நடுகல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
===சங்ககாலத்தில் நடுகல்===
 
மழவர் மணி கட்டிய கடிகை வேலைக் கையில் வைத்துக்கொண்டு ஆனிரைகளை மீட்டுவருவர். அப்போது வில்லெய்து வீழ்த்தப்பட்டால் அந்த மறவனுக்குகோவலருக்கு நடுகல் நிறுத்தி வழிபடுவர். முகத்திலும் மார்பிலும் விழுப்புண்களைப் பெற்று, வீரத்தோடு முன்னின்று,பொருதுபட்ட வீரர்க்கு, அவர் தம் பீடும் பெயரும் எழுதிய நடுகற்களை நிறுவி, பூவும் புகையும் காட்டி, சிறப்பு செய்தல் வழக்கம்.இது நடுகல் வணக்கம் எனப்பட்டது. அக்காலத்து நிறுவப்பெற்று மண்ணில் புதையுண்ட வீர நடுகற்கள் இக்காலத்து கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களால் வெளிக்கொணரப்பட்டு நம்மிடையே நிலவுகின்றன.
 
நம் பண்டைய தமிழர்கள் வெட்சி கரந்தைப் போர்களில் ஈடுபட்ட வீரர்கள் வெற்றியோடு மீண்டு வந்தால் உண்டாட்டு என்பதை நிகழ்த்திக் கொண்டாடிப் போற்றினர். போரில் இறந்தால் அவ்வீரர்களுக்கு நடுகல் நட்டு வணங்கி வழிபட்டனர். சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள நடுகல் பற்றிய செய்திகள் அனைத்தும் போரில் வீரமரணம் அடைந்த ஆடவர்களின் நினைவைப் போற்றி வணங்குவதற்காக நடப்பட்டகற்களைப் பற்றிய தாகவே உள்ளன. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு நடுகல் நட்டுக்கோயில் அமைத்து வழிபாடு நிகழ்த்த ஏற்பாடு செய்ததனைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. பெண்களுக்கு நடுகல் நடப்பட்ட செய்தி சங்க இலக்கியங்களில் காணப்படவிலலை. நடுகல் தெய்வமாக வணங்கப்பட்டதனை பண்டைய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. "கல்லே பரவினல்லது நெல்லுகுத்தப் பரவும் கடவுளும் இலவே "<ref>[[மாங்குடி மருதனார்]] [[புறநானூறு]].</ref> என்பது மாங்குடி மருதனாரின் கூற்றாகும்
"https://ta.wikipedia.org/wiki/நடுகல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது