"வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
சி
வேளூர்வாயில் என்பது புள்ளிருக்கு வேளூரின் சங்ககாலப் பெயர். 'வேள்' என்னும் சொல் முருகப்பெருமானைக் குறிக்கும். 'புள்' என்னும் சொல் கருடனையும், 'இருக்கு' என்னும் சொல் இருக்கு வேதத்தையும் குறிக்கும் என்று [[மு. அருணாசலம்]] விளக்கம் தருகிறார். [[இடையன் நெடுங்கீரனார்]] என்னும் சங்ககாலப் புலவர் இந்த ஊரிலுள்ள தெய்வம் பொய் சொல்வோர் உயிரைப் பலியாகக் கொள்ளும் என்று குறிப்பிடுகிறார். <ref>நறு விரை தெளித்த நாறுஇணர் மாலை, பொறி வரி இன வண்டு ஊதல கழியும், உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம்,பழம் பல் நெல்லின் வேளூர்வாயில், (அகநானூறு 166)</ref>
 
ஒன்பது கிரகங்களுள் ([[நவக்கிரகம்]]) ஒன்றான [[புதன் (நவக்கிரகம்)|புதன்]] கிரகத்தையும் அதனுடன் அங்கராதனையும் சேர்த்து வழிபடும் தளமாகும். [[செவ்வாய் (நவக்கிரகம்)|அங்காரகன்]] [[தொழு நோய்|தொழுநோயை]] குணப்படுத்தும் வல்லமை கொண்ட கடவுளாக நம்பப்படுகின்றது. [[நாடி சோதிடம்|நாடி சோதிடர்கள்]] நிறைந்திருக்கும் புகழ்பெற்ற இடமாகும்.
 
இக்கோயில் [[சிதம்பரம்|சிதம்பரத்திலிருந்து]] 22 கிலோமீட்டர் தொலைவிலும், [[தஞ்சாவூர்|தஞ்சையிலிருந்து]] 110 கிலோமீட்டர் தொலைவிலும் மற்றும் [[மயிலாடுதுறை|மயிலாடுதுறையிலிருந்து]] 16 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இத்தலத்தை தொடர்வண்டி மூலம் [[மயிலாடுதுறை|மயிலாடுதுறையை]] அடைய [[மைசூர்|மைசூரிலிருந்து]] மைசூர் விரைவுத் தொடர்வண்டி (வழி) [[பெங்களூர்]], [[சேலம்]], [[ஈரோடு]], [[திருச்சி]], [[தஞ்சாவூர்]] மற்றும் [[கும்பகோணம்]] மார்க்கமாக [[மயிலாடுதுறை|மயிலாடுதுறையை]] அடையலாம்.
376

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1670174" இருந்து மீள்விக்கப்பட்டது