தூய கன்னி மரியா (கத்தோலிக்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 35:
[[இயேசு கிறித்து|இயேசு]]வுக்கு பன்னிரண்டு வயது ஆனபோது, மரியாவும் யோசேப்பும் இயேசுவைக் கூட்டிக்கொண்டு பாஸ்கா விழாவைக் கொண்டாட [[எருசலேம்]] சென்றனர். அப்போது இயேசு ஆலயத்திலேயே தங்கிவிட்டார். மரியாவும் யோசேப்பும் மூன்று நாட்கள் அங்கும் இங்கும் அலைந்து அவரைக் கண்டுபிடித்தனர். அவர்களோடு வீடு திரும்பிய இயேசு பெற்றோருக்கு பணிந்து நடந்தார். இயேசு யோசேப்புக்கும், மரியாவுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்தார். திருக்குடும்பத்தின் தலைவியான மரியா யோசேப்புக்கு நல்ல மனைவியாகவும், இயேசுவுக்கு நல்ல தாயாகவும் விளங்கினார்.மரியாவுக்கு நல்ல கணவராகவும், இயேசுவுக்கு சிறந்த வளர்ப்பு தந்தையாகவும் இருந்த யோசேப்பு தனது முதுமையில் இயேசுவும் மரியாவும் அருகில் இருக்க பாக்கியமான மரணம் அடைந்தார். அதன்பின் சிறிது காலம் வரை இயேசு தச்சுத்தொழில் செய்துவந்தார்.
 
=== கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தாய் ===
[[மகனாகிய கடவுள்|இறைமகன்]] இயேசு தனது முப்பதாம் வயதில், [[திருமுழுக்கு யோவான்|யோவானிடம்]] [[திருமுழுக்கு]] பெற்று தனது இறையரசு பணியைத் தொடங்கினார். இயேசுவின் பணிவாழ்வில் மரியாவும் அவரைப் பின்தொடர்ந்தார். இயேசு கிறிஸ்து செய்த முதல் புதுமையே மரியாவின் பரிந்துரையால்தான் நடைபெற்றது. இயேசுவின் பெண் சீடர்களுள் ஒருவராக மரியாவும் இருந்தார். இயேசுவின் சிலுவைப் பாடுகளிலும் மரியா பங்கேற்றார். சிலுவையின் அடியில் வியாகுலத் தாயாக நின்ற மரியாவை இயேசு தனது சீடர்கள் ([[கிறித்தவர்|கிறிஸ்தவர்]]கள்) அனைவருக்கும் தாயாகத் தந்தார். இயேசுவின் உயிர்ப்பு, [[இயேசுவின் விண்ணேற்றம்|விண்ணேற்றம்]] ஆகியவற்றுக்கு பிறகு இயேசுவின் சீடர்கள் அனைவரும் மரியாவின் வழிகாட்டுதலின்படியே வாழ்ந்து வந்தனர். தூய ஆவி திருத்தூதர்கள்மீது பொழியப்பட்ட வேளையில் மரியாவும் அவர்களோடு இணைந்து இறைவேண்டலில் ஈடுபட்டிருந்தார். திருத்தூதர்கள் ஒவ்வொருவரும் பல்வேறு நாடுகளுக்கு நற்செய்தி அறிவிக்க சென்றபின் திருத்தூதர் [[யோவான் (திருத்தூதர்)|யோவானின்]] பாதுகாப்பில் மரியா வாழ்ந்து வந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/தூய_கன்னி_மரியா_(கத்தோலிக்கம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது