புலனறிவாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 39:
குறிப்பாக, அறிஞர் ஜான் லாக் கூற்றுப்படி, அறிவு( knowledge ) என்பது மனிதனுக்கு அவன் படும் பாட்டுக்குப் (படு - experience(v), பாடு - experience(n), அனுபவம்) பிறகே வருகின்றது. எடுக்காட்டாக, புளி புளிக்கும் என்பது புளியைச் சுவைத்த பின்னரே தெரிய வரும், புளி புளிக்கும் என்பது அதைச் சுவைக்கும் முன்னரே தெரிய வாய்ப்பில்லை. புலன்களினால் உணரப்படுபவை மனத்துக்குள் சென்று "வெள்ளைத்தாளில் எழுதிய எழுத்துக்கள்" போல பதிந்து விடுகின்றன.
நம் மனத்தில் உள்ள அறிவு இரண்டு வகையாகப் படும்: ஒன்று புலனறிவு( knowledge through sensation), மற்றொன்று சிந்தனையறிவு(knowledge through reflection). புலனறிவு என்பது புலன்கள் புற உலகத்தில் நடக்கின்ற நிகழ்ச்சிகளால் தாக்கப்பட்டு, அந்தத் தாக்கம் மனத்துக்குள் சென்று பதிவதனால் ஏற்படுகின்றது. (தேன் இனிக்கும், முள் குத்தும், என்பன புலனறிவே.) சிந்தனை அறிவு என்பது '''சிந்தித்து'''ப் பார்ப்பதால் மனத்தில் தோன்றும் அறிவு ஆகும். ( ஓ(make sound) --> ஓது(chant, read, learn) --> வேது(knowledge) --> வித்து (வித்தை - அறிவு, skill) --> சித்து (அறிவு,knowledge ) --> சிந்தி (think, create knowledge ) என்று [https://en.wikipedia.org/wiki/Devaneya_Pavanar பாவாணர்] கூறுவார்.) எடுத்துக் காட்டாக, இரு இணை கோடுகளை வரைந்து, அவற்றை எல்லையில்லாமல் (infinitely) நீட்டிக் கொண்டே போனாலும், அவை ஒருபோதும் ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்வதே இல்லை. இது ஒரு சிந்தனை அறிவு. ஏனெனில், ஒரு கோட்டை எல்லை இல்லாமல் நீட்டி கொண்டே போவது என்பது நாம் நடை முறையில் காண்பது அன்று. ஒரு குறிப்பிட்ட அளவுள்ள இணை கோடுகள் (parallel lines of finite length) ஒன்றுகொன்று வெட்டி கொள்ளாது என்று மட்டும் தான் நமக்குத் தெரியும்.(இது
அறிஞர் ஜான் லாக் அவர்களின் கூற்றுப்படி, அறிவு பிரித்து அறியக்கூடிய ஒரு கூட்டுப் பொருளாக இருக்கலாம், இதைக் கூட்டறிவு எனலாம். அல்லது, அறிவு பிரிக்கவியலாத ஒன்றாகவும் இருக்கலாம், இதைத் தனியறிவு எனலாம். எடுத்துக் காட்டாக, அணு என்பது கூட்டறிவு. எதிர்மின்னி (electron) என்பது தனியறிவு.
|