ஆர்மீனிய இனப்படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி Robot: eo:Armena genocido is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[படிமம்:Marcharmenians.jpg|thumb|260px|ஏப்ரல் 1915 இல் ஆர்மீனிய மக்கள் துருக்கிய இராணுவத்தினரால் மெசிரே சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர்.]]
'''ஆர்மீனிய இனப்படுகொலை''' (''Armenian Genocide'') அல்லது '''ஆர்மேனிய பெரும் இனவழிப்பு''' என்பது [[ஒட்டோமான்]] பேரரசுக் காலத்தில் [[ஆர்மீனியா|ஆர்மீனியர்ஆர்மீனியர்கள்]]கள் வலிந்து திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆகும். இது [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போருக்குப்]] பின்னர் நிகழ்ந்தது<ref>[http://www.armenian-genocide.org/Affirmation.169/current_category.6/affirmation_detail.html United Nations Sub-Commission on Prevention of Discrimination and Protection of Minorities, July 2, 1985].</ref>. பெரும் படுகொலைகளாகவும், சாவுக்கு இட்டுச்சென்ற வெளியேற்றங்களாகவும் இது நிகழ்ந்தது. இதில் ஒன்றில் இருந்து ஒன்று அரை மில்லியன் ஆர்மேனியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இக்காலப்பகுதியில் ஆர்மீனியர்களைத் தவிர அசிரியர்கள், மற்றும் கிரேக்கர்களும் ஒட்டோமான் பேரரசினால் படுகொலை செய்யப்பட்டனர்<ref>[http://www.genocidescholars.org/images/Resolution_on_genocides_committed_by_the_Ottoman_Empire.pdf Resolution by the International Association of Genocide Scholars]</ref>.
 
இவ்வினப்படுகொலை [[1915]] ஆம் ஆண்டு [[ஏப்ரல் 24]] ஆம் நாள் ஆரம்பமாகியது. இந்நாளில் ஆர்மீனியக் கல்விமான்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் 250 பேரை ஒட்டோமான் இராணுவத்தினர் [[இஸ்தான்புல்|கொன்ஸ்டண்டீனப்போல்]] நகரில் கைது செய்தனர்<ref>[http://concise.britannica.com/ebc/article-9368294/Istanbul Britannica, Istanbul]:''When the Republic of Turkey was founded in 1923, the capital was moved to Ankara, and Constantinople was officially renamed Istanbul in 1930.''</ref>. அதன் பின்னர் இராணுவத்தினர் ஆர்மீனியப் பொதுமக்களை அவர்களின் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றி பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள பாலைநிலத்துக்கு (தற்போதைய [[சிரியா]]) நடைப்பயணமாக அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு உணவோ நீரோ வழங்கப்படவில்லை. வயது, மற்றும் பால் வேறுபாடின்றிப் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பெரும்பான்மையான ஆர்மீனியர்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளில் வசிப்பது இப்படுகொலைகளில் இருந்து தப்பியவர்களே.
வரிசை 13:
[[பகுப்பு:துருக்கி]]
[[பகுப்பு:1915 நிகழ்வுகள்]]
 
{{Link FA|eo}}
{{Link FA|ru}}
"https://ta.wikipedia.org/wiki/ஆர்மீனிய_இனப்படுகொலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது