"தம்பிலுவில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

116 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
==கல்வி==
கல்விக்குப் புகழ்பெற்ற கிழக்கிலங்கைக் கிராமங்களில் இது ஒன்றாகும். முன்பு இங்கு குருகுலக் கல்வி முறையே காணப்பட்டதாகவும், அந்த மரபின் தொடர்ச்சியே கப்புகனார் கண்ணப்பர் (17ஆம் நூற்றாண்டு, மழைக்காவியம் பாடியவர்), கணபதி ஐயர் ([[கண்டி இராச்சியம்|கண்டியை]] இவர் காலத்தில் ஆண்ட நரேந்திரசிங்க மன்னனின் (1707-1739) அரசவையை அலங்கரித்தாரென்று இவர் பாடிய "நரேந்திரசிங்கன் பள்ளு" நூலைச் சான்று காட்டுவர்.), பின் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் கற்பித்த பண்டிதர் குஞ்சித்தம்பி (19ஆம் நூற்றாண்டு), மட்டக்களப்பின் முதலாவது நாவலாசிரியராக வருணிக்கப்படும் உவில்லியம்பிள்ளை என்று பெரும்புலவர் பரம்பரை ஒன்று, இவ்வூரில் உருவாகக் காரணமானது என்று கூறுவதுண்டு. <br>
 
1877ஆமாண்டு மெதடிஸ்த திருச்சபையினரால் ஆரம்பிக்கப்பட்ட மட்/ மெதடிஸ்தமிசன் ஆண்கள் பாடசாலை (இன்றைய சரஸ்வதி வித்தியாயலயம்) இவ்வூருக்கு நவீன கல்வியை அறிமுகப்படுத்திய பெருமை கொண்ட பாடசாலை. பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் ஆங்கிலேய மிஷனரிகளால் முன்னெடுக்கப்பட்ட "பெண்களுக்கும் கல்வி" என்ற திட்டமானது, இவ்வூரில் 1879ஆமாண்டு ஆரம்பிக்கப்பட்ட 78 மாணவிகளைக் கொண்ட பெண்கள் பாடசாலை மூலம், (இன்றைய கலைமகள் வித்தியாலயம்) மட்டக்களப்பு பகுதியில் வெற்றி பெற்றுவிட்டதாக, அக்கால திருச்சபைக் குறிப்புகளில் காணக் கிடைக்கிறது. <ref> ஒளிவிழா மலர், 2012, திருக்கோவில் மெதடிஸ்த திருச்சபை வெளியீடு </ref> [[தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம்]] இப்பகுதியில், கல்வியிலும் விளையாட்டிலும் இன்றும் பெயர்சொல்லும் பலரை உருவாக்கிய - உருவாக்குகின்ற பாடசாலையாகத் திகழ்கிறது. இவ்வூரிலுள்ள ஏனைய பாடசாலைகள்:
[[தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம்]] இப்பகுதியில், கல்வியிலும் விளையாட்டிலும் இன்றும் பெயர்சொல்லும் பலரை உருவாக்கிய - உருவாக்குகின்ற பாடசாலையாகத் திகழ்கிறது. இவ்வூரிலுள்ள ஏனைய பாடசாலைகள்:
 
*[[தம்பிலுவில் அருணோதய வித்தியாலயம்]]
*[[தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலயம்]]
*[[தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம்]]
*[[தம்பிலுவில் அருணோதய வித்தியாலயம்]]
*[[தம்பிலுவில் கனக நகர் வித்தியாலயம்]]
*[[தம்பிலுவில் முனையூர் அ.த.க. பாடசாலை]]
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.thambiluvil.info தம்பிலுவில் பற்றிய செய்திகள் மற்றும் தகவல்கள்வலைத்தளம் ]
*[http://www.thirukkovil.com திருக்கோவில் இணையதளம்]
*[http://www.thambiluvil.info/2011/06/blog-post_14.html தம்பிலுவில்2011இல் இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பான கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி உற்சவம் வீடியோ காணொளி]
*[http://www.thambiluvil.info தம்பிலுவில் பற்றிய செய்திகள் மற்றும் தகவல்கள் ]
*[http://www.thambiluvil.info/2011/06/blog-post_14.html தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி உற்சவம் வீடியோ ]
 
[[பகுப்பு:இலங்கை நகரங்கள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1673055" இருந்து மீள்விக்கப்பட்டது