"மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,275 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
==கருவி நூல்== கற்பகவல்லி நாயகி மாலை, மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம்,
சி (==கருவி நூல்== கற்பகவல்லி நாயகி மாலை, மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம்,)
==தொன்னம்பிக்கைகள்==
திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலத்திலே, சிவனேசர் என்ற சைவர், தனது மகளான பூம்பாவை என்பவளைச் சம்பந்தருக்கு மணம் முடித்துக்கொடுக்க எண்ணியிருந்தார். ஆனால், ஒரு நாள் [[பாம்பு]] தீண்டி அப்பெண் இறந்து போகவே, அப்பெண்ணை எரித்துச் சாம்பலை ஒரு பாத்திரத்தில் இட்டுப் பாதுகாத்து வந்தார். சம்பந்தர் மயிலாப்பூர் வந்தபோது, சிவனேசர் அவரைச் சந்தித்து நிகழ்ந்த சம்பவங்களைக் கூறியதுடன், பெண்ணின் சாம்பல் கொண்ட பாத்திரத்தையும் அவரிடம் கொடுத்தார். சம்பந்தர் அப் பாத்திரத்தைக் கபாலீசுவரர் முன் வைத்து ஒரு தேவாரப் பதிகம் பாடி, அப்பெண்ணை உயிர்பெற்று எழ வைத்ததாகவும், அவளை அங்கேயே கோயிலில் தொண்டாற்றுமாறு சம்பந்தர் கூறிச் சென்றதாகவும் பழ நம்பிக்கை. இன்றைய கபாலீசுவரர் கோயிலிலும் இப் பூம்பாவைக்கு ஒரு சிறு கோயில் இருப்பதைக் காணமுடியும். இக் கோயிலிலுள்ள நவராத்திரி மண்டபத்தில் பூம்பாவை வரலாறு, சுண்ணத்திலான [[சிலை]]கள் மூலம் விளக்கப்பட்டிருக்கின்றது.
 
==திருமயிலை கோவில் இலக்கியங்கள்==
திருமயிலை தொடர்பான இலக்கியங்கள் முப்பதுக்கும் மேற்பட்டவைகள் ஆகும். அவை பல ஆய்வறிஞர்களால் விவரித்து எழுதப்பட்டுள்ளன. உலா, கலம்பகம், அந்தாதி, இரட்டை மணி மாலை , குறுங்கழி நெடில் , மல்லிகைப் பா முதலிய பல்வேறு வகை இலக்கியங்கள் திருமயிலைக்கு உள்ளன.
டாக்டர் உ.வே.சா அவர்கள் தாண்டவராயக் கவிராயர் இயற்றிய திருமயிலை யமக அந்தாதி என்ற நூலை 1936இல் வெளியிட்டுள்ளார். அதன் முன்னுரையில் இவ்வந்தாதியே அன்றி இத்தலம் சம்பந்தமாக வேறு சில தமிழ்ப் பிரபந்தங்களுள் இப்பொழுது தெரிந்தவை என எட்டு நூல்களைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்றாகிய கபாலீஸ்வரர் பஞ்சரத்னம் என்ற நூலை டாக்டர் உ.வே.சா. அவர்களே 1932இல் முன்னமேயே வெளியிட்டார். யமக அந்தாதி முன்னுரையுள் குறிப்பிட்டுள்ள பட்டியலில் [[கற்பகவல்லி நாயகி மாலை]] என்ற நூலும் ஒன்றாகும்.
 
==கோவிலின் படங்கள்==
 
==வெளியிணைப்புகள்==
* [http://temple.dinamalar.com/new.php?id=628 அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்]
*[http://www.mylaikapaleeswarar.com/English/Index.htm கோவில் இணையதளம்]
*[http://www.chennaionline.com/toursntravel/placesofworship/kapaleeswarar.asp சென்னைஆன்லைன் கட்டுரை ]
*[http://www.kapaleeswaram.in/ Temple trust name]
 
==கருவி நூல்==
கற்பகவல்லி நாயகி மாலை, மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், முதற்பதிப்பு 2003
 
[[பகுப்பு:சென்னை மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]
5,048

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1670577" இருந்து மீள்விக்கப்பட்டது