இறைவனின் தாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 23:
 
"இயேசுவிடம் இறைத்தன்மை இல்லை; அவர் வெறும் மனிதர் மட்டுமே" என்ற நெஸ்தோரியசின் போதனைப் பற்றி ஆராய்ந்து முடிவெடுக்க, கி.பி.431ஆம் ஆண்டு [[எபேசு]] நகரில் பொதுச்சங்கம் ஒன்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற ஆயர்கள் நெஸ்தோரியசின் போதனை தவறானது எனக் கண்டித்ததுடன், "இயேசுவில் இறைத்தன்மையும் மனிதத்தன்மையும் முழுமையாக குடிகொண்டிருக்கின்றன. எனவே, கன்னி மரியா இறைவனின் தாயே!" என்ற விசுவாசக் கோட்பாட்டை வெளியிட்டனர்.
 
== விழாக்கள் ==
''மரியா இயேசுவின் தாய்'' என்பதை சிறப்பிக்கும் [[இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு]], [[கிறித்துமசு|இயேசுவின் பிறப்பு]], [[இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல்]] ஆகிய விழாக்கள் பொதுவாக [[கத்தோலிக்க திருச்சபை]], [[கிழக்கு மரபுவழி திருச்சபை]], [[ஆங்கிலிக்க ஒன்றியம்]], [[லூதரனியம்|லூதரனிய திருச்சபை]] உள்ளிட்டவற்றில் கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக [[முக்கால கன்னி|கன்னி மரியா]] '''இறைவனின் தாய்''' என்ற பெருவிழாவை [[கத்தோலிக்க திருச்சபை]] புத்தாண்டு நாளில் (ஜனவரி 1) சிறப்பிக்கிறது.
 
[[கிழக்கு மரபுவழி திருச்சபை]]யில் அக்டோபர் 1ந்தேதி கொண்டாடப்படும் [[முக்கால கன்னி|எப்பொழுதும் கன்னி]]யான [[மரியாவின் பாதுகாவல்|இறையன்னையின் பாதுகாவல்]] விழா, மரியா '''இறைவனின் தாய்''' என்பதை சிறப்பாக நினைவுகூர்கிறது. மேலும் பல விழாக்களும் இறையன்னையின் பெயரில் சிறப்பிக்கப்படுகின்றன. [[லூதரனியம்|லூதரனிய திருச்சபை]]யில், '''மரியா நம் ஆண்டவரின் தாய்''' என்ற விழா ஆகஸ்ட் 15ந்தேதி கொண்டாடப்படுகிறது.
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இறைவனின்_தாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது