருதினர். 1638இல் வெளியான ''L'Histoire des Croisades'' என்னும் புத்தகத்திலேயே முன்தமுதலில் ''சிலுவைப் போர்கள்'' என்னும் பதம் பயன்படுத்தப்பட்டது.<ref name=Lock258>Lock ''Routledge Companion'' p. 258</ref> 1750க்குள் இப்பதம் பல வகைகளில் ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் செருமாணியம் ஆகிய மொழிகளில் இடம்பெற்றது. 1757இல் ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியில் இப்பதம் இருந்ததாக வில்லியம் சென்சுடோன் குறிக்கின்றார்.<ref name=Hindley2>Hindley ''Crusades'' pp. 2–3</ref> மற்ற திருப்பயணிகள் போலவே சிலுவைப் போர் வீரர்களும் புனித திருநாட்டை அடைந்ததும் செய்வதற்க்காக வேண்டுதல்களை பயனத்துக்கு முன் உறுதிமொழி எடுத்தனர். இத்தகையோர் தங்களின் மேலாடையில் சிலுவையினை சேர்க்க அனுமதிக்கப்பட்டனர். இச்சிலுவையினாலேயே இப்போர் சிலுவைப் போர்கள் என வழங்களாயிற்று.<ref>''American Heritage Dictionary of the English Language'', Fourth Edition, Houghton Mifflin Company, 2009</ref>
 
வரிசை 26:
 
[[பகுப்பு:சிலுவைப் போர்கள்]]
 
{{Link FA|af}}
"https://ta.wikipedia.org/wiki/சிலுவைப்_போர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது