2014 வட ஈராக் தாக்குதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
 
==பின்புலம்==
2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அரசுப் பாதுகாப்புப் படையினருக்கும் ''ஐ.எஸ்.ஐ.எஸ்'' (Islamic State in Iraq and the Levant ) கிளர்ச்சியாளர்களுக்குமிடையே சண்டை நடைபெற்று வருகிறது. இத்தாக்குதல்களானது ஈராக்கின் மேற்குப் பகுதியெங்கும் பரவியது. 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ''ஐ.எஸ்.ஐ.எஸ்'' (Islamic State in Iraq and the Levant ) கிளர்ச்சியாளர்கள் ''பல்லுஜா'' (Fallujah) மற்றும் ''ரமாடி'' (Ramadi) நகரங்களைக் கைப்பற்றினர்.<ref>{{cite news|title=Iraq's Fallujah falls to 'Qaeda-linked' militants|url=http://www.dailystar.com.lb/News/Middle-East/2014/Jan-04/243100-fallujah-outside-iraq-government-control-security-official.ashx#axzz2oNa3sbT8|accessdate=10 June 2014|agency=Daily Star|date=4 January 2014}}</ref> இதனால் ''அன்பார்'' (Anbar) மாகாணத்தின் பெரும்பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது. இதைத் தொடர்ந்து ஈராக்கிய ராணுவம் இப்பகுதியில் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் ''சமாரா'' (Samarra) நகரை ஜூன் ஐந்தாம் தியதி இராணுவம் மீண்டும் கைப்பற்றியது.<ref>{{cite news|url=http://news.xinhuanet.com/english/world/2014-06/05/c_126584362.htm|title=
80 killed in Iraq as security forces re-take city of Samarra|publisher=Xinhua|date=5 June 2014}}</ref> ஆனால் 'ஐ.எஸ்.ஐ.எஸ்'' (Islamic State in Iraq and the Levant ) கிளர்ச்சியாளர்களுக்கான ஆயுத உதவிகள் பக்கத்து நாடான [[சிரியா]]விலிருந்து கிடைப்பதால்<ref name=libe>{{cite news|title=Une province irakienne entière aux mains des jihadistes|url=http://www.liberation.fr/monde/2014/06/10/la-deuxieme-plus-grande-ville-d-irak-aux-mains-des-insurges_1037307|accessdate=10 June 2014|agency=AFP|publisher=Liberation|date=10 June 2014|ref=lib}}</ref> கிளர்ச்சியாளர்கள் தீவிரமாக நிலை கொண்டுள்ளனர்.
 
ஜூன் மாதத் தொடக்கத்தில் கிளர்ச்சியாளர்கள் ஈராக்கின் மத்திய மற்றும் வடக்குப் பகுதியில் முன்னேறினர். இதைத் தொடர்ந்து அவர்கள் ''பல்லுஜா'' (Fallujah ), ''ஹார்மா'' (Garmah), ''ஹடித்தா'' ( Haditha), ஜுர்ஃப் அல் சாஹர்'' (Jurf Al Sakhar), ''அனா'' (Anah), ''க்வேய்ம்'' (Qa'im), ''அபு கிரகேப்'' (Abu Ghraib) மற்றும் அன்பார் பிரதேசத்தின் பல பகுதிகளை அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.<ref name="iswiraq.blogspot.com">{{cite news|title=Iraq Update #42: Al-Qaeda in Iraq Patrols Fallujah; Aims for Ramadi, Mosul, Baghdad|url=http://iswiraq.blogspot.com/2014/01/iraq-update-42-al-qaeda-in-iraq-patrols.html|accessdate=5 January 2014|newspaper=Institute for the Study of War}}</ref>
 
==மோசுல் வீழ்ச்சியும் கிர்குக் முன்னேற்றமும்==
2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தியதி [[சுன்னி இசுலாம்|சுன்னி]] பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் ''மோசுல்'' நகரைத் தாக்கினர். இரவு முழுவதும் நடந்த இத்தாக்குதலுக்குப் பின்னர். ஈராக்கின் ராணுவப்படையினர் தப்பி ஓடினர். எனவே ஜூன் 10 ஆம் தியதி இந்நகரம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.<ref name=nyt>{{cite news|last1=Fahim|first1=Kareem|last2=Al-Salhy|first2=Suadad|title=Sunni Militants Drive Iraqi Army Out of Mosul|url=http://www.nytimes.com/2014/06/11/world/middleeast/militants-in-mosul.html|accessdate=10 June 2014|work=[[The New York Times]]|date=10 June 2014}}</ref> இதைத்தொடர்ந்து [[அமெரிக்கா]] இராணுவத்தின் முக்கிய மையமாக விளங்கிய ''மோசுல் சர்வதேச விமான நிலையமும்'' கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இங்கிருந்த விமானங்களும் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டன. மேலும் 2,400 குற்றைவாளிகளை சிறையிலிருந்தும் காவல் நிலையத்திலிருந்தும் விடுவித்ததாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர்.<ref name=wapo>{{cite news|last1=Sly|first1=Liz|last2=Ramadan|first2=Ahmed|title=Insurgents seize Iraqi city of Mosul as troops flee|url=http://www.washingtonpost.com/world/insurgents-seize-iraqi-city-of-mosul-as-troops-flee/2014/06/10/21061e87-8fcd-4ed3-bc94-0e309af0a674_story.html?hpid=z1|accessdate=10 June 2014|work=[[The Washington Post]]|date=10 June 2014}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/2014_வட_ஈராக்_தாக்குதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது