கருத்தரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 144:
===தொற்றுக்களிலிருந்து பாதுகாப்பு===
கருத்தரிப்பில் உருவாகியிருக்கும் முளையம் அல்லது முதிர்கருவானது தாயின் [[மரபியல்]] கூறுகளிலிருந்து வேறுபட்டிருப்பதனால், இந்த கருத்தரிப்பானது, மரபுக் கூறுகள் வேறுபட்ட இருவரிடையே வெற்றிகரமாகச் செய்யப்படும், [[உயிரணு]], [[இழையம்|இழைய]] அல்லது [[உறுப்பு மாற்று|உறுப்பு மாற்றல்]] (cell, tissue or organ transplantation) போன்று கருதப்படும்<ref name=clark>{{cite journal |author=Clark DA, Chaput A, Tutton D |title=Active suppression of host-vs-graft reaction in pregnant mice. VII. Spontaneous abortion of allogeneic CBA/J x DBA/2 fetuses in the uterus of CBA/J mice correlates with deficient non-T suppressor cell activity |journal=J. Immunol. |volume=136 |issue=5|pages=1668–75 |year=1986 |month=March |pmid=2936806 |url=http://www.jimmunol.org/cgi/pmidlookup?view=long&pmid=2936806}}</ref>. இத்தகைய வெற்றிக்குக் காரணம், கருத்தரிப்பின்போது, [[தாய்வழி நோயெதிர்ப்புத் தாங்குதிறன்]] (Maternal immune tolerance) அதிகரிப்பதாகும். ஆனால் வெளி இழையத்தை ஏற்கும் இந்த இயல்பானது, தாயில் [[நோய்த்தொற்று]]க்களின்போது, நோயை ஏற்கும் தன்மைக்கும், [[நோய்|நோயின்]] தீவிரம் அதிகரிக்கவும் காரணமாகிவிடுகின்றது. இதனால் [[தொற்றுநோய்]]களை ஏற்படத்தக்கூடிய [[நோய்க்காரணி]]களிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகின்றது.<br />
:''சிறுநீர்வழித் தொற்று'' பெண்களிலேயே அதிகளவில் ஏற்படுவதாகவும், அதில் கர்ப்பிணிப் பெண்கள் மிக அதிகளவில் இத்தொற்றுக்கு உள்ளாகும் வாய்ப்பைக் கொண்டிருப்பவர்களாகவும் அவதானிக்கப்பட்டுள்ளது<ref>{{cite web | url=https://umm.edu/health/medical/altmed/condition/urinary-tract-infection-in-women | title=Urinary tract infection in women | publisher=University of Maryland Medical Center (UMMC) | date=last updated: June 24, 2013 | accessdate=சூன் 13, 2014}}</ref>.<ref name="webmed">{{cite web | url=http://www.webmd.com/women/urinary-tract-infections-7/uti-pregnancy | title=Urinary Tract Infections: From Prevention to Cure, Pregnancy and Urinary Tract Infections | publisher=WebMD | accessdate=சூன் 13, 2014}}</ref> கர்ப்பிணிப் பெண்களில் ஏற்படும் இயக்குநீர் மாற்றமும், கருப்பை பெரிதாவதனால் சிறுநீர்ப்பையில் ஏற்படும் அழுத்தம் காரணமாக் சிறுநீர் முழுமையாக வெளியேறாமல் உள்ளே தங்குவதும், இவர்களில் இத்தொற்றுக்கான வாய்ப்பைக் கூட்டுகின்றது.<ref name="webmed"/>
:உணவு மூலம் ஏற்படக்கூடிய தொற்றுக்கள் பொதுவான சனத்தொகையைவிட, கர்ப்பிணிப் பெண்களில் அதிகரித்துக் காணப்படுகின்றது. இன்ஃபுளுவென்சாவை ஒத்த நோய் அறிகுறிகளைத் தோற்றுவிக்கும் பாக்டீரியா ஒன்றினால் ஏற்படும் [[:en:Listerosis]] என்னும் நோய் தீவிரத்தன்மையைக் காட்டினால், கருச்சிதைவு, செத்துப்பிறப்பு, அல்லது பிறக்கும் குழந்தை தீவிரமான உடல்நலக்குறைவுடன் இருத்தல் போன்ற நிலைகள் தோன்றும்.<ref name="nice1"/>
 
"https://ta.wikipedia.org/wiki/கருத்தரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது