"உருசியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

240 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
Robot: af:Rusland is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி (Bot: Migrating 261 interwiki links, now provided by Wikidata on d:q159 (translate me))
சி (Robot: af:Rusland is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்)
|conventional_long_name=<span style="line-height:1.33em;">ரஷ்யக் கூட்டரசு</span>
|common_name=Russia
|national_anthem=<center></center><small>[[உருசியாவின் தேசிய கீதம்|Государственный гимн Российской Федерации]]<br />(''உருசியக் கூட்டரசின் தேசிய கீதம்'')</small>
|image_flag=Flag of Russia.svg
|image_coat=Coat of Arms of the Russian Federation.svg
|largest_city = தலைநகரம்
|official_languages = [[உருசிய மொழி|உருசியம்]] நாடு முழுவதும் அதிகாரபூர்வ மொழியாகவும்; 27 வேறு மொழிகள் பல்வேறு பிராந்தியங்களில் இணை அதிகாரபூர்வ மொழியாகவும் உள்ளன.
|ethnic_groups = 81% [[உருசியர்]]<br /> 3.7% [[தடரர் ]] <br />1.4% [[உக்ரேனியர்]]<br /> 1.1% [[பசுகிரர்]]<br />1% [[சுவாசர்]]<br />11.8% ஏனையோரும் குறிப்பிடப்படாதோரும்<ref name="perepis-2010.ru">[http://www.perepis-2010.ru/results_of_the_census/result-december-2011.ppt ОБ ИТОГАХ ВСЕРОССИЙСКОЙ ПЕРЕПИСИ НАСЕЛЕНИЯ 2010 ГОДА (''Results of the Russian 2010 census'')] - http://www.perepis-2010.ru/</ref>
|ethnic_groups_year = 2010
|demonym = [[உருசியர்]]
உருசியாவின் மக்கள் தொகை 143 மில்லியன் ஆகும். பாரிய [[பரப்பளவு]] கொண்ட நாடு என்பதால் மக்கள் அடர்த்தி 8.3/கிமீ<sup>2</sup> ஆகும். பொதுவாக 78% மக்கள் ஆங்காங்கே இருக்கும் பெரிய நகரங்களிலேயே செறிவாக வாழ்கின்றார்கள். உருசியாவின் 80% மக்கள் [[உருசிய இனம்|உருசிய இன]] மக்கள் ஆவார்கள். இவர்களை தவிர பல சிறுபான்மை இன மக்கள் அவர்களுக்குரிய பாரம்பரிய நிலப்பகுதிகளில் வாழ்கின்றார்கள்.
 
== வரலாறு ==
{{main|உருசிய வரலாறு}}
 
=== முற்காலம் ===
 
[[Fileபடிமம்:IE expansion.png|thumb|left|குர்கன் கொள்கை:இந்தோ- ஐரோப்பிய மக்களின் தாயகமாக தென் ருசியா]]
 
35000 வருடங்கள் பழமையான [[குரோமாக்னன்|நவீன மனிதனின்]] எலும்புகள் ரசியாவின் கொஸ்டெங்கி பகுதியிலுள்ள டொன் நதிக்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.{{citation needed|date=December 2011}} 41000 வருடங்களுக்குமுன் வாழ்ந்த டெனிசோவா ஹோமினின் என்ற மனித இனத்தின் எச்சங்கள் தென் [[சைபீரியா]]வின் டெனிசோவா குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.{{citation needed|date=December 2011}}
கிரேக்க, ரோமக் குறிப்புகளில் பொன்டிக் ஸ்டெப்பீ புல்வெளி சின்தியா எனக் குறிப்பிடப்படுகிறது. கிமு 8ம் நூற்றாண்டிலிருந்து, பண்டைய கிரேக்க வணிகர்கள் தமது நாகரிகத்தை டனைஸ் மற்றும் பனகோரியா ஆகிய இடங்களிலுள்ள தமது வணிக நிலையங்களுக்கு கொண்டுவந்தனர்.<ref>{{Cite book|author=Jacobson, E.|title=The Art of the Scythians: The Interpenetration of Cultures at the Edge of the Hellenic World|publisher=Brill|year=1995|page=38|isbn=90-04-09856-9}}</ref> கிபி 3ம்-4ம் நூற்றாண்டுகளில் ஒய்யமின் கோதிக் பேரரசு தென் ரசியாவில் காணப்பட்டது. ஹூணர்களால் அழிக்கப்படும் வரை இது நிலைத்திருந்தது. கிபி 3ம் நூற்றாண்டுக்கும், 6ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கிரேக்க அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவந்து பொஸ்போரன் பேரரசு ஆட்சிக்கு வந்தது.<ref>{{Cite book|author=Tsetskhladze, G.R.|title=The Greek Colonisation of the Black Sea Area: Historical Interpretation of Archaeology|publisher=F. Steiner|year=1998|page=48|isbn=3-515-07302-7}}</ref> இதுவும் பின்னர் ஹூணர்கள் மற்றும் யுரேசிய அவார்கள் போன்ற போர் நாட்டமுள்ள நாடோடிகளின் ஆக்கிரமிப்பினால் வெற்றிகொள்ளப்பட்டது.<ref>{{Cite book|author=Turchin, P.|title=Historical Dynamics: Why States Rise and Fall|publisher=Princeton University Press|year=2003|pages=185–186|isbn=0-691-11669-5}}</ref> 10ம் நூற்றாண்டு வரை, கசார்கள் எனப்பட்ட துருக்கிய மக்கள் [[கஸ்பியன் கடல்|கஸ்பியன் கடலுக்கும்]], [[கருங்கடல்|கருங்கடலுக்கும்]] இடைப்பட்ட கீழ் [[வோல்கா நதி|வொல்கா]] புல்வெளியில் ஆட்சி செலுத்தினர்.<ref>{{Cite book|author=Christian, D.|title=A History of Russia, Central Asia and Mongolia|publisher=Blackwell Publishing|year=1998|pages=286–288|isbn=0-631-20814-3}}</ref>
 
நவீன ரசியர்களின் மூதாதையர்கள், மரங்கள் அடர்ந்த பின்ஸ்க் சதுப்பு நிலத்தைத் தாயகமாகக் கொண்ட [[சிலாவிக் மக்கள்|ஸ்லாவியக் குழுக்கள்]] என சில அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.<ref>{{Cite book|last=For a discussion of the origins of Slavs, see Barford, P.M.|title=The Early Slavs|publisher=Cornell University Press|pages=15–16|isbn=0-8014-3977-9|year=2001}}</ref> கிழக்கு ஸ்லாவியர்கள் மேற்கு ரசியாவில் இரண்டு தடவைகளிலாகக் குடியேறியுள்ளனர்: அவை, [[கீவ்|கீவிகீவிலிருந்து]]லிருந்து இன்றைய சுஸ்டால் மற்றும் முரோம் நோக்கிய ஒரு நகர்வும், பொலோட்ஸ்க்கிலிருந்து, நோவோகொரட் மற்றும் ரொஸ்டோவ் நோக்கிய இன்னொரு நகர்வுமாகும். 7ம் நூற்றாண்டிலிருந்து கிழக்கு ஸ்லாவியர்களின் சனத்தொகை மேற்கு ரசியாவில் அதிகரித்ததோடு,<ref>{{Cite book|author=Christian, D.|title=A History of Russia, Central Asia and Mongolia|publisher=Blackwell Publishing|year=1998|pages=6–7}}</ref> அங்கு வாழ்ந்த மெர்யா, முரோமியன் மற்றும் மெச்செரா போன்ற ஃபின்னோ-உக்ரிக் மக்களைத் தம்முள் மெதுவாக உள்வாங்கிக் கொண்டனர்.
 
=== கீவிய ரசியா ===
 
[[Fileபடிமம்:Kievan Rus en.jpg|thumb|11ம் நூற்றாண்டில் கீவிய ரசியா]]
 
9ம் நூற்றாண்டில் முதலாவது கிழக்கு ஸ்லாவிய நாடுகளின் நிறுவுகை, பால்டிக் கடல் பகுதியினரான போர்வீரர்களும், வர்த்தகர்களும், குடியேறிகளுமான வராங்கியர்களின் வருகையுடன் மேற்பொருந்துகிறது. ஆரம்பத்தில் இவர்கள் [[எசுக்காண்டினாவியா|ஸ்கண்டிநேவியாஸ்கண்டிநேவியாவிலிருந்த]]விலிருந்த [[வைக்கிங்]]குகளுடன் தொடர்புற்றிருந்தனர். இவர்கள் கிழக்கு பால்டிக் கடலிலிருந்து கருங்கடல் மற்றும் கஸ்பியன் கடல் வரை பயணம் மேற்கொண்டனர்.<ref>{{Cite book|author=Obolensky, D.|title=Byzantium and the Slavs|publisher=St Vladimir's Seminary Press|year=1994|page=42|isbn=0-88141-008-X}}</ref> ஆரம்ப வரலாற்றுக் குறிப்புகளின் படி ரூரிக் எனப்பட்ட வராங்கியன் இனத்தவன் 862ல் நோவோகொரட்டின் ஆட்சியாளனாகத் தெரிவு செய்யப் பட்டான். இவனுக்குப் பின் வந்த ஒலெக் என்பவன் தென் பகுதிக்குப் படையெடுத்து கசார்களின் தலைமையிடமான கீவைக் கைப்பற்றி<ref>{{Cite book|author=Thompson, J.W.; Johnson, E.N.|title=An Introduction to Medieval Europe, 300–1500|publisher=W. W. Norton & Co.|year=1937|page=268|isbn=0-415-34699-1}}</ref> கீவிய ரசியாவைத் தோற்றுவித்தான். ஒலெக், ரூரிக்கின் மகனான இகோர் மற்றும் இகோரின் மகனான ஸ்வியாடொஸ்லாவ் ஆகியோர் தொடர்ச்சியாக கீவின் ஆட்சியாளர்களானதோடு, கிழக்கு ஸ்லாவிய மக்களையும் கீழடக்கினர். மேலும் இவர்கள் கசார்களின் அரசை அழித்ததுடன் பைசாந்தியம், பாரசீகம் போன்ற இடங்களுக்கும் படையெடுப்புகளை மேற்கொண்டனர்.
 
10ம் நூற்றாண்டு முதல் 11ம் நூற்றாண்டு வரை, கீவிய ரசியா ஐரோப்பாவின் பாரிய, வளமிக்க பேரரசாக உருவாகியது.<ref>{{cite web|title=Ukraine: Security Assistance|publisher=U.S. Department of State|url=http://www.state.gov/t/pm/64851.htm|accessdate=27 December 2007}}</ref> மகா விளாடிமிர் (980–1015) மற்றும் அவனது மகனான புத்தியுள்ள யரோஸ்லாவ் (1019–1054) ஆகியோரின் ஆட்சிக் காலங்கள் கீவின் பொற்காலமாகக் காணப்பட்டது. இக்காலப்பகுதியில் பைசாந்தியத்தில் நிலைபெற்றிருந்த பழமைவாதக் கிறிஸ்தவத்தை இவர்கள் தழுவிக்கொண்டதுடன், முதலாவது எழுதப்பட்ட ஸ்லாவிய சட்டக் கோவையான ''ரஸ்கயா ப்ராவ்டா''வையும் உருவாக்கினர்.
11ம் மற்றும் 12ம் நூற்றாண்டுகளில், கிப்சக்க்குகள் மற்றும் பெச்செனெக்குகள் போன்ற துருக்கிய குழுக்களின் தொடர் தாக்குதல்களால் ஸ்லாவிய மக்கள் பாதுகாப்பான, காடுகளால் சூழப்பட்ட சலெஸ்யே போன்ற வடக்குப் பகுதிகளுக்குப் பாரியளவில் குடிபெயர்ந்தனர்.<ref>{{Cite book|author=Klyuchevsky, V.|title=The course of the Russian history|volume=1|url=http://www.kulichki.com/inkwell/text/special/history/kluch/kluch16.htm|isbn=5-244-00072-1|year=1987|publisher=Myslʹ}}</ref>
 
[[Fileபடிமம்:Lebedev baptism.jpg|left|thumb|க்லாவ்டி லெபெடேவினால் வரையப்பட்ட ''கிவியர்களின் ஞானஸ்நானம்'']]
 
கீவிய ரசியாவை ஆண்ட ரூரிக் வம்சத்தினரிடையேயான தொடர்ச்சியான உட்போர்கள் காரணமாக [[நிலமானிய முறைமை|மானியமுறைமைமானியமுறைமையும்]]யும் அதிகாரப் பரவலாக்கமும் ஏற்பட்டது. கீவின் அதிகாரம் நலிவடைந்ததால் வடகிழக்கில் விளாடிமிர்-சுஸ்டால், வடமேற்கில் நோவோகொரட் குடியரசு, தென்மேற்கில் கலிசியா-வொல்கினியா போன்ற சுயாதீன அரசுகள் உருவாகின.
 
இறுதியாக 1237-40ல் மொங்கோலியரின் படையெடுப்பினால் கீவிய ரசியா பிளவடைந்தது.<ref>{{Cite book|author=Hamm, M.F.|title=Kiev: A Portrait, 1800–1917|publisher=Princeton University Press|isbn=0-691-02585-1|year=1995}}</ref> இது கீவின் அழிவுக்கும்,<ref>{{cite web|url=https://tspace.library.utoronto.ca/citd/RussianHeritage/4.PEAS/4.L/12.III.5.html |title=The Destruction of Kiev |publisher=Tspace.library.utoronto.ca |accessdate=19 January 2011}}</ref> ரசியாவின் அரைவாசி மக்களின் அழிவுக்கும்<ref>{{cite web|url=http://www.parallelsixty.com/history-russia.shtml|title=History of Russia from Early Slavs history and Kievan Rus to Romanovs dynasty|publisher=Parallelsixty.com|accessdate=27 April 2010}}</ref> காரணமானது. தாத்தார்கள் எனப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் கோல்டன் ஹோர்ட் எனப்பட்ட நாட்டை உருவாக்கினர். இவர்கள் ரசியச் சிற்றரசுகளைக் கொள்ளையடித்ததோடு, ரசியாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஆண்டனர்.<ref>{{Cite book|author=Рыбаков, Б. А.|title=Ремесло Древней Руси|year=1948|pages=525–533, 780–781}}</ref>
கலிசியா-வொல்கினியா போலிய-லிதுவேனிய பொதுநலவாயத்தினுள் உள்வாங்கிக்கொள்ளப்பட்டதோடு, கீவின் எல்லைப்புறத்தில் அமைந்திருந்த விளாடிமிர்-சுஸ்டால் மற்றும் நோவோகொரட் குடியரசு ஆகிய பகுதிகளில் மொங்கோலியர் ஆதிக்கம் செலுத்தினர். இவ்விரு பகுதிகளுமே நவீன ரசிய நாட்டுக்கான அடிப்படையாகும்.<ref name=Curtis/> மொங்கோலியப் படையெடுப்பின்போது நோவோகொரட் மற்றும் ஸ்கோவ் ஆகியன சிறிதளவு சுயாட்சி அதிகாரம் உடையனவாக இருந்தன. மேலும் இவை நாட்டின் ஏனைய பகுதிகளில் நடைபெற்ற அட்டூழியங்களிலிருந்தும் தப்பிக்கொண்டன. அலெக்சாண்டர் நெவ்ஸ்கி என்ற இளவரசனால் வழிநடத்தப்பட்ட நோவோகொராடியர்கள் 1240ல் நடைபெற்ற நேவா போரின் மூலம் சுவீடிய ஆக்கிரமிப்பையும், 1242ல் நடைபெற்ற ஐஸ் போரின் மூலம் ஜெர்மானிய சிலுவைப் போராளிகளின் ஆக்கிரமிப்பையும் தடுத்து, வடக்கு ரசியாவை ஆக்கிரமிக்கும் அவர்களது முயற்சியையும் முறியடித்தனர்.
 
=== மொஸ்கோவின் பெரும் டச்சி ===
 
[[Fileபடிமம்:Lissner TroiceSergievaLavr.jpg|thumb|270px|குலிகோவோ போருக்கு முன், ரடோனெசின் செர்கியஸ், டிமித்ரி டொன்ஸ்கோயை, ட்ரினிடி செர்கியஸ் லவ்ராவில் வைத்து ஆசீர்வதிக்கிறார். ஏர்னஸ்ட் லிஸ்னரால் வரையப்பட்ட ஓவியத்தில் காட்டப்பட்டுள்ளது.]]
 
கீவிய ரசியாவின் வழிவந்த, மிகவும் பலம்வாய்ந்த அரசு மொஸ்கோவின் பெரும் டச்சி ஆகும். (மேலைத்தேய குறிப்புகளில் "மொஸ்கோவி" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.) ஆரம்பத்தில் இது விளாடிமிர்-சுஸ்டாலின் ஒரு பகுதியாக இருந்தது. மொங்கோலிய-தாத்தார்களின் ஆதிக்கத்தின் கீழ் காணப்பட்டாலும், அவர்களின் உதவியுடன் 14ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், மத்திய ரசியாவில் தனது ஆதிக்கத்தைச் செலுத்த ஆரம்பித்தது. மேலும், படிப்படியாக, ரசியாவின் ஒன்றிணைவு மற்றும் விஸ்தரிப்புக்கான பிரதான சக்தியாகவும் இது உருவெடுத்தது.
மூன்றாம் இவான்(''தி கிரேட்'') இறுதியாக கோல்டன் ஹோர்டை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து, முழு மத்திய மற்றும் வட ரசியாவையும் மொஸ்கோவின் ஆளுகையின் கீழ் கொண்டுவந்தான். இவனே முதலாவது "முழு ரசியாவினதும் பெரும் டியூக்" பட்டத்தைப் பெற்றவனாவான்.<ref>{{cite web|author=May, T.|title=Khanate of the Golden Horde|url=http://www.accd.edu/sac/history/keller/Mongols/states3.html|archiveurl=http://web.archive.org/web/20080607055652/http://www.accd.edu/sac/history/keller/Mongols/states3.html|archivedate=7 June 2008|accessdate=27 December 2007}}</ref> 1453ல் கொன்ஸ்தாந்திநோபிளின் வீழ்ச்சிக்குப் பின், மொஸ்கோ [[பைசாந்தியப் பேரரசு|கிழக்கு ரோமப் பேரரசின்]] ஆட்சியுரிமையை எதிர்த்தது. மூன்றாம் இவான், இறுதிப் பைசாந்தியப் பேரரசரான 11ம் கொன்ஸ்தாந்தைனின் மைத்துனியான சோபியா பலையோலொகினாவைத் திருமணம் செய்துகொண்டான். மேலும் பைசாந்தியத்தின் குறியீடான இரட்டைத் தலைக் கழுகை தனதும் ரசியாவினதும் சின்னமாக்கிக் கொண்டான்.
 
=== ரசியாவில் சார் ஆட்சி ===
 
[[Fileபடிமம்:Ivan the Terrible (cropped).JPG|thumb|upright|left|விக்டர் வாஸ்னெட்சோவால் வரையப்பட்ட சார் பயங்கர இவான்]]
 
மூன்றாம் ரோமச் சிந்தனைகளில் ஏற்பட்ட வளர்ச்சியால், பெரும் டியூக்கான 4ம் இவான், ("மிகச்சிறந்த"<ref>Frank D. McConnell. [http://books.google.com/books?id=rqhZAAAAMAAJ Storytelling and Mythmaking: Images from Film and Literature.] [[Oxford University Press]], 1979. ISBN 0-19-502572-5; p. 78: "But Ivan IV, Ivan the Terrible, or as the Russian has it, ''Ivan Groznyi'', "Ivan the Magnificent" or "Ivan the Awesome," is precisely a man who has become a legend"</ref>) 1547ல், ரசியாவின் முதல் சார் ("சீசர்") ஆக உத்தியோகபூர்வமாக முடிசூட்டப்பட்டான். சார் மன்னன் ஒரு புதிய சட்டத் தொகுப்பை (1550ன் சுடெப்னிக்) வெளியிட்டான். இதன் மூலம் முதலாவது ரசிய மானியமுறை அமைப்பு (செம்ஸ்கி சொபோர்) உருவாக்கப்பட்டதோடு கிராமியப் பகுதிகளுக்கு உள்ளூர் சுயாட்சி அமைப்பொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது.<ref>{{Cite book|author=Solovyov, S.|title=History of Russia from the Earliest Times|publisher=AST|year=2001|pages=562–604|volume=6|isbn=5-17-002142-9}}</ref><ref>{{Cite book|author=Skrynnikov, R.|title=Ivan the Terrible|publisher=Academic Intl Pr|year=1981|page=219|isbn=0-87569-039-4}}</ref>
எவ்வாறாயினும், பால்டிக் கரையைக் கைப்பற்றுவதற்கும், கடல் வணிகம் மேற்கொள்வதற்கும், போலந்து, லிதுவானியா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளின் கூட்டுப் படைகளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட நீண்ட, தோல்விகரமான லிவோனியப் போரின் காரணமாக சார் ஆட்சி வலுவிழந்தது.<ref>{{Cite book|author=Solovyov, S.|title=History of Russia from the Earliest Times|publisher=AST|year=2001|volume=6|pages=751–908|isbn=5-17-002142-9}}</ref> இதேவேளை, கோல்டன் ஹோர்டின் எச்சமான கிரிமியன் கானேட்டின் தாத்தார்கள், தென்ரசியாவில் தொடர்ச்சியான கொள்ளையடிப்புக்களை மேற்கொண்டனர்.<ref>{{PDFlink|[http://www.econ.hit-u.ac.jp/~areastd/mediterranean/mw/pdf/18/10.pdf The Crimean Tatars and their Russian-Captive Slaves]|355&nbsp;KB}}. Eizo Matsuki, Mediterranean Studies Group at Hitotsubashi University.</ref> 1571ல், வொல்கா கானேட்டை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், கிரிமியர்களும் அவர்களது [[உதுமானியப் பேரரசு|ஒட்டோமான்]] கூட்டணியினரும் மத்திய ரசியாவை ஆக்கிரமித்து மொஸ்கோவின் பகுதிகளை எரியூட்டினர்.<ref>{{cite book|author=Solovyov, S.|title=History of Russia from the Earliest Times|publisher=AST|year=2001|volume=6|pages=751–809|isbn=5-17-002142-9}}</ref> ஆனாலும்,அடுத்த ஆண்டே மொலோடி போரில், இப்பாரிய ராணுவம் ரசியர்களால் தோற்கடிக்கப்பட்டது. இதன் மூலம் ரசியாவில் ஒட்டோமன்-கிரிமியன் பரவலை தடுத்துக்கொண்டனர். கிரேட் அபாடிஸ் லைன் போன்ற பாரிய கோட்டைகள் கட்டியெழுப்பப்பட்டு எதிரிப் படையெடுப்புக்கான பகுதிகள் குறுக்கப்பட்டன. ஆயினும், 17ம் நூற்றாண்டு வரையில் கிரிமியர்களின் கொள்ளையடிப்பை தடுத்து நிறுத்த முடியவில்லை.
 
[[Fileபடிமம்:Minin&Pogjarsky 2.jpg|upright|thumb|மொஸ்கோவிலுள்ள, மினின் மற்றும் பொசார்க்கி ஆகியோருக்கான நினைவுச்சின்னம்]]
 
இவானின் மகன்களின் மரணம் காரணமாக 1598ல் பண்டைய ரூரிக் வம்சம் முடிவு பெற்றது. மேலும் 1601-03 பஞ்சம்<ref>{{Cite book|author=Borisenkov E, Pasetski V.|title=The thousand-year annals of the extreme meteorological phenomena|isbn=5-244-00212-0|page=190}}</ref> உள்நாட்டுக் கலகத்துக்கு வழிகோலியது. 17ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், குழப்ப காலத்தின் போது, ஆட்சி உரிமையாளர்களினதும், வெளிநாட்டினரினதும் குறுக்கீடுகள் ஏற்பட்டன.<ref>{{Cite book|author=Solovyov, S.|title=History of Russia from the Earliest Times|publisher=AST|year=2001|volume=7|pages=461–568|isbn=5-17-002142-9}}</ref> போலிய-லிதுவேனிய பொதுநலவாயம் மொஸ்கோ உள்ளிட்ட ரசியாவின் பகுதிகளை ஆக்கிரமித்தது. 1612ல் இரண்டு தேசிய வீரர்களான குஸ்மா மினின் என்ற வணிகனாலும், திமித்ரி பொசார்கி என்ற இளவரசனாலும் வழிநடத்தப்பட்ட ரசியத் தொண்டர் படையினால் போலியர்கள் பின்வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். செம்ஸ்கி சொபோரின் தீர்மானம் காரணமாக 1613ல் ரோமனோவ் வம்சம் அதிகாரத்துக்கு வந்தது. இதனால் நாடு நெருக்கடியிலிருந்து சிறிதுசிறிதாக மீண்டது.
கிழக்குப் பகுதியில், பெரும்பாலும் கொசக்குகளால், சைபீரியாவின் பல பகுதிகளில் விரைவான ரசிய கண்டுபிடிப்புகளும் குடியேற்றங்களும் ஏற்படுத்தப்பட்டன. இவை பெரும்பாலும், பெறுமதிமிக்க, விலங்குகளின் தோல் மற்றும் தந்தத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே நடத்தப்பட்டன. ரசிய கண்டுபிடிப்பாளர்கள் சைபீரிய நதித் தடங்கள் வழியே மேலும் கிழக்கு நோக்கி பயணித்தனர். 17ம் நூற்றாண்டளவில் கிழக்கு சைபீரியாவின், சூச்சி தீபகற்பம், அமுர் நதிக்கரை, மற்றும் பசுபிக் கரையோரங்களில் ரசியக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. 1648ல், ஆசியாவுக்கும், வட அமெரிக்காவுக்கும் இடையிலான [[பெரிங் நீரிணை]], ஃபெடோட் போபோவ் மற்றும் செம்யோன் டெஸ்ன்யோவ் ஆகியோரால் முதன்முதலில் கடக்கப்பட்டது.
 
=== ரசியப் பேரரசு ===
{{main|உருசியப் பேரரசு}}
 
[[Fileபடிமம்:Peter der-Grosse 1838 PR.jpg|left|thumb|upright|மகா பீட்டர், ரசியாவின் முதலாவது பேரரசன்]]
 
1721ல், [[ரஷ்யாவின் முதலாம் பீட்டர்|மகா பீட்டரின்]] கீழ், ரசியா ஒரு பேரரசானதுடன், அறியப்பட்ட உலக வல்லரசானது. 1682இலிருந்து 1725 வரை அரசாண்ட பீட்டர், பெரும் வடக்குப் போரில் சுவீடனைத் தோற்கடித்தான். மேலும், மேற்கு கரேலியா, இங்கிரியா (குழப்பகாலத்தின் போது ரசியாவால் இழக்கப்பட்ட இரு பிரதேசங்கள்),<ref>{{Cite book|author=Solovyov, S.|title=History of Russia from the Earliest Times|publisher=AST|year=2001|volume=9, ch.1|url=http://militera.lib.ru/common/solovyev1/09_01.html|isbn=5-17-002142-9|accessdate=27 December 2007}}</ref> எஸ்ட்லாந்து மற்றும் லிவ்லாந்து ஆகியவற்றை பெற்றுக்கொண்டான். இதன்மூலம் ரசியாவுக்கு கடல் வழிப் போக்குவரத்தும், கடல் வணிகமும் மேற்கொள்ள முடியுமாயிருந்தது.<ref>{{Cite book|author=Solovyov, S.|title=History of Russia from the Earliest Times|publisher=AST|year=2001|volume=15, ch.1|url=http://militera.lib.ru/common/solovyev1/15_01.html}}</ref> [[பால்டிக் கடல்|பால்டிக்]] கடற்கரையில் பீட்டர் புதிய தலைநகரான [[சென் பீட்டர்ஸ்பேர்க்|செயின்ட் பீட்டர்ஸ்பர்க்பீட்டர்ஸ்பர்க்கை]]கை நிறுவினான். இது பிற்காலத்தில் ரசியாவின் ''ஐரோப்பாவுக்கான நுழைவாயில்'' என அழைக்கப்பட்டது. பீட்டரின் பாரிய மறுசீரமைப்புக்கள் ரசியாவில் குறிப்பிடத்தக்க மேற்கு ஐரோப்பிய கலாசாரத் தாக்கங்களை ஏற்படுத்தின.
 
1741-62 வரை, முதலாம் பீட்டரின் மகளான [[எலிசவேத்தா பெட்ரோவ்னா|எலிசபெத்எலிசபெத்தின்]]தின் ஆட்சிக்காலத்தில் ரசியா [[ஏழாண்டுப் போர்|ஏழாண்டுப் போரில்]] பங்கேற்றது (1756-63). இந்த போராட்டத்தின்போது, ரசியா கிழக்குப் பிரசியாவையும், மேலும் பெர்லினையும் சிறிதுகாலம் இணைத்திருந்தது. எவ்வாறாயினும், எலிசபெத்தின் மரணத்தின் பின், கைப்பற்றப்பட்ட அனைத்துப் பிரதேசங்களும், ரசியாவின் [[உருசியாவின் மூன்றாம் பீட்டர்|மூன்றாம் பீட்டரினால்]] [[பிரசியா|பிரசியப் பேரரசுபேரரசுக்கு]]க்கு திருப்பி வழங்கப்பட்டது.
 
1762-96 வரை ஆண்ட [[உருசியாவின் இரண்டாம் கத்தரீன்|இரண்டாம் கத்தரீன்]] ரசிய அறிவொளிக் காலத்துக்கு தலைமை தாங்கினார். இவர் போலிய-லிதுவானிய பொதுநலவாயத்தின் மீது ரசியாவின் ஆதிக்கத்தை நிலை நாட்டியதோடு, போலந்து பிரிவினையின் போது, இதன் பெரும்பாலான பகுதிகளை ரசியாவுடன் இணைத்துக்கொண்டார். இதன்மூலம் ரசியாவின் மேற்கெல்லை மத்திய ஐரோப்பா வரை பரந்தது. ஒட்டோமன் பேரரசுக்கெதிரான ரசிய-துருக்கியப் போர்களின் வெற்றியின் பின் கிரிமியன் கானேட்டைத் தோற்கடித்ததன் மூலம் அவர் ரசியாவின் தென் எல்லையை கருங்கடல் வரை விரிவு படுத்தினார். 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஒட்டோமன்களுக்கெதிரான வெற்றிகளைத் தொடர்ந்து, ட்ரான்ஸ்காக்கேசியாவின் சில பகுதிகளையும் பெற்றுக்கொண்டது. முதலாம் அலெக்சாண்டரின்(1801-25), 1809ல், பலவீனமான சுவீடனிடமிருந்தான [[பின்லாந்து|பின்லாந்தின்]] பறித்தெடுப்பு, 1812ல், ஒட்டோமன்களிடமிருந்தான பெஸ்ஸராபியாவின் பறித்தெடுப்பு என, இவ் விரிவுபடுத்தல் தொடர்ந்தது. இதேவேளை ரசியர்கள் அலாஸ்காவில் தமது குடியேற்றங்களை ஏற்படுத்தியதோடு, கலிபோர்னியாவிலும் கூட (ஃபோர்ட் ரொஸ்) தமது குடியேற்றங்களை ஏற்படுத்திக் கொண்டனர்.
1803–06 வரை முதலாவது ரசிய உலகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. பிற்காலத்திலும் குறிப்பிடத்தக்க கடற்பயணங்கள் சிலவும் மேற்கொள்ளப்பட்டன. 1820ல் ஒரு ரசிய நாடுகாண் பயணத்தின் மூலம் [[அண்டார்டிக்கா]] கண்டம் கண்டுபிடிக்கப்பட்டது.
 
[[Fileபடிமம்:Russian Empire (orthographic projection).svg|thumb|1866ல் ரசியப் பேரரசும், அதன் செல்வாக்குக்கு உட்பட்ட பிரதேசங்களும்.]]
 
பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் துணையுடன் ரசியா, [[நெப்போலியன்|நெப்போலியனின்]] பிரான்சுக்கெதிராகப் போராடியது. 1812ல் உச்ச நிலையிலிருந்த நெப்போலியனின் ஐரோப்பிய சேனை, ரசியர்களின் கடுமையான எதிர்ப்பு மற்றும் ரசியாவின் கொடூரமான குளிர்காலம் என்பன காரணமாக மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. இப் போரில் நெப்போலியனின் 95%மான படை அழிந்தது.<ref>{{cite web|title=Ruling the Empire|publisher=Library of Congress|url=http://countrystudies.us/russia/5.htm|accessdate=27 December 2007}}</ref> மிகெய்ல் குட்டுசோவ் மற்றும் பார்கிளே டி டொலி ஆகியோரால் வழிநடத்தப்பட்ட ரசியப்படை, ஆறாம் கூட்டணியின் போரின் மூலம், நெப்போலியனின் படையை ரசியாவிலிருந்து வெளியேற்றியதோடு, ஐரோப்பா வழியாக இறுதியில் பாரிஸ் நகர் வரை துரத்தியடித்து நகருக்குள் நுழைந்தன. ரசியாவின் சார்பில் முதலாம் அலெக்சாண்டர் [[வியன்னா மாநாடு|வியன்னா மாநாட்டில்]] கலந்துகொண்டார். இம்மாநாடு நெப்போலியனுக்குப் பின்னான ஐரோப்பாவின் எல்லைகளை வரையறுத்தது.
நிக்கலசின் பின் ஆட்சிக்கு வந்த [[இரண்டாம் அலெக்சாண்டர்]] (1855-81) நாட்டில் சில மாற்றங்களை ஏற்படுத்தினார். இவற்றுள் 1861ன் அடிமைத்தன விடுதலை மறுசீரமைப்பு குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் பாரிய மாற்றங்கள் கைத்தொழில்மயமாக்கத்தை ஊக்குவித்ததுடன், ரசிய ராணுவத்தையும் நவீனமயப் படுத்தியது. இதன் மூலம் ரசிய ராணுவம் 1877-78 ரசிய-துருக்கிய யுத்தத்தின் போது, [[பல்கேரியா]]வை ஒட்டோமன் ஆதிக்கத்திலிருந்து வெற்றிகரமாக விடுவித்தது.
 
[[Fileபடிமம்:Lenintribune.jpg|left|thumb|விளாடிமிர் லெனின், அக்டோபர் சோசலிசப் புரட்சியின் தலைவர்]]
 
19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்வேறு சோசலிச இயக்கங்கள் ரசியாவில் தோற்றம் பெற்றன. 1881ல் இரண்டாம் அலெக்சாண்டர் புரட்சியாளர்களால் கொல்லப்பட்டார். அவரது மகனான மூன்றாம் அலெக்சாண்டர் (1894-94) ஆட்சிக்காலம் மிகவும் சமாதானமானதும், தாராளமயம் குறைந்ததுமாக இருந்தது. கடைசி ரசியப் பேரரசரான [[ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ்|இரண்டாம் நிக்கலஸ்]] (1894-1917) [[உருசியப் புரட்சி, 1905|1905ன் ரசியப் புரட்சிபுரட்சியைத்]]யைத் தடுக்க முடியாதவராக இருந்தார். இப்புரட்சிக்குத் தூண்டுகோலாக இருந்தது ரசிய-சப்பானியப் போரில் ரசியாவின் தோல்வியாகும். இப்புரட்சி நிகழ்வுகள் [[இரத்த ஞாயிறு (1905)|இரத்த ஞாயிறு]] என அழைக்கப்படுகிறது. கிளர்ச்சி கைவிடப்பட்டது. ஆனால், அரசாங்கம் [[கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்|பேச்சுச் சுதந்திரம்]], [[கூடல் சுதந்திரம்|ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம்]], அரசியல் கட்சிகளை சட்டபூர்வமாக்கல் மற்றும் சட்டவாக்கக் கழகமொன்றை உருவாக்குதல் (ரசியப் பேரரசின் டூமா) போன்ற பாரிய சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஸ்டொலிபின் விவசாயச் சீர்திருத்தத்தைத் தொடர்ந்து, [[சைபீரியா]]வுக்கான குடிபெயர்வு வேகமாக அதிகரித்தது. 1906க்கும் 1914க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான குடியேற்றக்காரர்கள் இந்தப்பகுதிக்கு வந்தனர்.<ref>N. M. Dronin, E. G. Bellinger (2005). "''[http://books.google.com/books?id=9a5j_JL6cqIC&pg=PA38 Climate dependence and food problems in Russia, 1900–1990: the interaction of climate and agricultural policy and their effect on food problems]''". Central European University Press. p. 38. ISBN 963-7326-10-3</ref>
 
1914ல் ரசியாவின் கூட்டாளியான [[செர்பியா]]வுக்கு எதிராக ஆஸ்திரியா-ஹங்கேரி போர்ப் பிரகடனம் செய்ததையடுத்து, ரசியா [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலக யுத்தத்தினுள்]] பிரவேசித்தது. இதன் முக்கூட்டு நட்பு அணிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த வேளையில், பல்வேறு போர்முனைகளில் போராடவேண்டியிருந்தது. 1916ல் ரசிய ராணுவத்தின் பிரசிலோவ் தடுப்பு நடவடிக்கை மூலமாக ஆஸ்திரியா-ஹங்கேரியின் ராணுவம் கிட்டத்தட்ட முற்றாகவே அழிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், போர்ச் செலவுகள், உயர் இழப்புகள், ஊழல் பற்றிய வதந்தி மற்றும் தேசத்துரோகம் என்பன காரணமாக ஆட்சியாளருக்கெதிரான மக்களின் அவநம்பிக்கை அதிகரித்தது. இத்தகைய நடவடிக்கைகள் 1917ல் இரு தடவைகளில் நடந்த [[ரஷ்யப் புரட்சி (1917)|ரசியப் புரட்சிபுரட்சிக்கான]]க்கான சூழலை உருவாக்கியது.
 
பெப்ரவரி புரட்சி காரணமாக இரண்டாம் நிக்கலஸ் பதவி துறந்தான். ரசிய சிவில் போரின்போது, இவனும் இவனது குடும்பமும் சிறைப்பிடிக்கப்பட்டு, பின்னர் கொலைசெய்யப்பட்டனர். முடியாட்சி, பலவீனமான, அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்ட தற்காலிக அரசாங்கத்தால் பிரதியிடப்பட்டது. பெட்ரோகிராட் சோவியத்தில் மாற்று சோசலிச ஆட்சி இடம்பெற்றது. இதன் அதிகாரம் சனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர்களினதும் விவசாயிகளினதும் சபையிடம் இருந்தது. இச்சபை சோவியத் எனப்பட்டது. புதிய அதிகார சபைகளின் ஆட்சி நாட்டின் நெருக்கடியைத் தீர்ப்பதற்குப் பதிலாக மேலும் தீவிரப்படுத்தியது. தொடர்ந்து, போல்செவிக் தலைவர் [[விளாடிமிர் லெனின்|விளாடிமிர் லெனினால்]] நடத்தப்பட்ட [[அக்டோபர் புரட்சி]]யின் மூலம், இடைக்கால அரசாங்கம் தூக்கியெறியப்பட்டு, உலகின் முதல் சோசலிச நாடு உருவாகியது.
 
=== சோவியத் ரசியா ===
{{main|சோவியத் ஒன்றியம்}}
 
[[Fileபடிமம்:Russia-2000-stamp-Tatlin Tower and Worker and Kolkhoz Woman by Vera Mukhina.jpg|thumb|முன் சோவியத் யுகத்தின் குறியீடு:டட்லினின் கோபுரம் திட்டம் மற்றும் ''வேலையாளும் கோல்கோஸ் பெண்ணும்'' செதுக்கற் சிற்பம்.]]
 
அக்டோபர் புரட்சியை அடுத்து கொம்யூனிச எதிர்ப்பு வெள்ளை இயக்கத்துக்கும், [[செஞ்சேனை]]யுடனான புதிய சோவியத் ஆட்சிக்குமிடையில் சிவில் போர் ஒன்று தொடங்கியது. பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் ஒப்பந்தம் மூலம், ரசியா, முதலாம் உலகப்போரில் [[மைய சக்திகள்|மைய சக்திகளை]] எதிர்த்த அதன் உக்ரேனிய, போலிய, பால்டிக் மற்றும் ஃபின்னியப் பகுதிகளை இழந்தது. கொம்யூனிச எதிர்ப்புப் படைகளுக்கு ஆதரவாக, நேச நாடுகள் ஒரு ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டன. எனினும் அது வெற்றியளிக்கவில்லை. இதேவேளையில், போல்செவிக்குகளும், வெள்ளை இயக்கமும் மாறிமாறி நாடுகடத்தல்களையும் மரண தண்டனைகளையும் மேற்கொண்டன. இச் செயற்பாடுகள் முறையே செம் பயங்கரம் மற்றும் வெண் பயங்கரம் என அழைக்கப்பட்டன. சிவில் போரின் முடிவில், ரசியப் பொருளாதாரமும், உட்கட்டமைப்பும் மிகவும் பாதிப்படைந்தன. மில்லியன்கணக்கான மக்கள் அகதிகளாயினர்.<ref>[http://books.google.com/books?id=uUsLAAAAIAAJ&pg=PA3 Transactions of the American Philosophical Society]. James E. Hassell (1991), p. 3. ISBN 0-87169-817-X</ref> மேலும், 1921ன் பொவொல்ஸ்யே பஞ்சத்தால் 5&nbsp;மில்லியன் பேர் இறந்தனர்.<ref>[http://www.icrc.org/eng/resources/documents/misc/5rfhjy.htm Famine in Russia: the hidden horrors of 1921], International Committee of the Red Cross</ref>
டிசம்பர் 30, 1922ல், ரசிய சோவியத் கூட்டாட்சிச் சோசலிசக் குடியரசு (அந்த நேரத்தில் ''ரசிய சோசலிச கூட்டாட்சி சோவியத் குடியரசு'' என அழைக்கப்பட்டது), உக்ரேனிய, பெலாரசிய மற்றும் ட்ரான்ஸ்காக்கேசிய சோவியத் சோசலிசக் குடியரசுகளுடன் இணைந்து [[சோவியத் ஒன்றியம்|சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம்]] அல்லது சோவியத் ஒன்றியத்தை உருவாக்கிக் கொண்டன. சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தை உருவாக்கிய 15 குடியரசுகளில், ரசிய சோவியத் சோசலிசக் கூட்டுக் குடியரசே பரப்பளவில் மிகவும் பெரியதாகும். மேலும், இது சோவியத் ஒன்றியத்தின் மொத்த சனத்தொகையின் அரைவாசியிலும் மேலதிகமான சனத்தொகையையும் கொண்டிருந்தது. இதுவே 69-வருடகால ஒன்றிய வரலாற்றில் முக்கிய பங்களிப்புச் செய்துள்ளது.
 
1924ல் லெனினின் இறப்பைத் தொடர்ந்து, ட்ரொய்க்கா எனப்பட்ட குழுவொன்று சோவியத் ஒன்றியத்தை ஆட்சி புரிய அமர்த்தப்பட்டது. எவ்வாறாயினும், கொமியூனிசக் கட்சியின் தெரிவுசெய்யப்பட்ட பொதுச்செயலாளரான [[ஜோசப் ஸ்டாலின்]], அனைத்து எதிர்ப்புக் குழுக்களையும் தனது கட்சிக்குள் இணைத்துக்கொண்டு, பெரும்பாலான அதிகாரங்களைத் தன்வசப்படுத்திக் கொண்டார். 1929ல், உலகப் புரட்சியின் முக்கிய ஆதரவாளரான, [[லியோன் ட்ரொட்ஸ்கி]] சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் ஸ்டாலினின் ஒரு நாட்டில் சோசலிசம் எனும் கருத்து முன்வைக்கப்பட்டது. [[பெரும் துப்புரவாக்கம்|பெரும் துப்பரவாக்கத்தின்துப்பரவாக்கத்தின்போது]]போது, போல்செவிக் கட்சிக்குள் காணப்பட்ட உட்பூசல் உச்சநிலையை அடைந்தது. 1937-38 வரையான இந்த அடக்குமுறை வாய்ந்த காலகட்டத்தில், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பலாத்கார ஆட்சி மாற்றத்துக்கு திட்டம் தீட்டிய இராணுவத் தலைவர்கள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.<ref>Abbott Gleason (2009). ''[http://books.google.com/books?id=JyN0hlKcfTcC&pg=PA373 A Companion to Russian History]''. Wiley-Blackwell. p. 373. ISBN 1-4051-3560-3</ref>
 
[[Fileபடிமம்:RIAN archive 93172 Defenders of Leningrad.jpg|thumb|left|[[லெனின்கிராட் முற்றுகை|லெனின்கிராட்டின் பாதுகாவலர்கள்]]]]
 
ஸ்டாலினின் தலைமைத்துவத்தின் கீழ், அரசாங்கம் [[திட்டமிட்ட பொருளாதாரம்]], பெரும்பாலும் கிராமிய நாடாக இருந்த ரசியாவில் கைத்தொழில்மயமாக்கம் மற்றும் [[சோவியத் ஒன்றியத்தின் கூட்டுப் பண்ணைத் திட்டம்|விவசாயக் கூட்டுப் பண்ணைகள்]] என்பவற்றைச் செயற்படுத்தியது. விரைவான பொருளாதார மற்றும் சமூக மாற்றங்கள் நிறைந்த இக்காலப்பகுதியில், மில்லியன் கணக்கான மக்கள் தொழிலாளர் வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.<ref name="Getty">Getty, Rittersporn, Zemskov. Victims of the Soviet Penal System in the Pre-War Years: A First Approach on the Basis of Archival Evidence. The American Historical Review, Vol. 98, No. 4 (Oct. 1993), pp. 1017–49.</ref> இவர்களுள் ஸ்டாலினின் ஆட்சியை எதிர்த்த அரசியல் கைதிகளும் அடங்குவர். மேலும் மில்லியன் கணக்கானோர், சோவியத் ஒன்றியத்தின் ஒதுங்கிய பகுதிகளுக்கு நாடுகடத்தப்பட்டனர்.<ref name="Getty" /> கடுமையான சட்டங்கள் மற்றும் வரட்சி ஆகியவற்றுடன் நாட்டின் விவசாயத்தில் ஏற்பட்ட இடைக்காலச் சிதைவு காரணமாக 1932-33 காலப்பகுதியில் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது.<ref>[[R.W. Davies]], [[S.G. Wheatcroft]] (2004). ''The Years of Hunger: Soviet Agriculture, 1931–33'', pp. 401.</ref> எவ்வாறாயினும், பாரிய இழப்புக்களுடன், குறுகிய காலத்தில், சோவியத் ஒன்றியம் பாரிய விவசாயப் பொருளாதாரச் சமூகத்திலிருந்து, முக்கிய கைத்தொழிற் சக்தியாக மாறியது.
சூன் 22, 1941ல், நாசி ஜெர்மனி ஆக்கிரமிக்கா ஒப்பந்தத்தை உடைத்து, மனித வரலாற்றிலேயே மிகப் பெரியதும், மிகவும் பலமிக்கதுமான படையுடன் சோவியத் ஒன்றியத்தை ஆக்கிரமித்தது.<ref>{{cite web| title = World War II| publisher = Encyclopædia Britannica | accessdate =9 March 2008 | url = http://www.britannica.com/EBchecked/topic/648813/World-War-II}}</ref> இது இரண்டாம் உலகப்போரின் [[கிழக்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)|முக்கிய களமாக]] மாறியது. ஜெர்மனிய ராணுவம் ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், மொஸ்கோ போரின் போது அவர்களது தாக்குதல் தடைப்பட்டது. தொடர்ந்து, 1942-43 குளிர்காலத்தில் நடைபெற்ற [[சுடாலின்கிரட் சண்டை|ஸ்டாலின்கிராட் போரிலும்]],<ref>{{cite web | url = http://www.britannica.com/EBchecked/topic/648813/World-War-II | publisher =Encyclopædia Britannica|accessdate=12 March 2008|title=The Allies' first decisive successes: Stalingrad and the German retreat, summer 1942 – February 1943}}</ref> 1943 கோடைகாலத்தில் நடைபெற்ற குர்ஸ்க் போரிலும் பாரிய தோல்வியைச் சந்தித்தனர். [[லெனின்கிராட் முற்றுகை]]யும் ஜெர்மனியரின் இன்னொரு தோல்வியாகும். இதன்போது, அந்நகரம் 1941-44வரை ஜெர்மனிய, ஃபின்னியப் படைகளால், முற்றுகையிடப்பட்டது. பட்டினியால் வாடியபோதும், ஒரு மில்லியன் பேர் இறந்தபோதும், இந்நகரம் சரணடையவில்லை.<ref>[http://www.cambridge.org/gb/knowledge/isbn/item1173696/?site_locale=en_GB The Legacy of the Siege of Leningrad, 1941–1995]. Cambridge University Press.</ref> ஸ்டாலினின் நிர்வாகத்தின் கீழும், ஜோர்ஜி சுகோவ் மற்றும் கொன்ஸ்டான்டின் ரொகோஸ்சோவ்ஸ்கி போன்ற இராணுவத் தலைவர்களின் கீழும், சோவியத் படைகள், ஜெர்மனியரை 1944-45வரை கிழக்கைரோப்பா வழியாக விரட்டி, மே 1945ல் பெர்லினைக் கைப்பற்றின. ஆகஸ்ட் 1945ல் சோவியத் ராணுவம், சீனாவின் மன்சூக்குவோ மற்றும் [[வட கொரியா]]விலிருந்து சப்பானியரை வெளியேற்றி, சப்பானுக்கெதிரான நேச நாடுகளின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்தது.
 
[[Fileபடிமம்:Convert ru kosmos077.jpg|thumb|upright|விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதரான [[யூரி ககாரின்]]]]
 
இரண்டாம் உலகப்போரின் 1941-45 காலப்பகுதி ரசியாவில் ''பெரும் நாட்டுப்பற்றுப் போர்'' எனக் குறிப்பிடப்படுகிறது. மனித வரலாற்றில் மிகவும் கொடூரமான இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்ற இப்போரில், 10.6&nbsp;மில்லியன் ராணுவத்தினரும், 15.9&nbsp;மில்லியன் மக்களும் கொல்லப்பட்டனர்.<ref>{{Cite book|author=Erlikman, V.|title=Poteri narodonaseleniia v XX veke : spravochnik|year=2004|id=Note: Estimates for Soviet World War II casualties vary between sources|isbn=5-93165-107-1|publisher=Russkai︠a︡ panorama|location=Moskva}}</ref> இது இரண்டாம் உலகப்போரின் மொத்த இழப்பில் மூன்றில் ஒரு பகுதியாகும். சோவியத் மக்களின் மொத்த மக்கள் இழப்பு இதனிலும் அதிகமாகும்.<ref>Geoffrey A. Hosking (2006). "''[http://books.google.com/books?id=CDMVMqDvp4QC&pg=PA242 Rulers and victims: the Russians in the Soviet Union]''". Harvard University Press. p. 242. ISBN 0-674-02178-9</ref> சோவியத் பொருளாதாரமும், உட்கட்டமைப்பும் பாரிய அழிவுக்குள்ளானது.<ref>{{cite web|title=Reconstruction and Cold War|publisher=Library of Congress|url=http://countrystudies.us/russia/12.htm|accessdate=27 December 2007}}</ref> ஆயினும் சோவியத் ஒன்றியம் மாபெரும் வல்லரசாக எழுச்சி பெற்றது.
ஸ்டாலினின் மரணத்துக்குப்பின், குறுகியகால கூட்டுத்தலைமையின் கீழ், புதிய தலைவரான [[நிக்கிட்டா குருசேவ்]], ஸ்டாலினின் கொள்கைகளை விமர்சித்ததோடு, ஸ்டாலின்மய ஒழிப்புக் கொள்கைகளைச் செயற்படுத்தினார். தொழிலாளர் வதை முகாம்கள் ஒழிக்கப்பட்டன. பல சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்டனர். (இவர்களுல் பலர் இறந்திருந்தனர்.)<ref>{{Cite news|url=http://www.time.com/time/magazine/article/0,9171,916205-2,00.html|work=TIME|accessdate=1 August 2008|title=Great Escapes from the Gulag|date=5 June 1978}}</ref> பொதுவான அடக்குமுறைக் கொள்கைகளின் தளர்வு, பின்பு குருசேவ் தளர்வு என அழைக்கப்பட்டது. இதேவேளை, துருக்கியில் ஐக்கிய அமெரிக்காவின் ஜூபிட்டர் ஏவுகணைகள் வைக்கப்பட்டமை மற்றும் [[கியூபா ஏவுகணை நெருக்கடி|கியூபாவில் சோவியத் ஏவுகணைகள்]] வைக்கப்பட்டமை காரணமாக ஐக்கிய அமெரிக்காவுடனான முறுகல்நிலை அதிகரித்தது.
 
[[Fileபடிமம்:Mir on 12 June 1998edit1.jpg|left|thumb|சோவியத் மற்றும் ரசிய [[விண்வெளி நிலையம்|விண்வெளி நிலையமான]] [[மிர்]].]]
 
1957ல், சோவியத் ஒன்றியம் உலகின் முதல் [[செயற்கைக்கோள்|செயற்கைக்கோளான]] [[ஸ்புட்னிக் 1]]ஐ ஏவியதன் மூலம் விண்வெளி யுகத்தை ஆரம்பித்தது. ரசிய [[விண்ணோடி|விண்வெளி வீரரான]] [[யூரி ககாரின்]] ஏப்ரல் 12, 1961 அன்று, [[வாஸ்ட்டாக் 1]] விண்கலத்தில் புவியை வலம்வந்து, விண்வெளியை வலம்வந்த முதல் மனிதரானார்.
1991ன் போது, பொருளாதார மற்றும் அரசியல் கொந்தளிப்புகள் ஏற்படத் தொடங்கின. இதனால் பால்டிக் குடியரசு நாடுகள் ஒன்றியத்திலிருந்து விலகிச் செல்லத் தீர்மானித்தன. மார்ச் 17ல், பொது வாக்கெடுப்பொன்று நடைபெற்றது. இதில் பங்குபற்றிய பெரும்பாலான மக்கள் சோவியத் ஒன்றியத்தை புதிய கூட்டரசாகத் தக்கவைத்துக் கொள்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆகஸ்ட் 1991ல், கோர்பச்சேவுக்கு எதிராக, சோவியத் ஒன்றியத்தின் கொம்யூனிசக் கட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பதிலாக, சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்க, கோர்பச்சேவின் அரசாங்க உறுப்பினர்கள் புரட்சியொன்றை நடத்தினர். மக்களின் விருப்பத்துக்கு மாறாக டிசம்பர் 25, 1991ல் சோவியத் ஒன்றியம் 15 நாடுகளாகச் சிதறியது.
 
=== ரசியக் கூட்டரசு ===
 
[[Fileபடிமம்:Moscow, City May 2010 03.JPG|thumb|கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் மொஸ்கோ சர்வதேச வர்த்தக மையம்]]
 
ரசிய வரலாற்றிலேயே முதலாவதாக, சூன் 1991ல் நடைபெற்ற சனாதிபதித் தேர்தலில், [[போரிஸ் யெல்ட்சின்]] சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சோவியத் ஒன்றியத்தின் சிதறலின் போதும், அதன் பின்னரும் தனியார்மயமாக்கல் மற்றும் சந்தை மற்றும் வர்த்தகத் தாராளமயமாக்கல் ஆகியவை உட்பட பாரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.<ref name=OECD/> இவற்றுள் ஐக்கிய அமெரிக்காவாலும், [[சர்வதேச நாணய நிதியம்|சர்வதேச நாணய நிதியத்தினாலும்]] பரிந்துரைக்கப்பட்ட, அதிர்ச்சி வைத்தியம் எனப்பட்ட விரைவான பொருளாதார மாற்றமும் அடங்கும்.<ref>{{Cite news|url=http://query.nytimes.com/gst/fullpage.html?res=9F0CEED91F39F932A15751C1A965958260|title= U.S. is abandoning 'shock therapy' for the Russians|author=Sciolino, E.|work=The New York Times|accessdate=20 January 2008|date=21 December 1993}}</ref> இம் மாற்றங்கள் காரணமாக பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால், 1990-95 காலப்பகுதியில், [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]]யிலும், கைத்தொழில் விளைபொருட்களிலும் 50% வீழ்ச்சி ஏற்பட்டது.<ref name=OECD/><ref>{{cite web|title=Russia: Economic Conditions in Mid-1996|publisher=Library of Congress|url=http://lcweb2.loc.gov/cgi-bin/query/r?frd/cstdy:@field(DOCID+ru0119)|accessdate=4 March 2011}}</ref>
மார்ச் 2, 2008 அன்று, [[திமித்ரி மெட்வெடெவ்]] ரசிய சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதோடு, புட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டார். 2012 சனாதிபதித் தேர்தலையடுத்து, புடின் சனாதிபதியானதுடன், மெட்வடேவ் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
 
== அரசியல் ==
உருசிய அரசியலமைப்பின் படி அந் நாடு சனாதிபதியை நாட்டுத் தலைவராகவும், [[பிரதம அமைச்சர்|பிரதம அமைச்சரை]] அரசுத் தலைவராகவும் கொண்ட ஒரு [[கூட்டாட்சி]], [[அரை-சனாதிபதி முறை]]க் குடியரசு ஆகும். உருசியக் கூட்டமைப்பு அடிப்படையில் பல கட்சி, பிரதிநிதித்துவ மக்களாட்சி ஆகும். இதில் கூட்டாட்சி அரசு மூன்று பிரிவுகளைக் கொண்டது:
 
* 2 [[ருஷ்ய நாட்டின் கூட்டமைப்பு நகரங்கள்|கூட்டமைப்பு நகரங்கள்]]
 
== குறிப்புகள் ==
{{reflist|3}}
 
 
[[பகுப்பு:இரசியா| ]]
[[பகுப்பு:AFTv5Test‎AFTv5Test]]
 
{{Link FA|af}}
{{Link FA|hr}}
{{Link FA|id}}
44,070

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1667049" இருந்து மீள்விக்கப்பட்டது