மா. இராசமாணிக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
மீண்டும் தமையனார் இராமகிருட்டிணருக்கு நன்னிலத்திலிருந்து தஞ்சாவூருக்குப் பணி மாற்றலாகிய நிலையில் அங்கு தம் படிப்பைத் தொடர விரும்பினார் இராசமாணிக்கனார். ஆனால் மாணிக்கனார் படிப்பு பலமுறை தடைபட்டதால் அவரை ஒரு தையல் கடையில் அவரது அண்ணன் வேலைக்குச் சேர்த்து விட்டார். ஆனால் படிப்பார்வம் கொண்ட இராசமாணிக்கனாரின் கல்வி [[தஞ்சாவூர்]] புனித பீட்டர் பள்ளித் தலைமையாசிரியரின் பேருதவியால் தொடர்ந்தது. பள்ளியில் முதல் மாணவராக வந்ததால் இவரின் கல்வி தடையின்றி தொடர்ந்தது.
 
இவரது உயர்நிலைக் கல்வியின் போது இவரது அண்ணனுக்கு மீண்டும் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர மாநிலத்திற்கு]] பணிமாற்றம் ஆனது. அவர் அனுப்பிய பணம் கல்வி செலவுக்கு போதாததால் இவர் இராண்டாம்இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு தனிப்பாடம் நடத்தி அதில் வரும் வருவாயை வைத்து கல்வியைத் தொடர்ந்தார்.
 
[[தஞ்சாவூர்]] பள்ளியின் பேராசிரியரான கரந்தை கவியரசு [[ரா.வேங்கடாசலம் பிள்ளை]] என்பவராலும் அவரின் உதவியால் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர்களான [[உமாமகேசுவரம்பிள்ளை]], [[ந.மு.வேங்கடசாமி நாட்டார்]], [[உ.வே.சாமிநாதையர்]], [[ரா.இராகவையங்கார்]] போன்ற தமிழறிஞர்களாலும் இவரின் தமிழார்வமும் சமய ஆர்வமும் நெறிப்படுத்தப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/மா._இராசமாணிக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது