மெசொப்பொத்தேமியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பெயர் வரலாறு: படிமம் தமிழில்
சி Robot: ceb:Mesopotamya is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 3:
'''மெசொப்பொதாமியா''' (''Mesopotamia''), [[தென்மேற்கு ஆசியா]]வைச் சேர்ந்த ஒரு பிரதேசமாகும். இது டைகிரிஸ், யூபிரட்டீஸ் ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட வளமான [[வண்டல்மண்]] பகுதியாகும். இன்றைய [[ஈராக்]], [[ஈரான்]], மற்றும் [[சிரியா]] ஆகிய நாடுகளின் பகுதிகளை இது உள்ளடக்கியிருந்தது. பொதுவாக மெசொபொதேமியா என்னும் சொல், மேற்கில் சிரியப் பாலைவனத்தாலும், தெற்கில் அராபியப் பாலைவனத்தாலும், தென்கிழக்கில் பாரசீக வளைகுடாவினாலும், கிழக்கில் ஸக்ரோஸ் மலைகளினாலும், வடக்கில் காக்கேசிய மலைகளினாலும் சூழப்பட்ட, மேற்சொன்ன இரண்டு [[ஆற்றுச் சமவெளி]] முழுவதையும், சுற்றியுள்ள [[தாழ்நிலம்|தாழ்நிலப்]] பகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கியதாகும். மெசொப்பொதேமியா, உலகின் மிகப் பழைய [[நாகரிகம்|நாகரிகங்கள்]] சில தழைத்தோங்கியிருந்த இடம் என்ற வகையில் மிகவும் புகழ் பெற்றது. மெசொப்பொதேமியாவின் [[எழுத்து முறைமை]], உலகின் மிகப் பழைய எழுத்து முறைமைகளுள் ஒன்று. இது மெசொப்பொத்தேமியா உலக நாகரிகத்தின் தொட்டில் என்று புகழப்படக் காரணமாயிற்று.
 
== பெயர் வரலாறு ==
 
[[படிமம்:Tigr-euph-ta.png|thumb|right|மெசொப்பொத்தேமியாவிற்கு வரைவிலக்கணமாக உள்ள டைகிரிஸ் யூப்ரதீஸ் நதிகளைக் காட்டும் வரைபடம்.]]
 
பிராந்திய இடப் பெயராகிய ''மெசொப்பொத்தேமியா'' என்பது புராதன கிரேக்கச் சொற்களாகிய μέσος (''மெசொ'') "மத்திய" மற்றும் ποταμός (''பொத்தேமியா'') "ஆறு" என்பவற்றிலிருந்து தோன்றியதுடன் ''ஆறுகளுக்கு இடைப்பட்ட நிலம்'' எனப் பொருள்படுகின்றது. ஹீப்ருவில் உள்ள ''நகரைம்'' என்பதை மொழிபெயர்ப்பதற்கு, இது கிரேக்க [[செப்துவசிந்தா]] (கி.மு. 250) முழுவதும் பயன்படுத்தப்படுகின்றது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட, [[அலெக்சாந்தர்|அலெக்சாந்தரின்]] காலத்தைக் குறிக்கும் ''அனபாசிஸ் அலெக்சாந்திரி'' என்ற நூலில் ''மெசொப்பொத்தேமியா'' என்ற சொல் உள்ளது, கிரேக்கர்கள் இச்சொல்லை முன்பிருந்தே பயன்படுத்துவதற்கு ஆதாரமாக உள்ளது. அனபாசிசில் ''மெசொப்பொத்தேமியா'' என்பது யுப்பிரதீஸ் நதிக்குக் கிழக்கே, வட [[சிரியா|சிரியாவில்]]வில் அமைந்துள்ள நிலப்பகுதியைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. [[அரமேயம்|அரமேய]] வார்த்தையான ''பிரிடம் / பிரிட் நரிம்'' (biritum / birit narim) இதே போன்ற புவியியல் கருத்தை ஒத்திருந்தது.<ref>{{citation |last1=Finkelstein |first1=J.J. |year=1962 |title=Mesopotamia |journal=Journal of Near Eastern Studies |volume=21 |issue=2 |pages=73–92 |jstor=543884 |doi=10.1086/371676 }}</ref> பின்னர், மெசொப்பொத்தேமியா என்பது பொதுவாக யூப்ரடீஸ், டைக்ரிஸ் நதிகளுக்கு இடையே அமைந்துள்ள அனைத்துப் பிரதேசத்தையும் குறிக்க்ப் பயன்படுத்தப்பட்டது. அதன் மூலம் சிரியாவின் பகுதிகள் மட்டுமல்லாமல் ஈராக் மற்றும் தென்கிழக்கு துருக்கியின் கிட்டத்தட்ட அனைத்து பிரதேசங்களும் இதனுள் உள்ளடங்கின.<ref name=fosterpolingerfoster>{{citation |title=Civilizations of ancient Iraq |last1=Foster |first1=Benjamin R. |last2=Polinger Foster |first2=Karen |year=2009 |publisher=Princeton University Press |location=Princeton |isbn=978-0-691-13722-3 }}</ref> யூப்ரதீசின் மேற்கிலும் ஜக்ரோஸ் மலைகளின் மேற்குப் பகுதியிலும் அமைந்துள்ள ஸ்டெப்பிஸ் புல்வெளியானது, பெரும்பாலும் பரவலான வகையில் மெசொப்பொத்தேமியாவின் கீழ் உள்ளடக்கப்படுகின்றது.<ref name=canard>{{citation |last1=Canard |first1=M. |editor1-first=P. |editor1-last=Bearman |editor2-first=Th. |editor2-last=Bianquis |editor3-first=C.E. |editor3-last=Bosworth |editor4-first=E. |editor4-last=van Donzel |editor5-first=W.P. |editor5-last=Heinrichs |editor3-link=Clifford Edmund Bosworth |title=Encyclopaedia of Islam, Second Edition |year=2011 |publisher=Brill Online |location=Leiden |chapter=al-ḎJazīra, Ḏjazīrat Aḳūr or Iḳlīm Aḳūr |oclc=624382576 }}</ref><ref name=wilkinson2000>{{citation |last1=Wilkinson |first1=Tony J. |year=2000 |title=Regional approaches to Mesopotamian archaeology: the contribution of archaeological surveys |journal=Journal of Archaeological Research |volume=8 |issue=3 |pages=219–267 |issn=1573-7756 |doi=10.1023/A:1009487620969 }}</ref><ref name=matthews2003>{{citation |last=Matthews |first=Roger |title=The archaeology of Mesopotamia. Theories and approaches |year=2003 |publisher=Routledge |location=Milton Square |series=Approaching the past |isbn=0-415-25317-9 }}</ref> மேலும் சில வேறுபாடுகள் பொதுவாக உயர் அல்லது வடக்கு மெசொப்பொத்தேமியா மற்றும் கீழ் அல்லது தெற்கு மெசொப்பொத்தேமியாவிற்கு இடையே செய்யப்படுகின்றன.<ref name=miqueletal>{{citation |last1=Miquel |first1=A. |last2=Brice |first2=W.C. |last3=Sourdel |first3=D. |last4=Aubin |first4=J. |last5=Holt |first5=P.M. |last6=Kelidar |first6=A. |last7=Blanc |first7=H. |last8=MacKenzie |first8=D.N. |last9=Pellat |first9=Ch. |editor1-first=P. |editor1-last=Bearman |editor2-first=Th. |editor2-last=Bianquis |editor3-first=C.E. |editor3-last=Bosworth |editor4-first=E. |editor4-last=van Donzel |editor5-first=W.P. |editor5-last=Heinrichs |editor3-link=Clifford Edmund Bosworth |title=Encyclopaedia of Islam, Second Edition |year=2011 |publisher=Brill Online |location=Leiden |chapter=ʿIrāḳ |oclc=624382576 |display-authors=9 }}</ref> உயர் மெசொப்பொத்தேமியாவானது ''ஜெசிரா'' என்றும் அழைக்கப்படுகின்றது. இது யூப்ரதீஸ் மற்றும் டைக்ரிஸ் நதிகளுக்கு இடையில் உள்ள பகுதியில் [[பக்தாத்|பக்தாத்திற்குக்]]திற்குக் கீழுள்ள பிரதேசமாகும்.<ref name=canard/> கீழ் மெசொப்பொத்தேமியாவானது தெற்கு ஈராக், [[குவைத்]] மற்றும் மேற்கு ஈரானின் சில பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது.<ref>{{Citation|url=http://books.google.com/books?id=nAemO6HmOgYC&pg=PA2 |title=Who Were The Babylonians?|work= Bill T. Arnold|year=2004|pages=2|postscript=}}</ref><ref>{{Citation|url=http://books.google.com/books?id=Ix4X-0QykDAC&pg=PT108&dq |title=From Adam to Noah-The Numbers Game: Why the Genealogy Puzzles of Genesis 5|work= Leonard Timmons|year=2012|pages=|postscript=}}</ref><ref>{{Citation|url=http://books.google.com/books?id=K-4OtwAACAAJ&d |title=Southern Mesopotamia During the Bronze Age|work= Lisa E. Gross|year=2003|pages=|postscript=}}</ref> நவீன கல்விசார் பயன்பாட்டில், மெசொப்பொத்தேமியா எனும் சொல் பெரும்பாலும் ஒரு கால உட்பொருளைக் கொண்டுள்ளது. முசுலிம்கள் வெற்றிபெற்ற வரையான பகுதிகளைக் குறிக்கவே இது பயன்படுத்தப்படுகின்றது. தற்போது சிரியா, ஜெசிரா மற்று ஈரான் ஆகிய பெயர்கள் இப்பிரதேசத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.<ref name=fosterpolingerfoster/><ref name=bahrani>{{citation |last1=Bahrani |first1=Z. |editor1-last=Meskell |editor1-first=L. |title=Archaeology under fire: Nationalism, politics and heritage in the Eastern Mediterranean and Middle East |year=1998 |publisher=Routledge |location=London |isbn=978-0-415-19655-0 |pages=159–174 |chapter=Conjuring Mesopotamia: imaginative geography a world past }}</ref> இதன் பின்னர் இடக்கரடக்கல் பல்வேறு 19 ஆம் நூற்றாண்டின் மேற்கத்திய ஆக்கிரமிப்பின் மத்தியிலான பிராந்தியத்தின் காரணமாக இன்றும் நிலுவையில் இச் சொற்கள் உள்ளன என்று வாதிட்டனர்.<ref name=bahrani/><ref>Scheffler, Thomas; 2003. “ 'Fertile crescent', 'Orient', 'Middle East': the changing mental maps of Southeast Asia,” ''European Review of History'' 10/2: 253–272.</ref>
 
== வரலாறு ==
{{Ancient Mesopotamia}}
பெருமளவு பண்டைக்கால நாகரிகங்களைச் சேர்ந்த மக்கள் மெசொப்பொத்தேமியாவில் குடியேறியும், அதனைக் கைப்பற்றி [[ஆட்சி]] செய்தும் உள்ளனர். பண்டைய மெசொப்பொத்தேமியாவின் நிகழ்வுகளுக்கான காலத்தை நிர்ணயிப்பது இன்னும் [[சர்ச்சை|சர்ச்சைக்குரிய]]க்குரிய ஒன்றாகவே இருந்து வருவதுடன், பல்வேறுபட்ட கால நிர்ணய முறைகளும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இதன் காரணமாக, இக் கட்டுரையில் எடுத்தாளப்பட்டுள்ள காலக் குறிப்புகள் அண்ணளவானவை என்றே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
[[Fileபடிமம்:Statue Gudea Met 59.2.jpg|thumb|250px|கி.மு 2090 ஆண்டு ஆட்சியாளர்களான குடியா இனத்தைச் சேர்ந்த 18 சிலைகளில் ஒன்று. ]]
 
* மெசொப்பொத்தேமியா, [[சுமேரியா|சுமேரியர்]], [[அக்காத்|அக்காத்தியர்]]தியர், [[பபிலோனிய நாகரிகம்|பபிலோனியர்]] மற்றும் [[அசிரிய நாகரிகம்|அசிரியர்]] போன்றோரின் நாகரிகங்களையும் உள்ளடக்கிய பல பண்டைய நாகரிகங்கள் வளர்ந்தோங்கிய ஒரு இடமாகும்.
 
* இப் பிரதேசத்துக்குள் எப்பொழுது நுழைந்தார்கள் என்பதில் அறிஞர் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவினாலும், சுமேரியர்களே இங்கு முதன் முதலில் குடியேறியவர்கள் என நம்பப்படுகிறது. இந்த வளமான பகுதியில், கி.மு 10,000 க்கும், கி.மு 5000 க்கும் இடைப்பட்ட காலத்தில், பல்வேறு பண்பாடுகளைச் சேர்ந்தவர்கள் [[குடியேற்றம்|குடியேறி]] வாழ்ந்துள்ளார்கள். இவர்களுள், [[உபெய்த்]] (Ubaid) மற்றும் [[சமரான்]] (Samarran) பண்பாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். பொதுவாக சிக்கலாக சமூக அமைப்புகள் கி.மு 6000 ஆண்டுகள் அளவிலேயே வளர்ச்சி பெற்றதாகக் கொள்ள வேண்டும். அக்காலத்திலேயே [[ஜெரிக்கோ]] நகரம் நீர்பாசனத் தொழில் நுட்பங்களையும் கொண்ட மக்கள் நெருக்கடி மிக்க நகரமாக இருந்திருக்கிறது.அவர்களின் [[சுமேரிய மொழி|சுமேரியருடைய மொழி]], அறியப்பட்ட வேறு மொழிகளுடன் தொடர்பில்லாததாகக் கருதப்படுவதால், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதைக் கண்டறிவது கடினமானதாக உள்ளது. அவர்களுடைய பழங்கதைகளில் சூழவுள்ள இடங்கள் பற்றிய குறிப்புகள் காணப்பட்டபோதும், அவர்கள் தோற்றம் பற்றி அறிந்து கொள்வதற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. சுமேரிய மொழி கி.மு 3200 - 2900 காலப்பகுதியை அண்டிப் பயன்பாட்டில் இருந்தது அறியப்பட்டுள்ளது.
வரிசை 29:
* இப்பகுதியின் ஆட்சி அதிகாரம் முடிவில் "ஊர்" எனப்பட்ட நகர்த் தேசத்திடம் சேர்ந்தது. "ஊர்" இன் மூன்றாவது அரச வம்சத்தின் (ஊர் III) ஆட்சியின் போது, கைத்தொழில்கள் மீது அரசின் கட்டுப்பாடு உச்சநிலையை அடைந்தது. "ஊர்-நம்மு", "ஷுல்கி", "ஹம்முராபி" என்பவர்கள் மூன்றாவது ஊர் அரசவம்சத்தின் புகழ் பெற்ற அரசர்களாவர்.
 
* கி.மு 1600 ஆண்டளவில் "மித்தன்னி" (Mitanni) என்னும் கிழக்கு இந்தோ ஐரோப்பிய இன மக்கள், துருக்கிக்குத் தென்கிழக்கே உள்ள மெசொப்பொத்தேமியப் பகுதியில் குடியேறினர். கி.மு 1450 ல், நடுத்தர அளவுள்ள பேரரசொன்றை மெசொப்பொத்தேமியாவின், கிழக்கு, வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் இவர்கள் நிறுவியதுடன், மற்றப்பகுதிகளைச் சேர்ந்த அரசர்களிடமிருந்து சிலகாலம் திறையும் பெற்று வந்தனர். இவர்களுடைய அதிகாரம் "காப்தி" (மினோயிக் கிறீட்) பரவியிருந்ததனால் இவர்கள் எகிப்தின் [[பாரோ|பாரோக்களுக்கு]]ப்க்களுக்குப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கினர்.
 
* இவர்கள் கி.மு 1300 இல், [[சின்ன ஆசியா|சின்ன ஆசியாவின்]]வின் (Asia Minor) பெரும்பகுதியில் அதிகாரம் பெற்று, [[ஹத்துசாஷ்]] (இன்றைய துருக்கி) இலிருந்து ஆட்சி புரிந்து வந்த, மேற்கு இந்தோ-ஐரோப்பிய இனத்தவரான ஹத்திகளுக்குக் (Hatti) கீழ் [[சிற்றரசு]] நிலைக்குத் தாழ்ந்தனர்.
 
== மொழி மற்றும் எழுத்து வடிவங்கள் ==
மெசபடோமியாவில் வழங்கப்பட்ட மொழி ஒரு தனிப்பட்ட வடிவம் உடைய சுமேரிய மொழியாக இருந்தது.
[[Fileபடிமம்:Nimrud ivory lion eating a man.jpg|thumb|right|alt=Square, yellow plaque showing a lion biting in the neck of a man lying on his back|கி.மு.9-7 ஆம் நூற்றாண்டு- புதிய அசிரியக் காலத்தைச் சேர்ந்த நிமுருத் தந்தச் சிலைகளில் ஒன்று. சிங்கம் மனிதனை உண்பது போல் செய்யப்பட்டது.]]
 
சுமேரியர்களிடையே செமிட்டிக் இனத்தாரிடையே ஒரு வட்டார வழக்கும் சொகுரு இனத்தாரிடையே சுபார்ட்டு என்ற மொழியும் வழங்கப்பட்டது.<ref>Finkelstein, J.J. (1955), "Subartu and Subarian in Old Babylonian Sources", (Journal of Cuneiform Studies Vol 9, No. 1)</ref> இவை ஹுரோ உரார்தியன் மொழி குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளில் தனிப்பட்டு, பெயர்கள், நதிகள் மலைகளின் பெயர்கள் மற்றும் கைவினைப்பொருட்களைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது.
வரிசை 47:
மூன்றாம் நூற்றாண்டு காலத்தில் மெசபடோமியாவில் நாகரிக மாற்றம் காரணமாக சுமேரிய மற்றும் அக்கடிய மொழி வளர்க்கவும் பரவவும் செய்தது. <ref name='Deutscher'>{{Citation|title=Syntactic Change in Akkadian: The Evolution of Sentential Complementation|author=Deutscher, Guy|authorlink=Guy Deutscher (linguist)|publisher=[[Oxford University Press|Oxford University Press US]]|year=2007|isbn=978-0-19-953222-3|pages=20–21|url=http://books.google.co.uk/books?id=XFwUxmCdG94C}}</ref> மெசபடோமியாவில் அனைத்து பகுதியிலும் சுமேரியர்களின் மீதானாக்கடியர்களின் செல்வாக்கு காரணமாகவும் அவர்களின் மொழியில் இலக்கண விதிகள், வரிவடிவம், மற்றும் பேச்சொலிகளில் தாக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக கி.மு மூன்று மற்றும் இரண்டாம் நூற்றாண்டில் சுமேரிய மொழி மெல்ல மெல்ல மறைந்து அக்கடிய மொழியே பரவலாக மக்களின் பேச்சுமொழியாக இருந்தது.<ref name="woods">Woods C. 2006 “Bilingualism, Scribal Learning, and the Death of Sumerian”. In S.L. Sanders (ed) ''Margins of Writing, Origins of Culture'': 91-120 Chicago [http://oi.uchicago.edu/pdf/OIS2.pdf]</ref> ஆனால் கி. பி. முதலாம் நூற்றாண்டு வரை இறைவழிபாடு, புனிதச் சடங்குகள், இலக்கிய மற்றும் விஞ்ஞான மொழியாக சுமேரிய மொழியே மெசபடோமியாவெங்கும் பயன்படுத்தப்பட்டது.
 
=== இலக்கியம் ===
பாபிலோனிய பேரரசின் நகரங்கள் மற்றும் கோயில்களில் நூலகங்கள் நடைமுறையில் இருந்தன. ஆண்களும் பெண்களும் மிகச்சிறந்த கல்வியைப் பெற்றிருந்தனர்.<ref>Tatlow, Elisabeth Meier [http://books.google.co.uk/books?id=ONkJ_Rj1SS8C&pg=PA75&dq=women+men+literate+babylonia&as_brr=3#PPA75,M1 ''Women, Crime, and Punishment in Ancient Law and Society: The ancient Near East''] Continuum International Publishing Group Ltd. (31 March 2005) ISBN 978-0-8264-1628-5 p. 75</ref> மற்றும் செமிட்டிக் பாபிலோனியர்களின் இந்த தொடர்பு காரணமாகவும் சிக்கலான, விரிவான அசையெழுத்து கொண்ட சுமேரிய மொழியானது அழியும் நிலைக்கு ஆளானது. மேலும் பேரளவிலான சுமேரிய இலக்கியங்கள் பாபிலோனிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.
 
வரிசை 54:
 
== அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ==
=== கணிதம் ===
மெஸோபோடமியர்களின் கணிதம் மற்றும் அறிவியல் அறுபதினை அடிப்படையாக (அடியெண் 60) கொண்ட எண் முறையை கொண்டது. இதன் அடிப்படையில் அவர்கள் 60 நிமிடம் ஒரு மணி நேரமாகவும்,24 மணி நேரம் ஒரு நாளாகவும் மற்றும் வட்டத்தின் கோணத்தை 360 பாகைகளாகவும் கணக்கிட்டனர்.சுமேரிய நாட்காட்டி ஏழு நாள்களை அடிப்படையாக கொண்ட வாரத்தை உடையது. இக்கணக்கீட்டு முறையே முற்காலத்தில் வரைபடங்களை உருவாக்க அடிப்படையாக அமைந்தது. பாபிலோனியர்கள் பல வடிவங்கள் மற்றும் திட பொருட்களின் சுற்றளவு ஆகியவற்றை கணக்கிட சமன்பாடுகளை உருவாக்கினர். வட்டத்தின் சுற்றளவு, உருளையின் கன அளவு ஆகியவற்றையும் கணக்கிட அவர்கள் அளவை முறைகளைப் பயன்படுத்தினர். அவர்களின் தூரக் கணக்கீட்டு முறை பாபிலோனிய மைல் எனப்படும் தூர அளவை கொண்டிருந்தது. அது தற்காலத்திய 7 மைல்களுக்கு (11 கி.மீ) சமமானதாகும். இதன் அடிப்படையிலேயே அவர்கள் சூரியனுடைய பயண தூரத்தையும் கால அளவையும் கணக்கிட்டனர்.<ref>Eves, Howard [http://books.google.co.uk/books?id=LIsuAAAAIAAJ&dq=Eves+An+introduction+to+the+history+of+mathematics&q=time-mile&pgis=1#search ''An Introduction to the History of Mathematics''] Holt, Rinehart and Winston, 1969 p. 31</ref>
 
=== வானவியல் ===
சுமேரியர்களின் காலம் முதல் கோயில் மத குருமார்கள் கோள்கள் மற்றும் விண்மீன்களின் அமைவிடத்தை பொருத்து அவர்கள் காலத்தைக் கணித்து வந்தனர். இது அசிரியர் காலம் வரை தொடர்ந்தது. இக்காலத்தில் அசிரியர்கள் [[லிம்மு]] (உயர் அரசு அலுவலரின் பதவியின் பெயர்) எனப்படும் அரசு அலுவலர்களின் பெயரில் ஒவ்வொரு வருடத்திற்குமான பட்டியல் தயரித்தனர். அது மேற்கண்ட முறையில் நடப்பு நிகழ்வுகளுடன் கோள்கள் மற்றும் விண்மீன்களின் நிலையுடன் தொடர்புபடுத்தப்பட்டதாகவே இருந்தது. இம்முறை இன்றும் நடைமுறையில் உள்ளது. இது மிகச் சரியான முறையில் மெசொப்பொத்தேமியாவின் காலக்கணக்கீட்டு முறையில் வரலாற்றைத் துல்லியமாகக் கணக்கிட உதவுகிறது.
 
வரிசை 71:
பாபிலோனிய வானியலானது கிரேக்க வானியல்,பாரம்பரிய இந்திய வானியல், சசாந்தியப் பேரரசு, பைசாந்தியப் பேரரசு, சிரியா, இடைக்கால இஸ்லாமிய வானியல், மத்திய ஆசியா மற்றும் மேற்கு ஐரோப்பா ஆகியவற்றின் வானியலுக்கு மிகவும் அடிப்படையாக அமைந்தது.<ref name=dp1998>{{Harvtxt|Pingree|1998}}</ref>
 
=== மருத்துவம் ===
கி.பி. 2 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியிலேயே பழமையான மருத்துவ நூல்கள் பாபிலோனிய பகுதியில் எழுதப்பட்டுள்ளது. மிக விரிவான பாபிலோனிய மருத்துவ நூலானது ''மருத்துவக் கையேடு''என்றறியப்படும், உம்மானு அல்லது தலைமை அறிஞர் என்றழைக்கப்படும் போர்சிப்பாவின் ஈசகில்-கின்-அப்லி என்ற அறிஞரால் பாபிலோனிய அரசரான அதாத்-அப்லா-இத்தினியா என்பரது ஆட்சியில் (கி.மு.1069-1046) எழுதப்பட்டது.<ref>Marten Stol (1993), ''Epilepsy in Babylonia'', p. 55, [[Brill Publishers]], ISBN 90-72371-63-1.</ref>
 
வரிசை 80:
 
 
=== தொழில்நுட்பம் ===
மெசொப்பொத்தேமியர்கள் பல உயர் தொழில்நுட்ப முறைகளைக் கண்டறிந்து பயன்படுத்தியுள்ளனர். உலோக மற்றும் தாமிர வேலைகள்,கண்ணாடி மற்றும் விளக்கு தயாரித்தல், ஜவுளி நெசவு, வெள்ள கட்டுப்பாடு, நீர் சேமிப்பு, மற்றும் பாசனமுறை போன்ற பல தொழில்நுட்பங்களை அறிந்திருந்தனர். இவர்கள் உலகின் முதல் வெண்கல காலகட்ட மக்களுள் ஒருவராக இருந்தனர். அவர்கள் இரும்புடன் [[செம்பு]], வெண்கலம், மற்றும் தங்கத்தையும் பயன்படுத்தினர். நூற்றுக்கணக்கான கிலோ கிராம்கள் கொண்ட மிக விலையுயர்ந்த உலோகங்களால் [[அரண்மனை]]கள் அலங்கரிக்கப்பட்டன. மேலும் அவர்கள் [[இரும்பு]], [[தாமிரம்]] மற்றும் [[வெண்கலம்|வெண்கலத்தைப்]] பயன்படுத்தி வாள்கள்,ஈட்டிகள்,கவசங்கள், ஈட்டிகள், குத்துவாள், தண்டாயுதம் போன்ற ஆயுதங்களையும் செய்தனர்.
சமீபத்திய கருதுகோள்களின் படி கி.மு. 7 ஆம் நூற்றாண்டின் சன்கெரிப் என்ற அசிரிய மன்னன் ஆர்க்கிமிடீசின் தத்துவ முறையில் இயங்கும் அமைப்பைப் பயன்படுத்தி பாபிலோனில் தொங்கும் தோட்டம் மற்ரிம் நினிவே என்ற இடத்திற்கான தண்ணீர் இறைக்கும் அமைப்புகளை ஏற்படுத்தினான் என அறியப்படுகிறது. இக்கிரேக்கக் கண்டுபிடிப்பு பிற்காலத்திய தண்ணீர் இறைக்கும் அமைப்புகளுக்கு முன்மாதிரியாக உதவியது.<ref>Stephanie Dalley and [[John Peter Oleson]] (January 2003). "Sennacherib, Archimedes, and the Water Screw: The Context of Invention in the Ancient World", ''Technology and Culture'' '''44''' (1).</ref> பின்னர் பார்தியன் அல்லது சசானியர்களின் காலங்களில் ''பாக்தாத் மின்கலம்'' எனப்பட்ட உலகின் முதல் மின்கலம் மெசொப்பொத்தேமியாவில் உருவாக்கப்பட்டது.<ref name=BBC>{{Cite news|url=http://news.bbc.co.uk/2/hi/technology/4450052.stm |last=Twist |first=Jo |title=Open media to connect communities |publisher=BBC News |date=20 November 2005 |accessdate=6 August 2007}}</ref>
 
== சமயம் மற்றும் தத்துவங்கள் ==
[[Fileபடிமம்:Lilith Periodo de Isin Larsa y Babilonia.JPG|thumb|right|260px| கி.மு 1800 ஐச் சேர்ந்த முதல் பாபிலோனிய வம்சத்தின் நள்ளிரவு தேவதைச் சிலை.]]
மெசொப்பொத்தேமியா சமயமே முதலில் பதியப்பட வேண்டியதாகும். மெசொப்பொத்தேமியர்கள் உலகம் தட்டையானது. அது மிகப்பெரிய வெளியில் சூழப்பட்டுள்ளது. அதற்குமேல் சொர்க்கம் உள்ளது என நம்பினர். அதே போன்று நீரானது மேலே,கீழே மற்றும் பக்கங்களில் என எல்லா இடத்திலும் இருப்பதாகவும் நம்பினர். பிரபஞ்சமானது கடலிலிருந்து பிறந்தாக நம்பினர். அவர்கள் மதத்தையும் பின்பற்றினார்கள். மெசொப்பொத்தேமியாவெங்கும் பிராந்திய வேறுபாடுகள் இருப்பினும் மதம் சார்ந்த நம்பிக்கைகள் பொதுவாக ஒன்றாகவே இருந்தன.
 
வரிசை 91:
பாபிலோனியர்களின் காரண காரிய மற்றும் பகுத்தறிவானது உற்று நோக்கிய அனுபவ அறிவுக்கு அப்பாற்பட்டு இருந்தது.<ref>Giorgio Buccellati (1981), "Wisdom and Not: The Case of Mesopotamia", ''Journal of the American Oriental Society'' '''101''' (1), p. 35-47.</ref>
 
== பண்பாடு ==
[[Fileபடிமம்:Mesopotamia male worshiper 2750-2600 B.C.jpg|270px|thumb|right|நீண்ட கண்களுடன் கூடிய சுமேரிய பூசாரி அல்லது வழிபாட்டாளர். கி.மு. 2750-2600]]
 
=== விழாக்கள் ===
பண்டைய மெசொப்பொத்தேமியர்கள் ஒவ்வொரு மாதமும் விழாக்களைக் கொண்டாடினர். சடங்குகள் மற்றும் விழாக்களின் நோக்கமானது ஆறு முக்கிய காரணிகள் மூலம் தீர்மானிக்கப்பட்டது.
 
வரிசை 104:
# குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வுகள்( இராணுவ வெற்றி, புதிய நிர்மானங்கள், கோவில் விடுமுறைகள் முதலியன)
 
=== இசை ===
சுமேரியர்களின் இசைப்பாடல்கள் கடவுள் வழிபாட்டிற்காக இயற்றப்பட்டவை. இவற்றுள் பல சில முக்கியமான வரலாற்று நிகழ்வுகளை விள்க்குவதாக அமைந்துள்ளன. மன்னர்களுக்காக எழுதப்பட்டனவாயினும் சாதாரன மக்களின் வீடுகளிலும் சந்தை முதலான மக்கள் கூடுமிடங்களிலும் இவை பாடப்பட்டும் அதற்கேற்ப நடனமாடியும் களிக்கப்பட்டன. இவை எழுதப்படாமல் வழிவழியாக பாடப்பட்டு வாய்ப்பாட்டின் மூலமாக அடுத்த சந்ததியினருக்குக் கற்பிக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளாக வரலாற்று நிகழ்வுகள் இவ்வாறே ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்பபட்டன.
 
தெற்கு மெசொப்பொத்தேமியாவில் கிடைத்துள்ள உருக் காலத்திய சுமார் 5000 ஆண்டுகள் பழமையான ஒரு படத்தில் மெசொப்பொத்தேமியர்கள் பயன்படுத்திய ஔத் என்ற கம்பி இசைக்கருவி காணப்படுகிறது. இது உருளை வடிவிலான ஒரு இசைக்கருவியாகும். இப்படம் டாக்டர் டொமினிக் கொலோன் என்பவரிடமிருந்து பெறப்பெற்று பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஒரு பெண் ஓடத்தில் வலது கையால் இவ்விசைக்கருவியை வாசிப்பது போன்று இடம்பெற்றுள்ளது. மெசப்பத்தோமிய வரலாற்றில் இவ்விசைக்கருவி நூற்றுக்கும் மேற்பட்ட முறை குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டைய எகிப்தில் 18 ஆம் நூற்றாண்டில் நீண்ட கழுத்து, குறுகிய கழுத்துப்பகுதி கொண்ட இதன் வகைகள் குறிப்பிடப்படுகின்றன. ஔத் இசைக்கருவி ஐரோப்பியர்கள் வீணை (lute)இசைக்கருவிக்கு முன்னோடியாகும். ஔத் என்ற சொல் அரபு மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். ஔத் மரத்திலிருந்து இக்கருவி செய்யப்பட்டதால் இவ்விசைக் கருவியும் அப்பெயர் பெற்றது.
 
=== விளையாட்டு ===
 
[[வேட்டையாடுதல்]] அசிரிய மன்னர்களிடம் மிகவும் புகழ்பெற்றிருந்தது. [[குத்துச் சண்டை]], [[மல்யுத்தம்]] ஆகிய கலைகளும் குதிரைகளுக்கு மாற்றாக மனிதனின் தோள்களில் அமர்ந்து விளையாடும் போலோ விளையாட்டு போன்ற ஒன்றும் விளையாடப்பட்டது.<ref>{{Citation|author=Karen Rhea Nemet-Nejat|title=Daily Life in Ancient Mesopotamia|year=1998}}</ref> தற்போதைய கால் பந்தாட்டம் போன்று மரத்தால் செய்யப்பட்ட பந்தினைக் கொண்டு விளையாடினர். இதற்கு 'மஜோர்' என்பது பெயர். மேலும் தற்போது பரவலாக அறியப்படும் செனென்ட், போக்கேமேன் ஆகிய விளையாட்டுகளைப் போன்று தலைநகரமான ஊர் என்ற இடத்தில் குழு விளையாட்டுகள் விளையாடப்பட்டன.
 
=== வாழ்க்கை ===
[[Fileபடிமம்:Babylonian marriage market.jpg|thumb|''பாபிலோனியர்களின் திருமணச் சந்தை'' எட்வின் லாங் என்ற ஓவியரால் வரியப்பட்ட 19 ஆம் நூற்றாண்டு கால ஓவியம்.]]
மெசொப்பொத்தேமியாவில் உருக்ககினா, லிபித் இஸ்தார், ஹமுராபி ஆகிய சட்ட விதிகள் வெற்றிகரமாகக் கடைப்பிடிக்கப்பட்டன. இதன் வரலாற்றை நோக்கும்போது ஆண்கள் பெண்களைவிட சக்தி வாய்ந்தவர்களாகக் கருதப்பட்டு பெண்வழிச் சமூகம் ஆணாதிக்க சமூகமாக மாறியதை அறியலாம். உதராணமாக பண்டைய சுமேரிய காலத்தில் ' என்' அல்லது தலைமைப் பூசாரியாக பெண்கடவுளுக்கு ஆணும் ஆண் கடவுளுக்கு பெண்ணும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
தார்க்கிட் ஜாக்கோப்சென் மற்றும் பலரின் கூற்றுப்படி பண்டைய மெசொபொத்தேமிய சமூகம் 'பெரியோர்களின் சபை' என்ற ஒன்றினால் ஆளப்பட்டு வந்துள்ளது. இச்சபையில் ஆண், பெண் இருபாலரும் சமமாக இருந்தனர். காலப்போக்கில் பெண்களின் நிலை தாழ்ந்து ஆண்கள் உயர் மதிப்பு பெற்றனர். அரசர்கள், உயர்பதவியில் இருப்போர்களான குருமார்கள், மருத்துவர்கள், கோயில் நிருவாகிகள், ஆகியோரின் பிள்ளைகள் கல்வி பயின்றனர். பெரும்பாலான ஆண்பிள்ளைகள் தங்களுடை தந்தையின் வணிகத்தை தானும் செய்ய வேண்டி வெளியிடங்களுக்குச் சென்று வணிகப்பயிற்சி பெற்றனர்.<ref>{{Citation|author=Rivkah Harris|title=Gender and Aging in Mesopotamia|year=2000}}</ref> பெண்கள் வீட்டு வேலைகள், சமையல் மற்றும் இளைய குழந்தைகளைப் பராமரிக்க வீட்டிலேயே இருந்தனர். சில குழந்தைகள் தானியங்களை உடைக்கவும் பறவைகளின் இறகினைப் பிரித்து சுத்தம் செய்யவும் உதவ வேண்டியிருந்தது. இக்காலகட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக இச்சமூகத்தில் பெண்கள் உரிமை பெற்றவர்களாக இருந்தனர். பெண்களுக்கு சொத்துரிமையும் தகுந்த காரணங்களுக்காக விவாகரத்து செய்யும் உரிமையும் இருந்தது.
 
=== இறப்பு ===
மெசொப்பொத்தேமியாவின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட புதைகுழிகள் அகழ்வாய்வில் கண்டறியப்பட்டது. இதன் மூலம் மெசொப்பொத்தேமியர்களின் அடக்கம் செய்யும் முறை பற்றி பல்வேறு விவரங்கள் கிடைக்கப்பெற்றன. ஊர் என்ற நகரத்தில் பெரும்பாலான மக்கள் தங்களின் வீடுகளுக்கடியிலேயே சில உடைமைகளுடன் புதைக்கப்பட்டனர். ஒரு சில உடல்கள் பாய்களும் கம்பளங்களும் சுற்றபப்ட்ட நிலையில் இருந்தன. நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் பெரிய ஜாடிகளில் வைக்கப்பட்டு குடும்ப தேவாலாயங்களில் வைக்கப்பட்டனர். மற்றவர்கள் நகரின் பொதுவான இடுகாட்டில் புதைக்கப்பட்டனர். 17 கல்லறைகள் மிகவும் விலையுயர்ந்த பொருட்களுடன் காணப்படுகின்றன எனவே இவை அரச கல்லறைகளாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பல்வேறு காலகட்டாங்களில் பஹ்ரைனின் அடக்க முறையானது சுமேரியர்களுடைய அடக்க முறையைப் போலவே இருப்பது அறியப்பட்டுள்ளது.<ref>Bibby, Geoffrey and Phillips, Carl (1996), "Looking for Dilmun" (Interlink Pub Group)</ref>
 
== பொருளாதாரமும் வேளாண்மையும் ==
[[Fileபடிமம்:Metal production in Ancient Middle East.svg|thumb|பண்டைய மேற்கு ஆசியாவின் கனிம வளத்தைக் குறிக்கும் படம். முறையே ஆர்சனிக்-பழுப்பு, தாமிரம்-சிவப்பு, டின்- சாம்பல் நிறம், இரும்பு -செம்பழுப்பு, தங்கம்-மஞ்சள், வெள்ளி-வெண்மை, ஈயம்- கருப்பு ஆகிய நிறங்களில் காட்டப்பட்டுள்ளன.]]
 
கி.மு.5000 இலிருந்தே பாசன முறை விவசாயமானது சக்ரோசு மலை அடிவரத்திலிருந்து சமரா மற்றும் ஹாஜி முகம்மது கலாச்சாரம் வரை பரவியிருந்தது.<ref name="Cengage Learning, 1 Jan 2010 ">{{cite book | url =http://books.google.co.uk/books?id=jvsVSqhw-FAC&pg=PA29&dq=mesopotamian+agriculture&hl=en&sa=X&ei=NeDFT-3PDcPW8gPMg_iRBg&redir_esc=y#v=onepage&q=mesopotamian%20agriculture&f=false|title= The Earth and Its Peoples: A Global History |author=Richard Bulliet, Pamela Kyle Crossley, Daniel Headrick, Steven Hirsch, Lyman Johnson, David Northup|publisher=Cengage Learning, 1 Jan 2010 | accessdate =2012-05-30}}</ref>
வரிசை 128:
சுமேரியக் கோவில்கள் ஒரு வங்கிகள் போலச் செயல்பட்டன. மேலும் உலகின் முதல் பெருந்தொழில் கடனுதவி வங்கிகளாகவும் அவை வளர்ச்சியடைந்தன. ஆனால் பாபிலோனியர்கள் பண்டைய வங்கிமுறை வனிக வங்கிகளாகும். இது நவீன கெயின்சினுக்கு பிந்தைய பொருளாதாரத்துடன் சில வழிகளில் ஒப்பிடக்கூடியதாக இருந்தது.<ref name=Sheila>Sheila C. Dow (2005), "Axioms and Babylonian thought: a reply", ''Journal of Post Keynesian Economics'' '''27''' (3), p. 385-391.</ref> பழங்காலத்தில் 'ஊர்' நகரில் மூன்றில் ஒரு பங்கு நிலங்கள் கோவிலின் உடைமைகளாக இருந்தன. ஆனால் காலப்போக்கில் அரசர்கள் மற்றும் தனியார்கள் இந்நிலங்களை வைத்திருந்தனர்.
 
'இன்சி' என்ற சொல் அலுவல் முறையில் கோவிலின் விவசாய வேலைகளை கவனித்து வருபவரைக் குறிக்கும். 'வில்லீன்கள்' எனப்படுவோர் விவசாயத்துடன் தொடர்புடைய பணியாளகளாவர். குறிப்பாக அரண்மனை அல்லது கோவில் நிலங்களில் வேலை செய்வோர் இவ்வாறு அழைக்கப்பட்டனர்.<ref name=" H. W. F. Saggs">{{cite book | url =http://books.google.co.uk/books?id=BPdLxEyHci0C&pg=PA58&lpg=PA58&dq=agricultural+practice+in+Babylonia&source=bl&ots=sTSSaHbcs5&sig=t6CxtOHRU2qHWgyaVma06YoN46o&hl=en&sa=X&ei=oCnFT_TxEImA8wPFgcnnCg&sqi=2&ved=0CHkQ6AEwCA#v=onepage&q=agricultural%20practice%20in%20Babylonia&f=false|author=H. W. F. Saggs - Professor Emeritus of Semitic Languages at University College, Cardiff| title = Babylonians | publisher = University of California Press, 1 Jun 2000| accessdate =29 May 2012 }} ISBN 05202022280-520-20222-8</ref>
தெற்கு மெசொப்பொத்தேமியாவின் புவியியல் அமைப்பு விவசாயத்திற்கு மிகவும் ஏற்றதாக அமைந்ததாகும். நீர்ப்பாசன மற்றும் நிறந்த வடிகால் அமைப்பு காரணமாக செழிப்பான விவசாயம் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. மெசபடோமிய நாகரிகத்தில் இதனால ஒரு சிறந்த பரிணாம வளர்ச்சி ஏற்பட்டது.
 
வரிசை 145:
தன் மக்களைப் பாதுகாப்பதால் அவ்வாறு அழைக்கப்பட்டார்.
 
=== அதிகாரம் ===
அசிரியா பேரரசாக வளர்ச்சியுற்ற போது, மாகாணங்கள் என்ற இரண்டு பகுதிகளாகப் பிரிந்தது.அவை ஒவ்வொன்றும் அதன் முக்கிய நகரத்தின் பெயரால் அழைக்கப்பட்டன. நினெவே, சமாரியா, டமாஸ்கஸ், அர்பத் ஆகியன அவற்றில் சிலவாகும். ஒவ்வொரு நகரமும் அதற்கென தனிப்பட்ட ஆளுநரால் நிருவாகிக்கப்பட்டது. இவர்கள் மக்கள் செலுத்த வேண்டிய வரிகளை கண்காணித்தனர். இவ்வாளுநர்கள் போர்க்காலங்களின் படைவீரகளை வைத்திருக்கவும் கோவில் கட்டுமானத்திற்கான பணியாட்களை வழங்கும் அதிகாரமும் பெற்றிருந்தனர்.
இவர்கள் அரசின் சட்டங்களை அமலாக்கும் பொறுப்பில் இருந்தனர். எனவே மிகப்பெரிய கட்டுக்கோப்புடன் வைத்திருக்க எளிதானதாக இருந்தது. பாபிலோனியா சுமேரியர்களின் மிகவும் அமைதியான, இறையாண்மை மிக்க நகரமாகும். இது ஆட்சியாளர் ஹமுராபியின் ஆட்சி காலத்தில் மிகப்பெரிய குறிப்பிடத்தக்க வளர்ச்சியினை அடைந்தது. இவர் சடடத்தை உருவாக்கியவராக அறியப்படுகிறார். விரைவில் பாபிலோன் மெசொப்பொத்தேமியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாக ஆனது. பின்னாளில் இது கடவுளர்களின் நுழைவாயில் என அழைக்கப்பட்டது. மேலும் இது வரலாற்றில் ஒரு சிறந்த கற்றல் மையமாகவும் விளங்கியது.
 
=== போர்கள் ===
[[Fileபடிமம்:Stele of Vultures detail 01.jpg|thumb|right|270px|alt3=See caption|போருக்குச் செல்லும் வீரர்கள்- வல்லூறு சாசனம். கி.மு. 2600-2350]]
[[Fileபடிமம்:Raminathicket2.jpg|thumb|right|250px|புதரின் பின் ஆடு. ஊர் பகுதியில் அரச இடுகாட்டில் கிடைத்த இரண்டு சிலைகளில் ஒன்று. கி.மு. 2600-2400]]
 
உருக் கால கட்டம் முசிவுக்கு வந்த நிலையில் உபைதிய நகரங்கள் பல தனிமைப்படுத்தப்பட்டு பெருஞ்சுவர்களால் பிரிக்கப்பட்ட பல நகரங்கள் உருவாயின. இது அங்கு நிலவைய வகுப்புவாத கலவரத்தின் எழுச்சி நிலையைக் காட்டுகிறது. பண்டைய அரசரான லுகல்பந்தா என்பவர் நகரைச் சுற்றிலும் வெண்மையான சுற்றுச் சுவரை அமைத்தார். நகரங்கள் வளர்ச்சியுற்ற போது, அவைகள் ஒன்றன் மேலொன்று ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. குறிப்பக தாழ்நிலங்கள் மற்றும் கால்வாய்களுக்காக அவைகள் ஒன்றுக்கொண்டு முரன்பட்டுக்கொண்டிருந்தன. இச்சண்டைகள் சுமேரியப் பலகைச் சாசனத்தில் கி.மு 3200 இலேயே பதியப்பட்டுள்ளது. பின்னர் இது போன்ற பதிவுகள் பொதுவாக கி.மு 2500 களில் நடைமுறையில் இருந்தது.
வரிசை 162:
இது ஒருபடி முன்னேறி போர் என்ற ஒன்று மெசப்பொத்தேமிய அரசியலமைப்பில் இன்றியமையாததாக இணைக்கப்பட்டது. அதே நேரத்தில் இவைகளில் ஈடுபடாமல் நடுநிலை வகித்த நகரங்கள் இரு போட்டி நகரங்களுக்கிடையே மத்தியஸ்தம் செய்து ஒற்றுமை ஏற்பட உதவியாக இருந்தன.<ref name="Robert Dalling 2004"/> பேரரசுகள் உருக்கொண்டு வலிமை பெற்றபோது அவைகள் பிற நாடுகளுடன் சண்டையிடச் சென்றன. சான்றாக அரசர் சார்கோன் சுமேரின் அனைத்து நகரங்களையும், மாரியின் சில நகரங்களையும் வெற்றி கொண்டு வட சிரியாவையும் வென்றார். பல அசிரிய, பாபிலோனிய அரண்மனைகளின் சுவர்கள் இம்மன்னர்களின் வெற்றியையும் எதிரி மன்னர்கள் தப்பிச்சென்று ஒளிந்து கொண்டதனையும் சித்தரிக்கும் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டன.
 
=== சட்டம் ===
மெசொப்பொத்தேமியா நகரஙகளில் தான் முதன்முதலில் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அரசர்களின் அரச ஆணைகளும் அரசரின் முடிவுகளும் சட்டங்களாக உருவாயின. உருக்ககினியா, லிபிட் இஷ்தார் ஆகிய இடங்களில் இவ்வகைச் சட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கி.மு 1780 களில் உருவாக்கப்பட்ட சாசனமான ஹமுராபியின் சட்டங்கள் இவ்வகையில் மிகவும்புகழ் பெற்றவையாகும். இதுவே உலகின் மிகப் பழைமையான சட்டத் தொகுப்பாகவும் மெசொப்பொத்தேமியாவின் பதியப்பட்ட சாசனத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. இதில் இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட சட்டங்களை விதித்துள்ளார்.
 
வரிசை 175:
அசிரியர்கள் மெசொப்பொத்தேமியாவைக் கைப்பற்றிய பின்பு முன்பிருந்ததை விட அதனை மிகப்பெரிய செல்வவளம் மற்றும்ம் கலைவளம் கொழிக்கும் நாடாக மாற்றினார்கள். மிகப்பெரிய தூண்களுடன் கூடிய பெரிய அரண்மனைகளை உருவாக்கி சிற்பங்கள் ஆகியவற்றால் எகிப்துக்கு நிகரான வளமிக்கதாக மாற்றினார்கள். இவர்கள் காலத்திய போர் வேட்டைச் சிற்பம் இவர்களது மிகச் சிறந்த கலைப்படைப்பாகும். இது தற்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் குறைந்த அளவிலான வட்ட வடிவச் சிற்பங்களையே செய்தனர். பாதுகாவலர் சிலைகள், முக்கோண வடிவில், ஐந்து கால்களும், அனைத்து திசைகளையும் பார்க்கக் கூடிய வகையில் தலைகளும் கொண்ட தேவதைச் சிலையும் இவர்கள் காலத்திய படைப்பகும். அடுத்த நாகரிக மாற்றம் ஏற்படும் வரை இப்பாரம்பரியமே தொடர்ந்தது. இவர்களும் உருளை வடிவ முத்திரையினையே பயன்படுத்தினார்கள்.<ref>Frankfort, 141–193</ref>
 
== கட்டடக் கலை ==
மெசொப்பொத்தேமியாவின் கட்டடக் கலை பற்றி அறிய தொல்பொருள் ஆய்வுகளே சான்றாக உள்ளன. கட்டடங்களின் மாதிரிகளை விளக்கும் படங்கள், கட்டடக் கலை பற்றிய குறிப்புகள், கோவில்களைப் பற்ரிய இலக்கியச் சான்றுகள், இடங்கள், நகரச் சுற்றுச் சுவர்கள் மற்றும் வாயில்கள், மேலும் நினைவுச் சின்னங்களாக நிற்கும் கட்டடங்கள் ஆகியவை மெசொப்பொத்தேமியாவின் கட்டடக் கலையை பறைசாற்றும் சான்றுகளாகும்.<ref>{{Citation|first=Sally|last=Dunham|chapter=Ancient Near Eastern architecture|title=A Companion to the Ancient Near East|editor=Daniel Snell|location=Oxford|publisher=Blackwell|year=2005|pages=266–280|isbn=0-631-23293-1}}</ref>
 
வரிசை 184:
வீடுகளின் கட்டமைப்புகளை நிப்பூர் மற்றும் ஊர் ஆகிய பகுதிகளில் காணலாம். கட்டடக் கட்டுமானம் குறித்த குறிப்புகளும், குடியாக்களின் உருளைகளும், 3000 ஆண்டுகால பழமையும், இருப்புக் காலத்தைச் சேர்ந்த அசிரிய மற்றும் பாபிலோனிய கல்வெட்டுகளும் இவர்களின் கட்டடக் கலைச் சான்றுகளாக இன்றும் நிற்பவையாகும்.
 
== களிமண் உருண்டைகள் ==
மெசொப்பொத்தேமியாவில் கண்டெடுக்கப்பட்ட களிமண் உருண்டைகளில் மிகவும் பழமையான தரவுகள் உள்ளதாக அண்மையில் ஆய்வாளர்கள் தங்களது ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர். இதுவே மனிதர்களின் முதல் தரவு சேமிப்பகமாக இருக்கலாம் என கூறியுள்ளனர். <ref>[http://www.aninews.in/newsdetail11/story135668/prehistoric-code-found-in-clay-balls-could-be-1st-data-storage-system.html Prehistoric code found in clay balls could be 1st data storage system]</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|2}}
 
* [[Henri Frankfort|Frankfort, Henri]], ''The Art and Architecture of the Ancient Orient'', Pelican History of Art, 4th ed 1970, Penguin (now Yale History of Art), ISBN 01405610720-14-056107-2
 
== உசாத்துணைகள் ==
வரிசை 212:
* Van de Mieroop, Marc; 2004. ''A history of the ancient Near East. ca 3000-323 BC''. Oxford: Blackwell Publishing.
 
== வெளியிணைப்புகள் ==
{{Commons category|Mesopotamia}}
* [http://www.ancientopedia.com/Mesopotamia/ Ancient Mesopotamia]&nbsp;— timeline, definition, and articles at Ancient History Encyclopedia
வரிசை 221:
* [http://rebirthofreason.com/Articles/Zantonavitch/Sumerian_Philosophy.shtml] Sumerian Philosophy
* [http://www.wdl.org/en/item/11773/ Mesopotamia], 1920
 
 
[[பகுப்பு:மெசொப்பொத்தேமிய நாகரிகங்கள்]]
 
{{Link FA|ceb}}
"https://ta.wikipedia.org/wiki/மெசொப்பொத்தேமியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது