கருத்தரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 79:
 
== தாயில் நிகழும் மாற்றங்கள் ==
கருத்தரிப்பின்போது தாயில் பல [[உடற்கூற்றியல்]], [[உளவியல்]] மாற்றங்கள் நிகழ்கின்றன. உடற்கூற்றியலில் நிகழும் மாற்றங்களே கூட உளவியல் மாற்றங்களுக்கு இட்டுச் செல்லும். [[பெண்]]ணின் உடலில் நிகழும் மாற்றங்கள் அனைத்தும் [[முளையம்]], அல்லது [[முதிர்கரு]]வைச் சிறந்த முறையில் உடலினுள் வைத்துப் பராமரிப்பதற்கான ஒழுங்குகளாக இருக்கும். இந்த மாற்றங்கள் சாதாரணமான உடற்கூற்றியல் மாற்றங்களே. இவை [[சுற்றோட்டத் தொகுதி]], [[வளர்சிதைமாற்றம்]], [[சிறுநீர்த்தொகுதி]], [[மூச்சியக்கம்]] போன்றவற்றை உள்ளடக்கிய மாற்றங்களாக இருப்பதுடன், மகப்பேற்றுச் சிக்கல்கள் ஏதாவது ஏற்படுகையில், அப்போது மிக முக்கியமானவையாகவும் இருக்கின்றன. கருத்தரிப்புக் காலமானது மூன்று பருவங்களாகப் பிரிக்கப்பட்டுப் பார்க்கப்படுகின்றது.<br /><br />
 
கருத்தரிப்பில் உருவாகியிருக்கும் முளையம் அல்லது முதிர்கருவானது தாயின் [[மரபியல்]] கூறுகளிலிருந்து வேறுபட்டிருப்பதனால், இந்த கருத்தரிப்பானது, மரபுக் கூறுகள் வேறுபட்ட இருவரிடையே வெற்றிகரமாகச் செய்யப்படும், [[உயிரணு]], [[இழையம்|இழைய]] அல்லது [[உறுப்பு மாற்று|உறுப்பு மாற்றல்]] (cell, tissue or organ transplantation) போன்று கருதப்படும்<ref name=clark>{{cite journal |author=Clark DA, Chaput A, Tutton D |title=Active suppression of host-vs-graft reaction in pregnant mice. VII. Spontaneous abortion of allogeneic CBA/J x DBA/2 fetuses in the uterus of CBA/J mice correlates with deficient non-T suppressor cell activity |journal=J. Immunol. |volume=136 |issue=5|pages=1668–75 |year=1986 |month=March |pmid=2936806 |url=http://www.jimmunol.org/cgi/pmidlookup?view=long&pmid=2936806}}</ref>. இத்தகைய வெற்றிக்குக் காரணம், கருத்தரிப்பின்போது, [[தாய்வழி நோயெதிர்ப்புத் தாங்குதிறன்]] (Maternal immune tolerance) அதிகரிப்பதாகும். ஆனால் வெளி இழையத்தை ஏற்கும் இந்த இயல்பானது, [[நோய்த்தொற்று]]க்களின்போது, நோயை ஏற்கும் தன்மைக்கும், [[நோய்|நோயின்]] தீவிரம் அதிகரிக்கவும் காரணமாகிவிடுகின்றது.
===மூன்று பருவங்களில் நிகழும் மாற்றங்கள்===
கருத்தரிப்புக் காலமானது கிட்டத்தட்ட மூன்று மாதங்களைக் கொண்ட மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது. பிரசவ மருத்துவர்கள், 14 கிழமைகள் கொண்ட முப்பருவங்களாகப் பிரிக்கின்றபோது, மொத்தமாக 42 கிழமைகளைக் கருத்தில் கொள்கின்றனர்<ref>[http://www.collinsdictionary.com/dictionary/english/trimester trimester]. CollinsDictionary.com. Collins English Dictionary – Complete & Unabridged 11th Edition. Retrieved 26 November 2012.
வரி 100 ⟶ 99:
 
===கருப்பகாலத் தொந்தரவுகள்===
கருத்தரிப்பின்போது தாயில் பல [[உடற்கூற்றியல்]], [[உடலியங்கியல்]], [[உளவியல்]] மாற்றங்கள் நிகழ்கின்றன. உடற்கூற்றியலில் மற்ரும் உடலியங்கியலில் நிகழும் மாற்றங்களே கூட உளவியல் மாற்றங்களுக்கு இட்டுச் செல்லும். கருப்பகாலம் முழுமைக்கும் ஒரு பெண் பல்வேறுபட்ட சங்கடங்களை எதிர்நோக்க வேண்டி வரும். [[தூக்கமின்மை]], உட்கார்வதில் ஏற்படும் சிரமம், உணர்ச்சி பூர்வமாக ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் என்று பல்வேறுபட்ட சூழ்நிலைகள் ஏற்படும்.
இவற்றில் முக்கியமான சில தொந்தரவுகள்/சங்கடங்கள்:
*[[குமட்டல்]], [[வாந்தி]] - கருத்தரிப்பின் ஆரம்ப காலங்களில் [[மனித இரையகக் குடற்பாதை]]யில் ஏற்படும் சில மாற்றங்களால் குமட்டல், வாந்தி போன்ற சங்கடங்கள் தோன்றும். பொதுவாக மூன்றாம் மாதம் முடிந்து 4ஆம் மாதம் ஆரம்பிக்கையில் இந்த சங்கடங்கள் இல்லாமல் போகின்றது. குமட்டல் 50-90% மான பெண்களிலும், வாந்தி 25-55% மான பெண்களிலும் ஏற்படும். <ref>{{cite journal | url=http://annals.org/article.aspx?articleid=706161; http://www.ncbi.nlm.nih.gov/pubmed/8257464 | title=Gastrointestinal motility disorders during pregnancy. . | author=Baron TH, Ramirez B, Richter JE | journal=Annals of Internal Medicine | year=1993 | month=March 1 | volume=118 | issue=5 | pages=366–75}}</ref> இதற்குக் காரணம் [[மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி]] என்னும் [[இயக்குநீர்]] அதிகரிப்பாக இருக்கலாம் எனக் கருதப்பட்டாலும், இதில், மாறுபட்ட கருத்துக்கள் உண்டு.<ref>{{cite journal | url=http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3676933/ | title=Nausea and Vomiting of Pregnancy | author=Noel M. Lee, M.D., Sumona Saha, M.D. | journal=Gastroenterol Clin North Am | year=2011 | month=June | volume=40 | issue=2 | pages=309-vii | doi=10.1016/j.gtc.2011.03.009}}</ref>. இந்தத் தொந்தரவு மிக அதிகமாக இருக்குமானால் சில Antihistamine [[மருந்து]]கள் [[மருத்துவர்|மருத்துவரால்]] வழங்கப்படும். [[இஞ்சி]] பயன்படுத்துவதனால் நன்மையுண்டா என்பது பற்றி மிகச் சரியாக அறியப்படாவிடினும், இதன்போது குமட்டல், வாந்தி குறைவதனால் இஞ்சிப் பயன்பாடும் பரிந்துரைக்கப்படுகின்றது.<ref name="nice"/>
"https://ta.wikipedia.org/wiki/கருத்தரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது