கருத்தரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 79:
 
== தாயில் நிகழும் மாற்றங்கள் ==
கருத்தரிப்பின்போது தாயில் பல [[உடற்கூற்றியல்]], [[உளவியல்]] மாற்றங்கள் நிகழ்கின்றன. உடற்கூற்றியலில் நிகழும் மாற்றங்களே கூட உளவியல் மாற்றங்களுக்கு இட்டுச் செல்லும். [[பெண்]]ணின் உடலில் நிகழும் மாற்றங்கள் அனைத்தும் [[முளையம்]], அல்லது [[முதிர்கரு]]வைச் சிறந்த முறையில் உடலினுள் வைத்துப் பராமரிப்பதற்கான ஒழுங்குகளாக இருக்கும். இந்த மாற்றங்கள் சாதாரணமான உடற்கூற்றியல் மாற்றங்களே. இவை [[சுற்றோட்டத் தொகுதி]], [[வளர்சிதைமாற்றம்]], [[சிறுநீர்த்தொகுதி]], [[மூச்சியக்கம்]] போன்றவற்றை உள்ளடக்கிய மாற்றங்களாக இருப்பதுடன், மகப்பேற்றுச் சிக்கல்கள் ஏதாவது ஏற்படுகையில், அப்போது மிக முக்கியமானவையாகவும் இருக்கின்றன.<br /><br />
 
கருத்தரிப்பில் உருவாகியிருக்கும் முளையம் அல்லது முதிர்கருவானது தாயின் [[மரபியல்]] கூறுகளிலிருந்து வேறுபட்டிருப்பதனால், இந்த கருத்தரிப்பானது, மரபுக் கூறுகள் வேறுபட்ட இருவரிடையே வெற்றிகரமாகச் செய்யப்படும், [[உயிரணு]], [[இழையம்|இழைய]] அல்லது [[உறுப்பு மாற்று|உறுப்பு மாற்றல்]] (cell, tissue or organ transplantation) போன்று கருதப்படும்<ref name=clark>{{cite journal |author=Clark DA, Chaput A, Tutton D |title=Active suppression of host-vs-graft reaction in pregnant mice. VII. Spontaneous abortion of allogeneic CBA/J x DBA/2 fetuses in the uterus of CBA/J mice correlates with deficient non-T suppressor cell activity |journal=J. Immunol. |volume=136 |issue=5|pages=1668–75 |year=1986 |month=March |pmid=2936806 |url=http://www.jimmunol.org/cgi/pmidlookup?view=long&pmid=2936806}}</ref>. இத்தகைய வெற்றிக்குக் காரணம், கருத்தரிப்பின்போது, [[தாய்வழி நோயெதிர்ப்புத் தாங்குதிறன்]] (Maternal immune tolerance) அதிகரிப்பதாகும். ஆனால் வெளி இழையத்தை ஏற்கும் இந்த இயல்பானது, [[நோய்த்தொற்று]]க்களின்போது, நோயை ஏற்கும் தன்மையும், [[நோய்|நோயின்]] தீவிரம் அதிகரிக்கவும் காரணமாகிவிடுகின்றது.
===மூன்று பருவங்களில் நிகழும் மாற்றங்கள்===
"https://ta.wikipedia.org/wiki/கருத்தரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது