ஈயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: de:Blei is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 6:
== குறிப்பிடத்தக்க இயல்புகள் ==
 
[[Fileபடிமம்:Lead-2.jpg|thumb|left|175px|திரவ நிலையிலிருந்து திண்மமாகிய தூய ஈயம்]]
 
ஈயமானது நீலநிறங்கலந்த வெள்ளி போன்ற பளபளப்புடைய உலோகமாகும். வளியுடன் இது தொடுகையடைந்தால் சிறிது நேரத்துக்குள் தன் பளபளப்பை இழக்கின்றது. பல்வேறு சேர்வைகளின் கலவையாக ஒரு சாம்பல் நிறப்படை உலோகம் மேல் தோன்றுகின்றது. இப்படையில் காபனேற்றும், ஐதரசன் காபனேற்றும் பெரும் பங்கை உருவாக்குகின்றன.
ஈயம் மென்மையான, அதிக அடர்த்தியுடைய, நீட்டற்பண்பும், தட்டற்பண்பும் உள்ள உலோகமாகும். எனினும் ஈயத்தின் மின்கடத்துதிறன் குறைவாக இருக்கின்றது. ஈயம் இலகுவில் அரிப்படையாது. சேதன மூலக்கூறுகளுடன் தாக்கமடையக்கூடியது (இதன் விஷத்தன்மைக்குக் காரணம்). 327.5 &nbsp;°C வெப்பநிலையில் ஈயம் உருகுகின்றது. ஈயம் 1749 &nbsp;°C வெப்பநிலையில் கொதிக்கும். ஈயம் அயனாக்கம் அடையும் போது Pb<sup>2+</sup> கற்றயனை உருவாக்கும்.
 
=== சமதானிகள் ===
 
இயற்கையில் ஈயத்தின் நான்கு நிலையான சமதானிகள் உள்ளன. ஈயம்-204, ஈயம்-206, ஈயம்-207, ஈயம்-208 என்பனவே அவையாகும். இவற்றில் ஈயம்-204 சொற்பளவு கதிரியக்கம் (அரை வாழ்வுக்காலம்:1.4×10<sup>17</sup> வருடங்களுக்கு மேல்) கொண்டதாகக் கருதப்பட்டாலும், பொதுவாக ஈயம் கதிரியக்க அபாயமற்ற தனிமமாகும். செயற்கையாக ஈயத்தின் 34 சமதானிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றின் திணிவெண் 178 தொடக்கம் 215 வரை வியாபித்துள்ளது. இயற்கையான நான்கைத் தவிர மற்றைய அனைத்துச் சமதானிகளும் கதிரியக்கம் உடையனவாகும். கதிரியக்கச் சமதானிகளில் ஈயம்-205 ஓரளவு நிலைத்திருக்கக்கூடியது (அரை வாழ்வுக்காலம் 10<sup>7</sup> மடங்கில்).
 
=== இரசாயன தாக்குதிறன் ===
 
ஈயம் கார்பன் குழுவைச் சேர்ந்த ஒரு [[குறை மாழை]]யாகும். எனவே இது ஏனைய உலோகங்களை விட தாக்குதிறன் குறைவானதாகும். ஈயம் காற்றில் தன்னிச்சையாக எரியாது. காற்றில் பாதுகாப்பான ஒரு ஒக்சைட்டு-காபனேற்றுப் படையையே உருவாக்கும். ஈயத்தைத் துகள்களாக்கி, சக்தியை வழங்கினாலேயே இது எரியும். புளோரின் மற்றும் குளோரின் போன்ற ஹலோஜன்களால் உயர் வெப்பநிலையில் மாத்திரமே ஈயத்தை ஒக்சியேற்ற இயலும். நீரும் வளியும் இணைந்து ஈயத்தை வேகமாக அரிப்படையச் செய்யும் இயல்புடையனவாகும். எனினும் நீரில் கரைந்துள்ள சல்பேற்றுக்கள் மற்றும் காபனேற்றுக்கள் கரையாத உப்புக்களைத் தோற்றுவித்து ஓரளவுக்குப் பாதுகாப்பை வழங்குகின்றன. குறைந்த செறிவுள்ள நீரில் கரைந்துள்ள காபனீரொக்சைட்டு கரையாத காபனேற்றுப் படையை உருவாக்கி அரிப்படைதலிலிருந்து பாதுகாப்பை வழங்கினாலும், அதிக செறிவான CO<sub>2</sub> கரையக்கூடிய ஈயஇருகாபனேற்றை உருவாக்கி ஈயத்தை அரிப்படையச்செய்ய வழிவகுக்கின்றது. ஈயம் சேதன அமிலங்களாலும், செறிந்த சல்பூரிக் அமிலத்தாலும், வன்காரங்களாலும் தாக்கப்பட்டு அரிப்படையக்கூடியது.
 
== ஈயத்தின் சேர்மங்கள் ==
சேர்வைகளில் ஈயம் பொதுவாக +2 மற்றும் +4 எனும் இரண்டு ஒக்சியேற்றும் நிலைகள் உள்ளன. இவற்றில் +2 நிலையே அதிகமான சேர்மங்களில் உள்ளது. +4 நிலையிலுள்ள சேர்மங்கள் ஒக்சியேற்றும் தன்மை அதிகமானவையாகும்.
 
=== ஒக்சைட்டுகளும் சல்பைடுக்களும் ===
 
மூன்று வகையான ஈய ஒக்சைட்டுகள் உள்ளன. அவை ஈயம்(II)ஒக்சைட்டு/ ஈயவோரொக்சைட்டு (PbO), ஈய நாலொக்சைட்டு (Pb<sub>3</sub>O<sub>4</sub>), ஈயவீரொக்சைட்டு (PbO<sub>2</sub>) என்பனவாகும். ஈயவோரொக்சைட்டில் α-PbO மற்றும் β-PbO ஆகிய இரண்டு [[பிறதிருப்பங்கள்]] உள்ளன. α-PbO சிவப்பு நிறச் சேர்மமாகும்; இதன் அணுக்களிடையே 230 pm இடைவெளி காணப்படும். β-PbO மஞ்சள் நிற சேர்மமாகும்.
வரிசை 31:
:2 PbO + PbS → 3 Pb + SO<sub>2</sub>
 
=== ஹேலைட்டுகளும், ஈய உப்புக்களும் ===
 
ஈய காபனேற்றை [[ஐதரசன் புளோரைடு]]டன் சூடாக்கினால் ஈய ஐதரோபுளோரைடை உருவாக்க முடியும். இது உருகும் போது ஈய இருபுளோரைடு உருவாகும். இது வெள்ளை நிறப்பளிங்குகளாலான சேர்மமாகும். ஈய நால்புளோரைடு எனப்படும் உறுதியற்ற புளோரைடு சேர்மம் மஞ்சள் நிறமானதாகும். ஈயம் ஐதரோகுளோரிக் அமிலத்துடனோ, சல்பூரிக் அமிலத்துடனோ தாக்கமடையாது. எனவே ஈய சல்பேட்டையோ, ஈய இருகுளோரைட்டையோ அமிலங்களுடன் தாக்கமடையச் செய்வதன் மூலம் உருவாக்க இயலாது. எனினும் ஈயம் நைத்திரிக் அமிலத்துடன் தாக்கமடைந்து Pb(NO<sub>3</sub>)<sub>2</sub> மற்றும் நைத்திரிக் ஒக்சைட்டையும் உருவாக்குகின்றது.
 
== ஈயம் பிரித்தெடுத்தல் ==
[[Fileபடிமம்:Calcite-Galena-elm56c.jpg|thumb|left|upright|ஈயத்தாது-கலீனா]]
 
ஈயம் காணப்படும் பிரதான தாதுப் பொருள் கலீனா ஆகும். இதில் பிரதானமான கூறாக PbS உள்ளது. கெருசைட்டு (PbCO<sub>3</sub>), அங்கிலசைட்டு (PbSO<sub>4</sub>) போன்ற தாதுப்பொருட்களிலும் ஈயம் உள்ளது. கலீனா முதலில் வளியில் வாட்டப்படும். இதன் போது ஈய சல்பைட்டு உருவாகும். உருவாகும் ஈய சல்பைட்டு பின்னர் ஈய ஒக்சைட்டாகப் பிரிகையடையும்.
வரிசை 48:
 
== பயன்பாடுகள் ==
[[Fileபடிமம்:Lead shielding.jpg|thumb|ஆபத்தான கதிரியக்கங்களிலிருந்து பாதுகாக்க ஈயத்துண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.]]
* ஈயத்தின் பிரதான பயன்பாடு [[ஈய-அமில மின்கலம்]] ஆகும். இது மீண்டும் மின்னேற்றி மீள் பாவனைக்குட்படுத்தக்கூடியதாக இருத்தல் இதன் மேலதிக நன்மையாகும். இம்மின்கலத்தில் ஈயத்தாலான மின்வாய்களும் சல்பூரிக் அமிலத்தாலான மின்பகுபொருளும் உள்ளன. இது கார்களில் பிரதான மின்கலமாகப் பயன்படுத்தப்படுகின்றது.
கத்தோட்டுத் தாக்கம் (தாழ்த்தல் தாக்கம்)
:PbO<sub>2</sub> + 4 H<sup>+</sup> + {{chem|SO|4|2-}} + 2e<sup>–</sup> → PbSO<sub>4</sub> + 2 H<sub>2</sub>O
வரிசை 55:
:Pb + {{chem|SO|4|2-}} → PbSO<sub>4</sub> + 2e<sup>–</sup>
 
* சிறிய துப்பாக்கிகளில் தோட்டாக்களை ஆக்க ஈயம் பயன்படுத்தப்படுகின்றது.
 
* ஆபத்தான கதிரியக்கங்களைத் தடுக்க ஈயம் பயன்படுத்தப்படுகின்றது.
வரிசை 68:
[[பகுப்பு:மூலப்பொருள்கள்]]
[[பகுப்பு:உலோகங்கள்]]
 
{{Link FA|de}}
"https://ta.wikipedia.org/wiki/ஈயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது