"ஒலிம்பிக் விளையாட்டுக்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
Robot: as:অলিম্পিক is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி (Robot: as:অলিম্পিক is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்)
 
'''ஒலிம்பிக் விளையாட்டுக்கள்''' ('''Olympic Games''' அல்லது '''Olympics''') என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக்களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். இதில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கு பெறுகின்றனர். உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டியாகக் கருதப்படும் ஒலிம்பிக்கில் 200 நாடுகளுக்கு மேல் கலந்து கொள்கின்றன.<ref name="EB">{{cite web | title= Overview of Olympic Games | author= | coauthors= | url=http://www.britannica.com/EBchecked/topic/428005/Olympic-Games | publisher=Encyclopædia Britannica | accessdate=4 June 2008
}}</ref> பண்டைய [[கிரீஸ்]] நாட்டில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் இருந்து வந்தது. பின்னர், [[பியர் தெ குபர்த்தென்|பியர் ஃபிரெடி, குபர்த்தென் பிரபு]] என்ற [[பிரான்ஸ்]] நாட்டு பிரபுவால் (nobleman) 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் மீண்டும் வந்தது. இவர் 1894 ஆம் ஆண்டு [[அனைத்துலக ஒலிம்பிக் குழு]]வை உருவாக்கினார். இதன் அமைப்பும், அதிகாரமும் [[ஒலிம்பிக் பட்டயம்|ஒலிம்பிக் பட்டயத்தினால்]] வரையறுக்கப்படுகின்றன. அனைத்துலக ஒலிம்பிக் குழுவே [[பன்னாட்டு ஒலிம்பிக் குழு|ஒலிம்பிக் இயக்கத்தை]] நிர்வகித்து வருகிறது. உலகப் போர் நடைபெற்ற ஆண்டுகள் தவிர்த்து, [[1896]] முதல், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்று வருகின்றன. ஆதி கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கி.மு.776 இல் [[கிரேக்கம்|கிரேக்க]] நாட்டிலுள்ள [[ஒலிம்பியா, கிரீசு|ஒலிம்பியாஒலிம்பியாவில்]]வில் தொடங்கி கி.பி.393 வரை நடைபெற்றன. கிரேக்க கவிஞர் [[பானாஜியோடிஸ் ஸௌட்ஸாஸ்]] கி.பி.1833இல் எழுதிய "இறந்தவர்களின் உரையாடல்" என்னும் கவிதை இப்போட்டிகளை மீண்டும் தொடங்கும் ஆர்வத்தை உருவாக்கியது.
 
20 ஆம் 21 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட ஒலிம்பிக் இயக்கத்தின் வளர்ச்சி ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், ஊனமுற்றோருக்கான [[மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]], பதின்ம வயதினருக்கான [[இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] என்பன தொடங்கப்பட்டமை இம் மாற்றங்களுட் சில. பனிக்கால விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பொருட்டு [[1924]] முதல் [[குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] நடத்தப்படுகின்றன. தொடக்கத்தில் கோடை கால மற்றும் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஒரே ஆண்டில் நடத்தப்பட்டு வந்தன. [[1994]] முதல் [[கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. பொருளாதாரம், அரசியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சிகளுக்கு ஏற்ப ஒலிம்பிக் குழுவும் பல்வேறு மாற்றங்களைச் செய்யவேண்டியிருந்தது. இது, தொழில்முறை சாராத போட்டியாளர்கள் பங்குபெறும் போட்டியாக இருக்கவேண்டும் என்றே இவ்வியக்கத்தை உருவாக்கிய கூபேர்ட்டின் எண்ணியிருந்தார். ஆனாலும், ஒலிம்பிக் குழு இந்த விதியை மாற்றித் தொழில்முறை விளையாட்டு வீரர்களையும் போட்டிகளில் பங்குபற்ற அனுமதித்தது. மக்கள் ஊடகங்களின் முக்கியத்துவம் வளர்ந்து வந்தபோது, நிறுவன விளம்பர ஆதரவு முறை உருவாகி இப்போட்டிகள் வணிகமயமாக்கப்பட்டன. 1916, 1940, 1944 ஆகிய ஆண்டுகளில் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் உலகப் போரினால் நடைபெறவில்லை. பனிப்போர்க் காலத்தில் பல நாடுகள் இப்போட்டியைப் புறக்கணித்ததனால், 1980, 1984 ஆண்டுகளில் இடம்பெற்ற போட்டிகள் மட்டுப்படுத்தப்பட்ட பங்கேற்புடனேயே நடைபெற்றன.
ஏறத்தாழ உலகில் உள்ள எல்லா நாடுகளுமே பங்கேற்கும் அளவுக்கு ஒலிம்பிக் போட்டி வளர்ச்சி அடைந்துள்ளது. இத்தகைய வளர்ச்சி, புறக்கணிப்புகள், போதை மருந்துப் பயன்பாடு, [[கையூட்டு]], [[பயங்கரவாதம்|பயங்கரவாதச்]] செயல்கள் போன்றவை தொடர்பான பல சவால்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் போட்டிகளும், அது தொடர்பான ஊடக விளம்பரமும் பல விளையாட்டு வீரர்கள் தேசிய அளவிலும் சில சமயங்களில் பன்னாட்டு அளவிலும் கூடப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. அத்துடன் போட்டிகளை நடத்தும் நகரமும், நாடும் தம்மை உலகுக்கு வெளிப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பையும் ஒலிம்பிக் ஏற்படுத்துகிறது.
 
== பண்டைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ==
{{Main|பண்டைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்}}
பண்டைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை [[கிரீசு]] நாட்டின் [[ஒலிம்பியா, கிரீசு|ஒலிம்பியாவில்]] இருந்த [[சூசு|சேயுசு]] கோவிலடியில் சமயமும், விளையாட்டும் சார்ந்த [[விழா]]வாக இடம்பெற்றது. இது அக்காலக் கிரீசில் இருந்த [[நகர அரசு]]கள், இராச்சியங்கள் என்பவற்றைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு இடையேயான போட்டியாகும். பெரும்பாலும் [[தடகள விளையாட்டு]]க்களே இடம்பெற்றாலும், மற்போர், குதிரைப் பந்தயம், தேர்ப் பந்தயம் போன்ற சண்டை சார்ந்த போட்டிகளும் நடைபெற்றன. இவ்விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் காலங்களில் நகர அரசுகளுக்கு இடையேயான பிணக்குகள் அனைத்தும் போட்டிகள் முடியும்வரை ஒத்திவைக்கப்பட்டதாகப் பலரும் எழுதி உள்ளனர். இது ஒலிம்பிக் அமைதி அல்லது ஒலிம்பிக் போர் நிறுத்தம் என அறியப்பட்டது. ஆனால் இது தற்காலத்தில் எழுந்த ஒரு உண்மையல்லாத கருத்து. கிரேக்கர்கள் என்றுமே தமக்கு இடையேயான போர்களை ஒத்திவத்தது இல்லை.
அடுத்த பனி ஒலிம்பிக்சு, 2014ல் இருசியாவின் சோச்சி நகரில் நடக்க இருக்கிறது.
 
== குறிப்புகள் ==
{{reflist}}
 
* [http://www.haidukpress.com/tantalus/index.html பெலோப்ஸ் என்ற பெயருடைய ஒலிம்பியா நாட்டின் அரசனின் கதை] - {{ஆ}}
{{ஒலிம்பிக் போட்டிகள்}}
 
[[பகுப்பு:ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]]
[[பகுப்பு:AFTv5Test‎AFTv5Test]]
 
{{Link FA|as}}
{{Link FA|de}}
{{Link FA|hr}}
44,121

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1667271" இருந்து மீள்விக்கப்பட்டது